மார்ச், 26 – அன்று முஸ்லீம் லீக்கானது, முஸ்லீம்களுக்கு தனிநாடு வேண்டுமென்ற கோரிக்கையைத் தீர்மானமாக நிறைவேற்றியது.

ஜூன், 10 – அன்று, இரண்டாம் உலகப்போரின் போது, இத்தாலியானது, பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் மீது போர் பிரகடனம் செய்தது.

ஜூன், 30 – முதன் முதலில் இந்தியாவில் போனஸ் வழங்கப்பட்டது.

ஜூலை, 31 – அன்று, ஜாலியன் வாலாபாக் துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்ட மேக்கேல் ஒ. டயரை சுட்டுக் கொன்ற சுதந்திரப் போராட்ட தியாகி உதம் சிங் மறைந்தார்.

அக்டோபர், 24 – அன்று, அமெரிக்காவின் Fair Labour Standard act of 1938 -ன் படி, தொழிலாளர்கள் வாரத்திற்கு 40 மணி நேரம் மட்டுமே வேலை செய்ய வேண்டும் என்ற சட்டம் நடைமுறைக்கு வந்தது.

ஆகஸ்ட் கொடை நடைபெற்றது.

அக்டோபர் மாதம் காந்தியடிகள் தனிநபர் சத்தியாகிரகத்தைத் தொடங்கினார்.

டிசம்பர், 24 – அன்று, சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழவேள் உமாமகேசுவரம் பிள்ளை அவர்கள் விநாயகம் பிள்ளை அவர்களுக்கு கவிமணி என்ற பட்டம் வழங்கினார்.

பூனா ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது.

இந்த ஆண்டு இந்தியாவில் அணுமின்திட்டம் தொடங்கப்பட்டு பின்னர் 1948 ஆம் ஆண்டு டாடா அணு ஆராய்ச்சிக் கழகம் இத்துடன் இணைக்கப்பட்டது.