பிப்ரவரி, 17 – அன்று, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின், விண்டோஸ் 2000 வெளியிடப்பட்டது.

மே, 11 – இந்தியாவின் மக்கள் தொகை 100 கோடியை தாண்டியதாக கருதப்படும் நாளாகும்.

நவம்பர், 15 – அன்று, பீகார் மாநிலத்திலிருந்து ஒரு பகுதி பிரித்தெடுக்கப்பட்டு ஜார்க்கண்ட் மாநிலம் உருவாக்கப் பட்டது.

தமிழ்நாடு பிறப்புகள் மற்றும் இறப்புகள் பதிவு விதிகளின் ப‍டி, பிறப்புகள் மற்றும் இறப்புகள் பதிவு கட்டாயமாக்கப்பட்டது.

கர்னம் மல்லேஸ்வரி, ஆஸ்திரேலியாவின் சிட்னியில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் 110 கிலோ (Snach) மற்றும் 130 கிலோ (Clean and Jerk) ஆகிய இரண்டும் சேர்த்து மொத்தம் 240 கிலோ எடை தூக்கினார். இதன் மூலம் வெண்கலப் பதக்கம் வென்றார் மேலும் இந்தியாவிலிருந்து தங்கம் வென்ற முதல் பெண் என்ற பெறுமையினைப் பெற்றார். 2000 ஆம் ஆண்டு இந்தியா வென்ற ஒரே பதக்கமும் இவருடையதே.