ஜூலை, 01 – இந்தியன் இம்பீரியல் வங்கி (Imperial Bank of India) மாற்றப்பட்டு இந்திய ஸ்டேட் வங்கி (State Bank of India) உருவாக்கப்பட்டது, பின்னர் தேசியமயமாக்கப்பட்டது.

உணவு கலப்பட தடுப்பு விதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டது.

சாகித்ய அகாடமி விருது அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்து திருமண சட்டம் இயற்றப்பட்டது.

இந்திய பாராளுமன்றத்தில் ‘இந்திய குடியுரிமைச் சட்டம்’ நிறைவேற்றப்பட்டது.

அன்னை தெரேசா அவர்கள் நிர்மலா சிசு பவனையும், மாசில்ல இருதய அன்னையின் குழந்தைகள் காப்பகத்தையும் அனாதைக் குழந்தைகளுக்காகவும், வீடற்ற இளையோருக்காகவும் தொடங்கினார்.

ஏ.நேசமணி அவா்கள் திருவாங்கூா் தமிழ் காங்கிரசின் தலைவரானார்.

தமிழகத்தில் பள்ளிகளில் இலவச உணவுத் திட்டம் கொண்டுவரப்பட்டது.

தமிழ்நாடு குத்தகைதாரர் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்டது.