கி.பி. 1947பிப்ரவரி, 10 – இத்தாலியிடமிருந்து, லிபியா விடுதலை பெற்றது.

ஏப்ரல், 21 – அன்று, சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களால், ஐ.ஏ.எஸ் டிரைனிங் ஸ்கூல் முதல் பேட்ச் தொடங்கப்பட்டது.

ஆகஸ்ட், 14 – அன்று பிரிட்டிஷ் அரசிடமிருந்து சுதந்திரமடைந்தது.

ஆகஸட், 15 – இந்தியா, ஆங்கிலேயரிடமிருந்து அகிம்சை முறையில் போராடி பூரண சுதந்திரம் அடைந்தது.

ஆகஸட், 15 – ஆம் நாள் இந்திய அரசியலமைப்பு அவையில் வந்தே மாதரம் பாடலைப் சுதேஜா கிருபாலினி அவர்கள் பாடினார்.

அக்டோபர், 27 – ஶ்ரீநகர் விமானநிலையத்தை கைப்பற்ற நினைத்த தீவிரவாதிகளின் ஊடுருவலை முறியடிக்க இந்திய இராணுவ வீரர்கள் போரிட்டு முதன் முறையாக வெற்றி பெற்றனர். இதனை பாராட்டும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் காலாட்படை தினம் அதே நாளில் கொண்டாடப்படுகிறது.

ஆகஸ்டு, 29 – ஆம் நாள், அரசியலமைப்பு வரைவுக்குழு. டாக்டர் அம்பேத்கர் தலைமையில் அமைக்கப்பட்டது.

ஆகஸ்ட், 29 – அன்று இந்திய அரசியலமைப்பை உருவாக்கும் பணி, இந்திய அரசியலமைப்பு மன்றத்தால் தொடங்கப்பட்டது.

செப்டம்பர், 01 – இந்திய நிலையான நேரம் (ஐ.எஸ்.டி – கிரீன்விச் நேரத்தில் இருந்து 5.30 மணிநேரம் அதிகம்) அமலானது.

டாக்டர் உ.வே.சா நூலகம் சென்னையில் துவங்கப்பட்டது.

திருவாங்கூா் மாநிலம் இந்திய யூனியனின் ஒரு பகுதியானது.

கே.காமராஜர் சத்தியமூர்த்தி வீட்டில் இந்திய தேசியக்கொடியை ஏற்றினார்.

இந்தியா ஆங்கிலேயர்களிடமிருந்து அகிம்சை வழியில் போராடி சுதந்திரம் பெற்றது.

அன்றைய வங்காளம், இந்துக்கள் பெரும்பான்மையினராக இருந்த பகுதி மேற்கு வங்காளம் என்றும், இஸ்லாமியரின் பகுதி கிழக்கு வங்காளம் என்றும் பிரிக்கப்பட்டது. இன்றைய வங்கதேசமே அந்த கிழக்கு வங்காளமாகும்.

மூவாலூர் இராமாமிர்தம் அவர்களது அயராத முயற்சியின் விளைவால் சென்னை தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டு, தேவதாசி முறை ஒழிந்தது.

காஷ்மீர் பிரதமராக இருந்தவர் – ஹரிசிங்

உலக அளவில் பொருள்களின் தரத்தை உறுதி செய்வதற்கு உலகத்தர அமைப்பு (ISO) சுவிச்சர்லாந்தின் ஜெனிவாவில் தோற்றுவிக்கப்பட்டது.