கி.பி. 1956பிப்ரவரி, 16 – சாஃகா அயனியாக்க சமன்பாடு என்ற புகழ்பெற்ற சமன்பாட்டைத் தருவித்த மேகநாத சாஃகா (Megh Nad Saha) இறந்தார்.

மார்ச், 23 – அன்று பாகிஸ்தான் நாடு குடியரசானது.

ஜூலை, 06 – அன்று சிங்களம் இலங்கையின் அதிகாரப்பூர்வ மொழியானது.

ஜூலை, 11 அன்று, புலவரேறு மு.வரதநஞ்சையப்பப் பிள்ளை அவர்கள் புகழுடம்பு எய்தினார்.

செப்படம்ர், 01 – அன்று, இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (LIC) செயல்படத் தொடங்கியது.

செப்டம்பர், 23 – சர்வதேச அணு ஆற்றல் அமைப்பு (International Automic Energy Agency) தொடங்கப்பட்டது. இதன் நோக்கமாக, உலக அமைதிக்காக அணு ஆற்றலின் உபயோகத்தினை அதிகப்படுத்துவதை் கொண்டு தொடங்கப்ட்டது.

செப்டம்பர், 23 – அன்று ஹங்கேரியன் புரட்சியானது, மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்துடன் அதன் தலைநகரான புடாபெஸ்ட் (Budapest) இல் தொடங்கியது.

செப்டம்பர், 25 – ஆம் தேதி அட்லாண்டிக் பெருங்கடலை கடந்த முதலாவது தொலைபேசி கம்பித்திட்டம் DAD-1 நிறுவவப்பட்டது.

நவம்பர், 1 -அன்று – மாநிலங்கள் மறுசீரமைப்பு சட்டத்தின் கீழ் கர்நாடகா மாநிலம் உருவாக்கப்பட்டது.

நவம்பர், 01 அன்று கேரள மாநிலம் உருவாக்கப்பட்டது.

நவம்பர், 01 – அன்று மத்தியப் பிரதேசம் மாநிலம் உருவாக்கப்பட்டது.

நவம்பர், 1 – அன்று, இந்திய மாநிலங்கள் மறுசீரமைக்கப்பட்டபோது, லட்சத்தீவுகள் சென்னை மாகாணத்தில் இருந்து பிரித்து, நிர்வாக நோக்கங்களுக்காக ஒரு தனியான யூனியன் பிரதேசமாக அமைக்கப்பட்டது.

நவம்பர், 01 – அன்று, தோவாளை, அகஸ்தீஸ்வரம், கல்குளம் மற்றும் விளவங்கோடு ஆகிய நான்கு தாலுகாக்கள் ஒன்றிணைக்கப்பட்டு நாகா்கோவிலை தலைமை இடமாக கொண்டு தமிழ்நாட்டில் கன்னியாகுமரி என்ற புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டது.

டிசம்பர், 6 – அன்று டாக்டர் அம்பேத்ர் இயற்கை எய்தினார்.

டிசம்பர், 27 – அன்று, தமிழ்நாட்டில் தமிழ் ஆட்சி மொழி சட்டம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

மாநில சீரமைப்புகக் குழு உருவாக்கப்பட்டது. திருவாங்கூா் மாநிலத்தின் தெற்கு தாலுகாக்களான தோவாளை, அகஸ்தீஸ்வரம், கல்குளம், விளவங்கோடு மற்றும் செங்கோட்டை மெட்ராஸ் மாநிலத்திற்கு மாற்ற இந்தக் குழு முடிவு செய்தது.

இரண்டாவது நிதிக்குழு, கே.சந்தானம் தலைமையில் ஏற்படுத்தப்பட்டது. செயல்படும் காலம் – 1957-62

சாத்தனூர் அணை தென்பெண்ணையாற்றின் குறுக்கே காமராஜர் அவர்களால் கட்டப்பட்டது.

இந்து வாரிசுச்சட்டம் இயற்றப்பட்டது.

முத்துலெட்சுமி ரெட்டி அவர்கள் மத்திய அரசின் பத்ம பூஷன் விருது பெற்றார்.

நவம்பர் மாதத்தில் மாநில சீரமைப்புச் சட்டம் இயற்றப்பட்டது.

இந்தியாவின் முதல் அணு உலையான அப்சரா நிறுவப்பட்டது.