மார்ச் – ஒரு தேசம் ஒரு அட்டை முதன் முதலில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

ஏப்ரல், 17 – அன்று, இலங்கையின் முதல் செயற்கைக்கோளான Ravan1 ஆனது அமெரிக்காவால் விண்ணில் ஏவப்பட்டது.

ஆகஸ்ட், 05 – இந்திய அரசானது ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கிய சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது.

நவம்பர், 12 – அன்று காஞ்சிபுரம் மாவட்டத்தின் சில பகுதிகளைக் கொண்டு செங்கல்பட்டு மாவட்டம் நிறுவுவதற்கான அரசாணை 12 அன்று தமிழ்நாடு அரசு வெளியிடப்பட்டது.

நவம்பர், 22 – தமிழ்நாட்டின் 33 ஆவது மாவட்டமாக தென்காசி மாவட்டம், திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டது

நவம்பர், 26 – தமிழ்நாட்டின் 34 ஆவது மாவட்டமாக கள்ளக்குறிச்சி மாவட்டம், விழுப்புரம் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டது.

நவம்பர், 28 – தமிழ்நாட்டின் 35 ஆவது மாவட்டமாக திருப்பத்தூர் மாவட்டம், வேலூரிலிருந்து பிரிக்கப்பட்டது.

நவம்பர், 28 – தமிழ்நாட்டின் 36 ஆவது மாவட்டமாக ராண்ப்பேட்டை மாவட்டம், வேலூரிலிருந்து பிரிக்கப்பட்டது.

நவம்பர், 29 – தமிழ்நாட்டின் 37 ஆவது மாவட்டமாக செங்கல்பட்டு மாவட்டம், காஞ்சிபுரத்திலிருந்து பிரிக்கப்பட்டது.

அக்டோபர், 31 – அன்று, ஜம்மு – காஷ்மீர் மாநிலமானது, யூனியன் பிரதேசமாக இந்திய அரசால் மாற்றப்பட்டது.

ஓசூர் ஆவடி, மற்றும் நாகர்கோவில் ஆகிய நகராட்சிகள், மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டது.

2014 ஆம் ஆண்டிற்குப் பின்னர் மீண்டும் எபோலாவானது சர்வேதேச நெருக்கடி நோய் தொற்றாக உலக சுகாதார அமைப்பால் அறிவிக்கப்பட்டது.