ஜுலை, 20 அன்று மார்க்கோனி இறந்தார்.

இந்தியாவிலிரிருந்து பர்மா பிரிக்கப்பட்டது.

ஜனசக்தி இதழை ஜீவாணந்தம் தொடங்கினார்

வார்தா கல்வி முறையை மகாத்மா காந்தி பரிந்துரை செய்தார்.

இராஜாஜி சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக பதவியேற்றார்.

தமிழகத்தில் முதன் முதலில் விற்பனை வரி அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்தி எதிர்ப்பு முதல் மாநாடு தமிழ்நாட்டில் நடத்தப்பட்டது.

அக்மார்க் முத்திரைச் சட்டம் இயற்றப்பட்டது.

இந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 11 மாகாணங்களில் 7 மாகாணங்களில் வெற்றி பெற்றது.

மாகாணங்களின் முதலாவது காங்கிரஸ் அமைச்சரவை நடைபெற்றது.

சைமன் குழு பரிந்துரையின் அடிப்படையிலும் வட்ட மேசை மாநாட்டு பேச்சுவார்த்தைகளின் அடிப்படையிலும் இந்திய அரசுச் சட்டம், 1935 இயற்றப்பட்டு 1937ல் இந்தியாவுக்கு மாநில சுயாட்சி வழங்கப்பட்டது.

இத்தாலி, ஜெர்மனி, ஜப்பான் ஆகிய மூன்று நாடுகளும் ரோம் – பெர்லின் – டோக்கியோ ஆச்சு ஒப்பந்தத்தை ஏற்படுத்தின. இது இரண்டாம் உலகப்போருக்கு வித்திட்டது.

தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்ற உண்மையை உலகுக்கு வெளிப்படுத்திய இந்திய அறிவியலாளர் சர் ஜகதீஷ் சந்திர போஸ் இறந்தார்.

சேலம் மாவட்டத்தில் முதன் முதலாக மது விலக்கு அமுலுக்கு வந்தது.

உலகின் முதல் அவசர தொலைபேசி எண் 999 ஆகும். இது பிரிட்டனில் அறிமுகப்படுத்தப்பட்டது.கி.பி. 01 முதல் கி.பி 1000 ஆம் ஆண்டு வரை


கி.பி. 1001 முதல் கி.பி 1100 ஆம் ஆண்டு வரை


கி.பி. 1101 முதல் கி.பி 1400 ஆம் ஆண்டு வரை


கி.பி. 1401 முதல் கி.பி 1500 ஆம் ஆண்டு வரை


கி.பி. 1501 முதல் கி.பி 1600 ஆம் ஆண்டு வரை


கி.பி. 1601 முதல் கி.பி 1700 ஆம் ஆண்டு வரை


கி.பி. 1701 முதல் கி.பி 1800 ஆம் ஆண்டு வரை


கி.பி. 1801 முதல் கி.பி 1900 ஆம் ஆண்டு வரை


கி.பி. 1901 முதல் கி.பி 2000 ஆம் ஆண்டு வரை


2001 ஆம் ஆண்டு முதல் ….