கி.பி. 1959ஜனவரி, 04 – அன்று, லூனார்-1 விண்கலம் சந்திரனுக்கு மிக அருகில் சென்றது.

பிப்ரவரி, 19 – ஐக்கிய ராஜ்யத்திடமிருந்து சைப்ரஸ் விடுதலை பெற்றது.

மே, 4 – கிராமி விருது முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது.

ஆகஸ்ட் மாதம், இராஜாஜி மற்றும், என்.ஜி.ரங்கா ஆவர்களால் சுதந்திரா கட்சி தோற்றுவிக்கப்பட்டது.

1959 மற்றும் 1960ன் போது, இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் பதவிக்காக நின்ற இந்திரா காந்தி அதில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்தியாவில் பஞ்சாயத்து ராஜ் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்தியாவிற்கு முதல் முறையாக அமெரிக்க ஜனாதிபதியான டேவிட் ஜசன் ஹோவர் அவர்கள் வருகை புரிந்தார்.

இந்தியாவில் முதல் காமாத் தோட்டம் கொல்கத்தாவில் உள்ள போஸ் ஆய்வு நிறுவனத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

சிங்கப்பூர், பிரித்தானியப் பேரரசினுள் ஒரு தன்னாட்சி பெற்ற நாடானது. யூசோப் பின் இசாக் (Yusof bin Ishak) என்பவர் நாட்டுத் தலைவராகவும், லீ குவான் யூ (Lee Kuan Yew) பிரதமராகவும் ஆயினர்.