பிப்ரவரி, 09 – தரும்புரி மாவட்டத்தின் பரந்த பகுதி காரணமாக மீண்டும் தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி என இரண்டு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது.

மே, 01 – அன்று ஹங்கேரியானது, ஐரோப்பிய யூனியனில் இணைந்தது.

டிசம்பர், 26 – அன்று, இந்தோனேசியாவின், சுமத்திரா தீவின் கடலுக்கடியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் காரணமாக, இந்தியா, இலங்கை, இந்தோனேசியா மற்றும் பல தெற்காசிய நாடுகளை சுனாமி தாக்கியது, இதனால் கணக்கிலடங்காத பொருட்சேதமும், சுமார், 2,00,000 க்கும் மேற்பட்ட மக்களும் மடிந்தனர்.

பிரதிபா பாட்டில் அவர்கள் ராஜஸ்தான் மாநில கவர்னராக 2004 முதல் 2007 வரை சேவையாற்றினார்.

இந்தியாவில் புயல்களுக்கு பெயர் வைக்கும் வழக்கம் முதல் முறையாக தொடங்கியது.

நீரஜா பனோட் – இவர் பாம்பாயிலிருந்து அமெரிக்கா கராச்சி நோக்கி சென்று கொன்டிருந்த பான் ஆம் 73 என்ற விமானம் பாகிஸ்தான் நாட்டின் கராச்சி விமான நிலையத்தில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டது, அப்பொழுது பயணிகளை காப்பாற்ற முற்படும்போது தீவிரவாதிகளால் 1986 ஆம் ஆண்டு செப்டம்பர் 05 ஆம் நாள் சுட்டுக்கொல்லப்பட்டார். 2004 ஆம் ஆண்டு இந்திய அரசு இவரது நினைவாக அஞ்சல் தலை வெளியிட்டது.