ஜனவரி, 26 – அன்று லாகூர் காங்கிரஸ் மாநாட்டின் ஏற்பட்ட தீர்மாணத்தின் படி, நாடு முழுவதும் விடுதலை நாளாக கொண்டாடப்பட்டது.

ஜனவரி, 30 – ஆம் நாள் இந்திய தேசிய காங்கிரசு அறிவித்த முழு விடுதலை என்ற விடுதலைப் பிரகடனத்திற்குப் பிறகு ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்து அமைப்பு ரீதியாகச் செய்யப்பட்ட முதல் நடவடிக்கையாகும்.

பிப்ரவரி, 18 – அன்று, கிளைட் டோம்போ என்பவரால் புளூட்டோ குறுங்கோள் கண்டுபிடிக்கப்பட்டது.

மார்ச், 12 – இல் குஜராத் மாநிலத்திலுள்ள தண்டியில் தடையை மீறி உப்பெடுக்கும் நடைப்பயணமாகத் துவங்கியது.

ஏப்ரல், 6 இல், காந்தி தனது சபர்மதி ஆசிரமத்திலிருந்து 23 நாள்கள் 240 மைல் தூரத்திலுள்ள தண்டிக்கு நடை பயணத்தை வழி நடத்தினார், உப்பை உற்பத்தி செய்வதற்கு விதித்த தடையை மீறி வழியில் அவருடன் இந்தியர்கள் பெருமளவு எண்ணிக்கையுடன் இணைந்தனர்.

ஜூலை, 13 – அன்று FIFA World Cup கால்பந்தாட்டப் போட்டியானது உருகுவே நாட்டில் 13 அணிகளுடன் முதன் முதலாக துவங்கியது.

சர்.சி.வி. இராமன் அவர்களுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றார்.

தமிழ்நாட்டின் முதல் வானொளி நிலையம், சென்னையில் தொடங்கப்பட்டது.

காந்தியடிகள் தண்டியாத்திரை மேற்கொண்டார்.

முதல் வட்ட மேசை மாநாடு (சட்ட மறுப்பு இயக்கம் நடைபெற்றதால் காங்கிரஸ் கலந்துகொள்ளவில்லை), இங்கிலாந்திலுள்ள லண்டனில் நடைபெற்றது.

கே.காமரஜர் அலிப்பூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இங்கிலாந்து திரும்பிய சைமன் குழு 1930ல் தனது அறிக்கையை சமர்பித்தது. அதில் இரட்டை ஆட்சி முறையை ஒழித்து, இந்தியர்களுக்கு முழு பிரதிநிதித்துவம் வழங்கப் பரிந்துரை செய்தது.