அடால்ஃப் இட்லர் (Adolf Hitler, ஏப்ரல் 20, 1889– ஏப்ரல் 30 ,1945) ஜெர்மனியின் நாசிக் கட்சியின் தலைவராக விளங்கியவர்.

அவர் 1933-ஆம் ஆண்டு ஜெர்மனி நாட்டின் சான்சலராக நியமிக்கப்பட்டார்.

பின்பு 1934-ஆம் ஆண்டு, ஜெர்மனி நாட்டின் தலைவரானார்.

1938 ஆம் ஆண்டு, ஹிட்லர், இங்கிலாந்து பிரதமர் நிவின் சேம்பர்லைனுடன் முயூனிச் என்ற இடத்தில் செய்து கொண்ட ஒப்பந்தத்தை மீறி செக்கோஸ்லோவோக்கியாவை கைப்பற்றியது இரண்டாம் உலகப்போருக்கு காரணமாயிற்று.

1939 ஆம் ஆண்டு, ஹிட்லர், ஜெர்மனியையும், கிழக்கு பிரஷ்யாவையையும் போலந்து வழியாக இராணுவச்சாலை அமைக்கும் உரிமையை வழங்குமாறு போலந்து நாட்டை நிர்பந்தித்தார் மற்றும் டான்சிக் (Danzig) துறைமுகத்தை தன்னிடம் ஒப்படைக்கவும் வலியுறுத்தினார். இதனை போலந்து மறுக்கவே 1939 ஆம் ஆண்டு, செப்டம்பர் 1 ஆம் தேதி ஹிட்லர் அந்நாட்டின் மீது மின்னல் வேக தாக்குதல் நடத்தி போலந்தை கைப்பற்றினார். இதுவே இரண்டாம் உலகப் போர் ஏற்பட உடனடி காரணமாக அமைந்தது.

1945-ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ந் தேதியன்று தற்கொலை செய்து கொண்டது வரை அப்பதவியில் தொடர்ந்தார்.

ஜெர்மனி நாட்டின் ஃபியூரர் என அழைக்கப்பட்டார்.

இரண்டாம் உலகப்போரின் இறுதியில் ஸ்டாலினின் செம்படைகளிடம் ஜெர்மன் தலைநகர் பெர்லினில் இட்லரின் நாசிப்படைகள் வீழ்ச்சியுற்றது.

அப்படைகள் அவரை நெருங்குவதற்கு முன் தன் கைத்துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார் என்று பதிவேடுகள் கூறுகின்றன.

அவரோடு அவர் மனைவி இவா பிரானும் தற்கொலை செய்து கொண்டார் என்றும் கூறப்படுகின்றது.

ஹிட்லர் சிறையிலிருக்கும் போது மெயின் காம்ப் (Mein Kamph) ‘எனது போராட்டம்’ என்ற நூலை எழுதினார்.

ஓவியராக வியன்னாவில் பணியாற்றினார்.

சிந்து சமவெளி நாகரிகம் (கி.மு. 3000 – கி.மு. 2500)

மகாவீரர் (கி.மு. 599 – கி.மு. 527)

கௌதம புத்தர் (கி.மு. 563 – கி.மு. 483)
கி.பி. 1201 முதல் கி.பி 1500 ஆண்டு வரை


கி.பி. 1501 முதல் கி.பி 1700 ஆண்டு வரை


கி.பி. 1701 முதல் கி.பி 1800 ஆண்டு வரைகி.பி. 1801 முதல் கி.பி 1850 ஆண்டு வரை


கி.பி. 1851 முதல் கி.பி 1900 ஆண்டு வரை


கி.பி. 1901 முதல் கி.பி 1951 ஆண்டு வரை


கி.பி. 1951 முதல்புதிய கற்காலம்


சங்ககால தமிழ் புலவர்கள்

கம்பர் (கி.பி. 12 ஆம் நூற்றாண்டு)