ஜனவரி, 01 – அன்று முதல், நாமக்கல் மாவட்டமானது சேலம் மாவட்டத்திலிருந்து பிரிந்து தனி மாவட்டமாக உதயமானது.

ஜனவரி, 01 – அன்று, அரசாணை பல்வகை எண்-679-வருவாய்த்துறை-நாள்.25.07.1996 ன்படி மதுரை மாவட்டத்திலிருந்து தேனி மாவட்டத்தை புதிதாக பிரிப்பதற்கு ஆணையிடப்பட்டதை தொடர்ந்து அப்போதிருந்த பெரியகுளம் வருவாய் கோட்டத்தில் அடங்கிய பெரியகுளம் தாலுகாவில் இருந்து புதிய தேனி தாலுகா பிரிக்கப்பட்டு உத்தமபாளையம் தாலுகாவிலிருந்து புதிதாக போடிநாயக்கனூர் ஏற்படுத்தப்பட்டும் உத்தமபாளையம் போடிநாயக்கனூர் வருவாய் கோட்டங்களை உள்ளடக்கிய உத்தமபாளையம் வருவாய் கோட்டம் உருவாக்கப்பட்டும் தேனி மாவட்டம் உருவாக்கப்பட்டு தேனி மாவட்டம் செயல்பட தொடங்கியது.

மார்ச், 17 – அன்று, அன்னை தெரேசா அவர்கள் மிஷினரீஸ் ஆப் சேரிட்டியின் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகினார்.

ஏப்ரல், 17 ஆம் நாள் மனித உரிமைகள் ஆணையம் உருவாக்கப்பட்டது.

மே, 11 – அன்று, IBM நிறுவனத்தின் Deep Blue computer உலக செஸ் சாம்பியனான Garry Kasparov அவர்களை வீழ்த்தியது.

ஜூலை, 01 – அன்று காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் என இரு மாவட்டங்களாக பிரிக்கப்பட்ட அதே நாளில் செங்கல்பட்டு வட்டத்திலிருந்து திருக்கழுக்குன்றம் வட்டம் வகுக்கப்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டம் 8 வட்டங்களான காஞ்சிபுரம், திருப்பெரும்புதூர், உத்திரமேரூர், செங்கல்பட்டு, தாம்பரம், திருக்கழுக்குன்றம், மதுராந்தகம் மற்றும் செய்யூர் கொண்டது.

செப்டம்பர், 5 – அன்று, அன்னை தெரேசா மரணமடைந்தார்.

காமராஜர் மாவட்டமானது, விருதுநகர் மாவட்டம் என்று மாற்றப்பட்டது.

சேலத்தில், பெரியார் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது.

சென்னையில், அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது.

பெண்களை கேலி செய்வதற்கு எதிரான சட்டம் இயற்றப்பட்டது.

1997 முதல் 2001 வரை தமிழ்நாடு ஆளுநராக எம்.பாத்திமா பீவி பொறுப்பேற்றுக்கொண்டார்.

தீரன் சின்னமலை மாவட்டம் கரூர் மாவட்டம் என்று மாற்றப்பட்டது.