ஜனவரி, 16 – இந்திய எழுத்தாளர் சரத்சந்திர சட்டோபாத்யாயா மரணமடைந்தார்.

ஏப்ரல், 23 – அன்று, புகழ்பெற்ற திரைப்பட பாடகி எஸ்.ஜானகி, ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தில் பள்ளபட்லா என்ற ஊரில் பிறந்தார்.

நவம்பர், 13 – அன்று, மெட்ராஸில் நடைபெற்ற தமிழ்நாடு பெண்கள் மாநாட்டில், பெண் விடுதலைப் போராளி ஈ.வெ.ரா-விற்கு ‘பெரியார்‘ என பட்டம் சூட்டப்பட்டது.

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்களின், மலரும் மாலையும் தொகுதி வெளியானது, அதில் 25 க்கும் மேற்பட்ட குழந்தைப் பாடல்கள், 7 கதைப் பாட்டுகள் இடம்பெற்றிருந்தது.

தமிழக இயற்கை விஞ்ஞானி, நம்மாழ்வார் பிறந்தார்.

ஹிட்லர், இங்கிலாந்து பிரதமர் நிவின் சேம்பர்லைனுடன் முயூனிச் என்ற இடத்தில் செய்து கொண்ட ஒப்பந்தத்தை மீறி செக்கோஸ்லோவோக்கியாவை கைப்பற்றியது இரண்டாம் உலகப்போருக்கு காரணமாயிற்று.