முதன் முதலாக நோபல் பரிசு பெற்ற பெண் அன்னை தெரேசா ஆவார்
அன்னை தெரேசா (Mother Teresa, ஆகத்து 26, 1910 – செப்டம்பர் 5, 1997), அல்பேனியா நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவரும் இந்தியக் குடியுரிமை பெற்ற உரோமன் கத்தோலிக்க அருட்சகோதரியும் ஆவார். இவரின் இயற்பெயர் ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ ஆகும்.
அன்னை தெரேசா அவர்கள் 1910 ஆகஸ்டு 26 அன்று ஓட்டோமான் பேரரசின் அஸ்கப் (தற்போது மாக்கடோனியக் குடியரசின் ஸ்கோப்ஜே) இல் பிறந்தார். ஆகஸ்டு 26 ஆம் தேதி பிறந்த போதிலும், அவர் திருமுழுக்குப் பெற்ற ஆகஸ்டு 27 ஆம் தேதியையே தனது உண்மைப் பிறந்தநாளாகக் கருதினார்.
1929 ஆம் ஆண்டு அன்னை தெரேசா அவர்கள் இந்தியா வந்தடைந்து இமயமலை அருகே உள்ள டார்ஜீலிங்கில் தனது துறவற புகுநிலையினருக்கான பயிற்சியினை ஆரம்பித்தார்.
பள்ளிக்கூடத்தில் பயிற்றுவிப்பதை தெரேசா விரும்பினாலும் கல்கத்தாவில் அவரைச் சூழ்ந்துள்ள பகுதிகளின் வறுமை நிலை அவரை அதிகமாய் கலங்கச் செய்தது. 1943-ன் பஞ்சம் துயரத்தையும் சாவையும் அந்நகரத்துக்குக் கொணர்ந்தது என்றால் 1946-ன் இந்து/முஸ்லிம் வன்முறை அந்நகரத்தை நம்பிக்கையின்மையிலும் அச்சத்திலும் ஆழ்த்தியது.
லொரேட்டோ துறவற சபையின் உடைகளைக் களைந்து, நீல கரையிடப்பட்ட சாதாரண வெண்ணிற பருத்தி புடவையை அணிந்தவராய், இந்திய குடியுரிமையினைப் பெற்றுக்கொண்டு குடிசை பகுதிகளுக்குள் சேவை செய்தார்.
அவரது முயற்சிகள் விரைவிலேயே பிரதமர் உட்பட இந்தியாவின் உயர் அதிகாரிகளின் கவனத்தை அவர் பக்கம் ஈர்த்து அவர்களது பாராட்டுதலைப் பெற்றுத்தந்தன.
1950 அக்டோபர் 7 ஆம் தேதி, பிறர் அன்பின் பணியாளர் சபையை மறைமாவட்ட அளவில் துவக்க தெரெசாவுக்கு கத்தோலிக்க திருச்சபையில் அனுமதி அளிக்கப்பட்டது.
கொல்கத்தாவில் 13 உறுப்பினர்களையே கொண்ட சிறியதொரு அமைப்பாக ஆரம்பிக்கப்பட்ட கத்தோலிக்க திருச்சபை , இன்று 6000க்கும் மேலான அருட்சகோதிரிகளால் நடத்தப்படும் அனாதை இல்லங்களையும், எய்ட்ஸ் நல்வாழ்வு மையங்களையும், தொண்டு மையங்களையும் தன்னகத்தே கொண்டு அகதிகள், குருடர், ஊனமுற்றோர், முதியோர், மது அடிமைகள், ஏழை எளியோர், வீடற்றோர், வெள்ளத்தினாலும், தொற்றுநோயாலும் பஞ்சத்தாலும் பாதிக்கப்பட்டவர்கள் போன்றவர்களைக் கவனிக்கும் இடமாகவும் இருக்கிறது.
1952 ஆம் ஆண்டில் கல்கத்தா நகரில் ஒதுக்கப்பட்ட இடத்தில் அன்னை தெரேசா இறப்பின் வாயிலிலிருப்போருக்கு, முதல் இல்லத்தை ஏற்படுத்தினார்.
1955 ஆம் ஆண்டில் அன்னை தெரேசா அவர்கள் நிர்மலா சிசு பவனையும், மாசில்ல இருதய அன்னையின் குழந்தைகள் காப்பகத்தையும் அனாதைக் குழந்தைகளுக்காகவும், வீடற்ற இளையோருக்காகவும் தொடங்கினார்.
1960 ஆம் ஆண்டுகளில் அன்னை தெரேசா அவர்கள் நல்வாழ்வு மையங்களையும், அநாதை இல்லங்களையும், தொழுநோயாளிகள் தங்குமிடங்களையும் இந்தியா முழுவதும் துவங்கினார். அன்னை தெரேசா பின்னர் இதனை உலகம் முழுவதும் நிறுவினார். இந்தியாவுக்கு வெளியே இவ்வமைப்புகளின் முதல் இல்லம் 1995 ஆம் ஆண்டில் வெனிசுலா நாட்டில் ஐந்து அருட்சகோதரிகளைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது.
1968 ஆம் ஆண்டில் ரோமிலும், தான்சானியாவிலும், ஆஸ்திரியாவிலும் தொடங்கப்பட்டது. 1970 ஆம் ஆண்டுகளில் இவ்வமைப்பு ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பியா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த எண்ணற்ற நாடுகளில் இல்லங்களையும், கருணை இல்லங்களையும் நிறுவியது.
அன்னை தெரேசா அவர்களால் 1963 ஆம் ஆண்டில் பிறர் அன்பின் பணியாளர் சபை சகோதரர்கள் என்ற அமைப்பு ஆண்களுக்காகத் தோற்றுவிக்கப்பட்டது.
அன்னை தெரேசா அவர்களால் 1976 இல் அருட்சகோதரிகளின் தியானக் கிளை தோற்றுவிக்கப்பட்டது.
2007 ஆம் ஆண்டுக்குள் பிறர் அன்பின் பணியாளர் சபை ஏறத்தாழ 450 அருட்சகோதரர்களையும், 120 நாடுகளில் 60000 சேவை மையங்கள், பள்ளிகள் மற்றும் தங்குமிடங்களை இயக்கிக் கொண்டிருக்கும் 5000 அருட்சகோதரிகளையும் கொண்டிருந்தது.
1982 இல் பெய்ரூட்டின் கடும் முற்றுகையைத் தொடர்ந்து, அன்னை தெரேசா இஸ்ராயேல படைகளுக்கும் பாலஸ்தீன கொரில்லாகளுக்கும் இடையே ஒரு தற்காலிகப் போர்நிறுத்தத்தை செய்து தாக்குதலுக்குள்ளான ஒரு மருத்துவமனையினுள் சிக்கிக் கொண்டிருந்த 37 குழந்தைகளை மீட்டார்
1991-ல், முதன்முறையாகத் தனது பூர்வீகத்தை வந்தடைந்த அவர் அல்பேனியாவின் டிரானாவில் பிறர் அன்பின் பணியாளர் சபை அருட்சகோதரர்கள் இல்லத்தைத் தொடங்கினார்.
1983-ல் திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பரை உரோமையில் சந்தித்த பொழுது அன்னை தெரெசாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. 1989-ல் இரண்டாவது முறையாக ஏற்பட்ட மாரடைப்புக்குப் பிறகு அவருக்குச் செயற்கை இதயமுடுக்கி பொருத்தப்பட்டது. 1991-ல் மெக்சிகோவில், நிமோனியாவுடனான போராட்டத்திற்குப் பிறகு அவர் மீண்டும் இதயக் கோளாறுகளால் அவதிப்பட்டார். பிறர் அன்பின் பணியாளர் சபையின் தலைமைப் பொறுப்பிலிருந்து விலக முன்வந்தார்.
ஆனால் இவ்வமைப்பின் அருட்சகோதரிகள் இரகசிய தேர்தலின் மூலம் அவர் அப்பணியிலேயே தொடர்ந்திருக்க செய்தனர்.
அன்னை தெரேசா அவர்கள் மார்ச் 13, 1997 ல் அவர் மிஷினரீஸ் ஆப் சேரிட்டியின் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகினார்.
1962 ல் பத்மஸ்ரீ விருது வழங்கப்படுவதற்கு கால் நூற்றாண்டுக்கு முன்பே இந்திய அரசால் அன்னை தெரேசா அடையாளங்காணப்பட்டுள்ளார். 1972-ல், பன்னாட்டு புரிந்துணர்வுக்கான ஜவகர்லால் நேரு விருது, 1980-ல் இந்தியாவின் உயரிய குடிமக்கள் விருதான பாரத ரத்னா உட்பட இந்திய உயர்விருதுகளை அடுத்த பத்தாண்டுகளில் பெற்றார்.
அன்னை தெரேசா அவர்களது அதிகாரபூர்வ வாழ்க்கைச்சரித்திரம், இந்திய ஆட்சிப் பணியாளரான நவீன் சாவ்லாவால் எழுதப்பட்டு 1992இல் வெளியிடப்பட்டது.
தெற்காசிய மற்றும் கிழக்காசிய சேவைகளுக்காக 1962-ல், பன்னாட்டுப் புரிந்துணர்தலுக்கான பிலிப்பைன்ஸின் ரமன் மக்சேசே விருதைப் பெற்றார்.
1971-ல் திருத்தந்தை ஆறாம் பவுல், அமைதிக்கான முதல் திருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவான் பரிசை, அவரின் ஏழை எளியோருக்கான சேவையையும் கிறிஸ்துவ நெறியின் பறைசாற்றலையும், அமைதிக்கான முயற்சியையும் பாராட்டி அன்னை தெரேசா அவர்களுக்கு அளித்தார்.
1982-ல் அவர் ஆர்டர் ஆஃப் ஆஸ்திரேலியாவின் கௌரவ தோழர் என்ற விருதைப் பெற்றார்.
1983-ல், இங்கிலாந்தின் ஆர்டர் அப் மெரிட் என்ற விருதும், நவம்பர் 16 1996 ல், அமெரிக்காவின் கௌரவக் குடியுரிமையும் கிடைத்தன. அன்னை தெரேசாவின் பூர்விகமான அல்பேனியா நாடு அவருக்கு 1994 ஆம் ஆண்டு தேசத்தின் தங்க மரியாதையை அளித்துக் கௌரவப்படுத்தியதோடல்லாமல் 1991-ல் குடியுரிமையும் அளித்திருந்தது.
செப்டம்பர் 5, 1997இல் மரணமடைந்தார்.
செப்டம்பர் 1997 ல் இறுதிச்சடங்கிற்கு முன்னதாக ஒரு வார காலம் அன்னை தெரேசாவின் உடல் கொல்கத்தாவின் புனித தோமையார் ஆலயத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. அனைத்து மத ஏழைகளுக்கும் அவர் ஆற்றிய தொண்டுக்குப் பரிகாரமாக, இந்திய அரசின் அரசு மரியாதையுடன் கூடிய இறுதிச்சடங்கு செய்யப்பட்டது.
மனிதநேயம் சமாதானம் மற்றும் சகோதரத்துவத்துக்காகப் பல்சான் பரிசினையும் (1978), ஆல்பர்ட் ஷ்வேத்ஸரின் (1975) அனைத்துலக விருதும் இவருக்கு அளிக்கப்பட்டது.
1979 ல், அன்னை தெரேசா அமைதிக்கான நோபல் பரிசு பெற்றார்.
நோபல் பரிசு பெறுபவர்களுக்கு அளிக்கப்படும் பாரம்பரிய விருந்தை மறுத்த அவர் அதற்காகும் $192,000 நிதியை இந்தியாவின் ஏழைகளுக்குக் கொடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.
சிந்து சமவெளி நாகரிகம் (கி.மு. 3000 – கி.மு. 2500)
மகாவீரர் (கி.மு. 599 – கி.மு. 527)
கௌதம புத்தர் (கி.மு. 563 – கி.மு. 483)
கனிஷ்கர் ( கி. பி 127 முதல் 163 )
நாளந்தா பல்கலைக்கழகம் (கி.பி. 415 – கி.பி. 455)
கி.பி. 1201 முதல் கி.பி 1500 ஆண்டு வரை
கில்ஜி வம்சம் (கி.பி. 1290 – கி.பி. 1320)
துக்ளக் வம்சம் (கி.பி 1321 – கி.பி. 1413)
விஜயநகரப் பேரரசு (கி.பி. 1336 – கி.பி. 1646)
கி.பி. 1501 முதல் கி.பி 1700 ஆண்டு வரை
கி.பி. 1701 முதல் கி.பி 1800 ஆண்டு வரை
வில்லியம் பெண்டிங் (1774 – 1839)
வெல்லெஸ்லி (1760 – 1842)
வீர பாண்டிய கட்டபொம்மன் (1760 – 1799)
இராஜாராம் மோகன்ராய் (1772 – 1833)
மருது சகோதரர்கள் (1785 – 1801)
கி.பி. 1801 முதல் கி.பி 1850 ஆண்டு வரை
இரண்டாம் ஆங்கிலேய மராத்திய போர் (1803)
சர் ஆர்தர் காட்டன் (1803 – 1899)
கானிங் பிரபு (1812 – 1862)
கார்ல் மார்க்ஸ் (1818 – 1883)
தாதாபாய் நௌரோஜி (1825 – 1917)
வேதநாயகம் பிள்ளை (1826 – 1889)
ரிப்பன் பிரபு (1827 – 1909)
ஆல்பிரட் நோபல் (1833 – 1896)
இராமகிருஷ்ண பரமஹம்சர் (1836 – 1886)
பக்கிம் சந்திர சட்டர்ஜி (1838 – 1894)
ஜேம்ஸ் திவார் (1842 – 1923)
W.C.பானர்ஜி (1844 – 1906)
கி.பி. 1851 முதல் கி.பி 1900 ஆண்டு வரை
மனோன்மணீயம் பெ. சுந்தரனார் (1855 – 1897)
தமிழ் தாத்தா உ.வே.சா (கி.பி. 1855 – கி.பி. 1942)
பண்டித ராமாபாய் (1858 – 1922)
சர் ஜகதீஷ் சந்திர போஸ் (1858 – 1937)
கர்சன் பிரபு (1859 – 1925)
பியரி கியூரி (1859 – 1906)
இரவீந்திரநாத் தாகூர் (1861 – 1941)
சுவாமி விவேகானந்தர் (1863 – 1902)
கோபாலகிருஷ்ன கோகலே (1866 – 1915)
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை (1867 – 1954)
ஜார்ஜ் கிளாட் (1870 – 1960)
வ.உ.சிதம்பரம் (1872 – 1936)
மார்க்கோனி (1874 – 1937)
சர்தார் வல்லபாய் பட்டேல் (1875 – 1950)
மு.வரதநஞ்சையப்பப் பிள்ளை (1877– 1956)
மூவாலூர் இராமாமிர்தம் (1883 – 1962)
நீல்ஸ் போர் (1885 – 1962)
ராஷ் பிஹாரி போஸ் (1886 – 1945)
முத்துலெட்சுமி ரெட்டி (1886 – 1968)
சீனிவாச இராமானுஜன் (1887 – 1920)
நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கனார் (1888 – 1972)
அடால்ப் ஹிட்லர் (1889 – 1945)
கான் அப்துல் கபார் கான் (1890 – 1988)
மேகநாத சாஃகா (1893 – 1956)
உடுமலை நாராயணகவி (1899 – 1981)
அம்பேத்கர் (1891 – 1956)
கி.பி. 1901 முதல் கி.பி 1951 ஆண்டு வரை
லால் பகதூர் சாஸ்திரி (1904 – 1966)
சி.பா.ஆதித்தனார் (1905 – 1981)
சுசேதா கிருபாலினி (1908 – 1974)
சுப்பிரமணிய சந்திரசேகர் (1920 – 1995)
அன்னை தெரேசா (1910 – 1997)
முதல் உலகப்போர் (1914 – 1918)
சிறிமாவோ பண்டாரநாயக்கா (1916 – 2000)
நெல்சன் மண்டேலா (1918 – 2013)
ஜாலியன் வாலாபாக் படுகொலை (1919)
ஒத்துழையாமை இயக்கம் (1920 – 1922)
சுயராஜ் கட்சி (1922 – 1935)
சைமன் தூதுக்கழு (1927 – 1928)
சுவாமி தயானந்த சரஸ்வதி (1930 – 2015)
A.P.J. அப்துல் கலாம் (1931 – 2015)
நம்மாழ்வார் (1938 – 2013)
இரண்டாம் உலகப்போர் (1939 – 1945)
வெள்ளையனே வெளியேறு இயக்கம் (1942)
ராஜீவ் காந்தி (1944 – 1991)
கி.பி. 1951 முதல் …
சங்ககால தமிழ் புலவர்கள்
கம்பர் (கி.பி. 12 ஆம் நூற்றாண்டு)