பிப்ரவரி, 10 – புதுடெல்லி இந்தியாவின் தலைநகராக்கப்பட்டது.

அக்டோபர், 15 – டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் ஜைனுலாப்தீனுக்கும், ஆஷியம்மாவுக்கும் மகனாக இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில், பாம்பன் தீவில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிறிய நகராட்சியான இராமேஸ்வரத்தில் பிறந்தார். இவர் ஒரூ இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்தவர்.

காந்தி – இர்வின் ஒப்பந்தம் நடைபெற்றது. இதனால், சட்டமறுப்பு இயக்கத்தை சட்டமறுப்பு இயக்கத்தை கைவிடுவது என்று முடிவெடுக்கப்பட்டது. மேலும், இரண்டாவது வட்ட மேசை மாநாட்டில் காங்கிரஸ் கலந்து கொள்ளும் என ஒத்துக்கொள்ளப்பட்டது. அதற்கு கைமாறாக, உப்பு சத்தியாகிரகத்தில் கைதானவர்கள் அனைவரையும் விடுதலை சைய்தல் மற்றும் உப்பு வரி சட்டத்தினை திரும்பப் பெற வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

இரண்டாவது வட்ட மேசை மாநாடு நடைபெற்றது. காந்தி கைது செய்யப்பட்டதை அடுத்து, காங்கிரஸ் இம்மாநாட்டில் காங்கிரஸ் இம்மாநாட்டில் கலந்துகொள்வதை தடை செய்தது. இதனால் சட்ட மறுப்பு இயக்கம் மீண்டும் ஆரம்பமானது.

சரோஜினி நாயுடு அவர்கள், காந்திஜி மற்றும் பண்டிட் மாலவியாஜி ஆகியோருடன் இனைந்து வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொண்டார்.

தமிழகத்தின் முதல் பேசும் படமான காளிதாஸ் வெளியிடப்பட்டது.