கி.பி. 1945ஜனவர், 21 ஆம் நாள், ராஷ் பிஹாரி போஸ் அவர்கள் இறந்தார்.

ஏப்ரல், 20 – அன்று, அடால்ப் ஹிட்லர் தற்கொலை செய்து கொண்டார்.

செப்டம்பர், 2 – அன்று, பிரான்ஸிடமிருந்து வியட்நாம் விடுதலை பெற்றது.

அக்டோபர் 24 – ஆம் நாள், ஐக்கிய நாடுகள் சபை, அமெரிக்காவில் உள்ள நியூயார்க்கில் உலக நாடுகளால் தொடங்கப்பட்டது.

வேல்ஸ் பிரபு சிம்லா மாநாட்டைக் கூட்டினார்.

1870 ஆம் ஆண்டு முதல் 1945 ஆம் ஆண்டு வரை ஐரோப்பிய நாடுகளால் பின்பற்றப்பட்ட ஏகாதிபத்தியக் கொள்கையானது புதிய ஏகாதிபத்தியம் என்று அழைக்கப்படுகிறது.

ஆகஸ்ட் 6 மற்றும் 9 ஆம் நாள் ஜப்பானின், ஹிரோஷிமா மற்றும் நாகசாகி ஆகிய நகரங்கள் மீது இரண்டாம் உலகப்போரின் போது அமெரிக்கா அணுகுண்டு வீசி அழித்தது. உலகில் மனிதர்களை அழிக்க ஓரு நாடு இன்னெரு நாட்டின் மீது வீசிய முதல் ஹைட்ரஜன் அணுகுண்டு இதுவெ ஆகும்.

முசோலினி தம் மனைவி கிளாரா பெட்டாசியுடன் சுவிட்சர்லாந்துக்குத் தப்பியோட முற்படுகையில், இத்தாலியின் கோமோ ஆற்றின் அருகில் பார்ட்டிசான்களால் பிடிபட்டு பின் அவரும் அவர் மனைவியும் சுட்டு கொல்லப்பட்டனர்.

இரண்டாம் உலகப்போர் நிறைவுபெற்றது.

இரண்டாம் உலகப் போரின் போது சிறிது காலம் ஜப்பானிய ஆக்கிரமிப்பில் இருந்த இந்தோனேசியா, 1945 இல் தனது விடுதலையை பிரகடனப்படுத்தியது.

இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானியர்களால் சிறிது காலம் ஆக்கிரமிக்கப்பட்ட சிங்கப்பூர் மறுபடியும், ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் வந்தது.

முதன் முதலில் எலக்ட்ரானிக் கணிப்பொறி உருவாக்கப்பட்டது.

திருவாங்கூா் மாகாணத்தில் உள்ள அனைத்து மாநிலங்களையும் ஒன்றிணைத்து ஒருங்கினைந்த கேரள மாநிலம் உருவாக்குவதற்காக ஒரு தீா்மானம் திருவாங்கூா் மாநில காங்கிரசால் நிறைவேற்றப்பட்டது. திருவாங்கூா் மாகாணத்தின் ஆட்சி மொழிகளில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்ட தமிழ்மொழி அதன் அங்கீகாரத்தை இழந்து மலையாளம் மட்டுமே மாநிலத்தின் ஆட்சி மொழியானது. இதனை தமிழா்கள் ஒரு அவமானமாகக் கருதினா்.