ஜனவரி, 24 – இந்த ஆண்டு முதல் இந்தியாவில் தேசிய பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது.

மார்ச் – பல நூற்றாண்டுகளாக நேரடி மன்னராட்சியில் இருந்த பூட்டான் முதலாவது மக்களாட்சித் தேர்தல்களை இல் நடத்தியது.

ஏப்ரல், 15 – தமிழ்நாடு அரசால், திருநங்கையரின் நலனுக்காக தனி நலவாரியம் அமைக்கப்பட்டது.

ஏப்ரல், 18 – பெங்களூரு – கொல்கத்தா அணிகளுக்கு இடையே முதல் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

மே, 25, நாசாவின் போனிக்ஸ் வின்கலம் (Robot Phoenix) செவ்வாயில் தரையிறங்கியது.

ஆகஸ்ட், 05 – அன்று, தூத்துக்குடி, வேலூர், திருப்பத்தூர், ஈரோடு ஆகியவை தமிழகத்தின் த்துக்குடி மாநகராட்சியாக அப்போதைய தமிழக முதல்வர் மு. கருணாநிதியினால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

அக்டோபர், 22 ஆம் நாள், சந்திரனைப் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்வதற்கா இந்திய அரசு சந்திரயான்-1 என்ற விண்கலத்தை ஆந்திர மாநிலம், ஶ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து PSLV ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது.

அக்டோபர், 22 – கூகுள் ப்ளே ஸ்டோர் (Google Play Store) அறிமுகப்படுத்தப்பட்டது.

டிசம்பர், 31 – அன்று இந்திய அரசு உடுமலை நாராயணகவி நினைவை போற்றும் வகையில் இந்திய அஞ்சல் துறை அஞ்சல்தலை வெளியிட்டுள்ளது.

டிசம்பர், 31 – அன்று ராணி வேலு நாச்சியார் நினைவு தபால் தலை இந்திய அரசால் வெளியிடப்பட்டது.

ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் – அபினவ் பிந்த்ரா

இந்தியாவின் தேசிய நதியாக கங்கை தேர்ந்தெடுக்கப்பட்டது.

நிஷா சூறாவளி தமிழகத்தைத் தாக்கியது.