ஏப்ரல், 11 – ஆப்பிள் நிறுவனத்தின் முதல் தயாரிப்பான Apple – 1 கணிணி வெளியிடப்பட்டது.

அக்டோபர், 19 – உலகின் அருகி வரும் உயிரினமாக மனித குரங்கு அறிவிக்கப்பட்டது.

காமராசரின் மறைவுக்கு பின், இந்திய அரசு அவருக்குப் பாரத ரத்னா விருது வழங்கியது.

42வது சட்டத்திருத்தத்தின் படி முகப்புரை திருத்தப்பட்டது.

இந்திய அரசால் ஒருங்கினைந்த ஊரக வளர்ச்சித் திட்டம் (IRDP) தொடங்கப்பட்டது.

அன்னை தெரேசா அவர்களால் அருட்சகோதரிகளின் தியானக் கிளை தோற்றுவிக்கப்பட்டது.

சென்னையிலுள்ள கிண்டியில், கிண்டி தேசிய பூங்கா நிறுவப்பட்டது.

இந்திய அரசால் சமுதாய காடுகள் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

பிரான்ஸ் நாட்டின் கொடியின் நிறம் மாற்றப்பட்டது.

வட மற்றும் தென் வியட்நாம்கள் இணைக்கப்பட்டதைத் தொடர்ந்து இதன் தலைநகராக ஹனோய் உள்ளது.