கி.பி. 1965ஜனவரி, 14 ஆம் நாள், இந்திய உணவுக் கழகம்(FCI) ஏற்படுத்தப்பட்டது.

பிப்ரவரி, 18 – காம்பிய விடுதலை அடைந்த தினம்.

ஆகஸ்ட், 05 – அன்று பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் உள்ளுர் மக்கள் போல உடை அணிந்து எல்லையைக் கடந்து வந்து தாக்குதல் நடத்தியதால் இந்திய-பாகிஸ்தான் போர் ஆரம்பமானது.

ஆகஸ்ட், 9 – அன்று, மலேசியக் கூட்டமைப்பில் இருந்து சிங்கப்பூர், விலகி இறைமையுள்ள ஒரு நாடானது. யூசோப் பின் இசாக் சிங்கப்பூரின் முதலாவது தலைவர் ஆனார். லீ குவான் யூ பிரதமராகத் தொடர்ந்தார்.

செப்டம்பர் 23 ஆம் தேதி இந்திய-பாகிஸ்தான் போர் முடிவுக்கு வந்தது.

அக்டோபர், 02 – அன்று காமராசர் அவர்களால் தனி மாவட்டமாக தருமபுரி உருவாக்கப்பட்டது.

இந்தி மொழி கட்டாயமாக்கப்படுவதை எதிர்த்து, இந்திய குடியரசு நாளை துக்க நாளாக அறிவித்து தி.மு.க கிளர்ச்சியில் ஈடுபட்டது.