பிப்ரவரி, 11 – அன்று, இலாத்தரன் உடன்படிக்கையின் படி இத்தாலி பேரரசிடமிருந்து வாடிகன் சிட்டி தன்னாட்சி அதிகாரம் பெற்றது.

பிப்ரவரி, 18 – அன்று, முதல் முறையாக ஆஸ்கர் விருது அறிமுகப்படுத்தப்பட்டது.

மே, 18 ஆம் நாள், உலகளாவிய புகழ்பெற்ற வின்வெளி அறிவியலாளர் வெ.இராதாகிருஷ்ணன் அவர்கள் சென்னையில் பிறந்தார்.

செப்டம்பர், 24 – அன்று, அதுவரை வரலாற்றில் இல்லாத அளவிற்கு 12,849,650 பங்குகள் ஒரே நாளில் வர்த்தகம் செய்யப்பட்டதால், பங்கு வர்த்தகர்களிடையே இந்நிகழ்வு மிகப்பெரிய பீதியை ஏற்படுத்தியது, இது, Crash of 1929 என்றும், ‘கருப்பு வியாழன்’ (Black Thursday) என்றும் வர்ணிக்கப்படுகிறது.

இந்தியாவில் குழந்தைத் திருமணத்தைத் தடுக்க சாரதா சட்டம் ஆங்கிலேயர்களால் கொண்டுவரப்பட்டது.

சிதம்பரத்தில், அண்ணாமலை பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது. மற்றும் நூலகம் உருவாக்கப்பட்டது.

லாகூரில் காங்கிரஸ் மாநாடு நடைபெற்றது.

அன்னை தெரேசா அவர்கள் இந்தியா வந்தடைந்து இமயமலை அருகே உள்ள டார்ஜீலிங்கில் தனது துறவற புகுநிலையினருக்கான பயிற்சியினை ஆரம்பித்தார்.

ஜவஹர்லால் நேரு பூர்ண சுயராஜ்யம் பற்றி பேசினார்.

இந்திய குடியரசுத் தலைவரின் தற்போதைய இல்லமா ராஷ்டிரபதி பவன், ஆங்கிலேய தலைமை ஆளுநர்களின் பயன்பாட்டிற்காக கட்டப்பட்டு திறக்கப்பட்டது.

முசோலினி (Benito Mussolini), போப்புடன் லேட்டரன் உடன்படிக்கையை செய்துகொண்டார்.