ஜனவரி, 02 – அன்று, பாரத ரத்னா, தேசிய திரைப்பட விருது, பத்ம ஶ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷன் விருதுகள் இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது.

மார்ச், 29 – ஆம் தேதி இந்திய அரசு அனுமதி அளித்தபின் இறுதியாக கொல்கத்தாவை தலைமையிடமாகக் கொண்டு தாவரவியல் கள ஆய்வு மையம் (BSI) மாற்றியமைக்கப்பட்டது.

மே, 21 – அன்று, எவரெஸ் சிகரத்தில் ஏறிய முதல் இந்தியப் பெண்ணான பச்சேந்திரி பால் பிறந்தார்.

மே, மாதம் 5 – ம் நாள் வியட்நாம் மக்களுக்கும் பிரான்ஸ் படைக்கும் இடையே நடைபெற்ற நீண்ட கால போரிற்கு பின்னர், பிரெஞ்சு படைத் தளபதியும் கூட்டாளிகளும் சிறைபிடிக்கப்பட்டனர்.

ஜூலை, 21 – ஜெனிவா ஒப்பந்தம் மூலம் வியட்நாம் சுதந்திரத்தை உலக நாடுகள் ஏற்றுக் கொண்டன.

செப்டம்பர், 26 – ஆம் தேதி கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்கள் மறைந்தார். கன்னியாகுமரி மாவட்டம் தேரூரில் நினைவு நிலையம் அமைக்கப்பட்டது.

காமராசர் அவர்கள் அப்போதைய சென்னை மாநில முதலமைச்சர் ஆனார்.

உலகில் முதன் முதலாக பிரான்ஸ் GST -யை அறிமுகப்படுத்தியது.

திருவிதாங்கூர் மாநிலத்திற்கு தேர்தல் நடந்தது.

உணவு கலப்பட தடுப்புச் சட்டம் இயற்றப்பட்டது.