1820 ஆம் ஆண்டு அண்டார்டிகா கண்டுபிடிக்கப்பட்டது.

அண்டார்ட்டிக்கா (Antarctica) பூமியின் தென்முனையைச் சூழ்ந்திருக்கும் ஒரு கண்டமாகும்.

பூமியிலேயே மிகவும் குளிர்ந்த பகுதி இதுவாகும்.

புவியின் தென்முனையில் அமைந்திருப்பதனால் இப்பகுதிக்கு சூரியனின் வெப்பம் மிகக் குறைந்த அளவே வந்துசேர்கிறது.

இதன் காரணமாகக் கண்டம் முழுவதும் ஏறக்குறையப் பனிக்கட்டியினால் மூடப்பட்டுள்ளது.

ஆண்டில் ஆறு மாதங்கள் சூரியனின் வெளிச்சமே இருக்காது.

இது ஆண்டு மழைப் பொழிிவு 200 மில்லிமீட்டர் அளவு மட்டுமே பெறக்கூடிய பனிக்கட்டிப் பாலை நிலம் ஆகும்.

இங்கே நிரந்தர மக்கள் குடியிருப்பு எதுவும் கிடையாது,

வெவ்வேறு உலக நாடுகளின் ஆய்கூடங்கள் மட்டுமே இருக்கின்றன.

புவியில் உள்ள நன்னீரில் கிட்டத்தட்ட 70 வீதமானது இங்கேயே உள்ளது.

புவி வெப்பமாதலினால் இங்குள்ள பனி உருகிவருகின்றது.

இதன் மூலம் கடல் நீர் மட்டம் உயர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

புவி வெப்பமாதலால் உருகும் பனிப்பாறைகள், கடல் நீர்மட்டம் உயர்வதை மேலும் கூட்டுகின்றன என அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

அண்டார்டிகாவில் உலகின் எழு கொடுமுடிகளில் ஒன்றான வின்சன் மாசிப் அமைந்துள்ளது.


ஆசியா


ஐரோப்பா


ஆப்ரிக்கா


வட அமெரிக்கா


தென் அமெரிக்கா


ஆஸ்திரேலியா


அண்டார்டிகா