பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் (ஆங்கில மொழி: Bhimrao Ramji Ambedkar, மராத்தி: 14 ஏப்ரல் 1891 – 6 திசம்பர் 1956) என்றும் பாபா சாகேப் அம்பேத்கர் (பொருள்: தந்தை) என்றும் அழைக்கப்படுபவர்.

இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராக பதவியேற்றவர் ஆவார்.

உயர் கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் ஆவார்.

பட்டியல் சாதி மக்களுக்கென கழகம் ஒன்றைத் தொடங்கியவர்.

பரோடா மன்னருடன் இணைந்து தீண்டாமை ஒழியப் போராடியவர்.

பொருளாதாரம், அரசியல், வரலாறு, தத்துவம், சட்டம் ஆகிய துறைகளில் தேர்ந்தவர்; ஆசிரியராகவும், இதழாளராகவும், எழுத்தாளராகவும் சமூகநீதிப் புரட்சியாளராகவும் விளங்கியவர்.

‘திராவிட புத்தம்’ என்ற பெயரில் பல ஆயிரக்கணக்கான பட்டியல் சாதி மக்களை புத்தசமயத்தைத் தழுவச்செய்தவர்;

இவை யாவற்றுக்கும் மேலாக இந்திய அரசியலமைப்புச் சாசனத்தை வரைவதற்கான குழுவின் தலைவராகவும் பொறுப்பேற்றவர்.

1932 ஆம் ஆண்டு, வகுப்பு வாத அறிக்கையை இங்கிலாந்து பிரதமர் மெக்டொனால்டு வெளியிட்டார், இதில் சிறுபான்மையினருக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் தனி இட ஒதுக்கீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனை அம்பேத்கர் வரவேற்றார். ஆனால் இதனை காந்தி எதிர்த்தார். இதனை எதிர்த்து காந்தி சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தார். பின்னர் அம்பேத்கருடன் ஏற்பட்ட பூனா உடன்படிக்கைக்குப் பின்னர் உண்ணாவிரதத்தை கைவிட்டார்.

டாக்டர் அம்பேத்கரின் ‘பணத்தின் சிக்கலும் அதன் தீர்வும்’ (The Problem of the Rupee and its solution) என்ற ஆராய்ச்சிக் கட்டுரையின் அடிப்படையில்தான் இந்திய ரிசர்வ் வங்கியின் அடிப்படைச் சட்டம், 1934 இல் உருவாக்கப்பட்டது.

1947 ஆம் ஆண்டு, ஆகஸ்டு, 29 ஆம் நாள், அரசியலமைப்பு வரைவுக்குழு. டாக்டர் அம்பேத்கர் தலைமையில் அமைக்கப்பட்டது.

டாக்டர் அம்பேத்கர் அவர்களின் கூற்றுப்படி ‘இந்திய அரசியலமைப்பின் இதயம்’ என வருணிக்கப்படும் சட்டப்பிரிவு – பிரிவு 32 – அரசியலமைப்புக்கு உட்பட்டு தீரவு காணும் உரிமை.

இந்தியாவின் மிகச்சிறந்த உயரிய விருதான ‘பாரத ரத்னா’ விருது இவரது இறப்புக்குப் பின் 1990 இல் இவருக்கு வழங்கப்பட்டது.

2012 ஆம் ஆண்டில் வரலாற்றுத் தொலைக்காட்சியும், சி.என்.என்- ஐ.பி.என் தொலைக்காட்சியும் நடத்திய வாக்கெடுப்பில் மிகச்சிறந்த இந்தியராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சிந்து சமவெளி நாகரிகம் (கி.மு. 3000 – கி.மு. 2500)

மகாவீரர் (கி.மு. 599 – கி.மு. 527)

கௌதம புத்தர் (கி.மு. 563 – கி.மு. 483)
கி.பி. 1201 முதல் கி.பி 1500 ஆண்டு வரை


கி.பி. 1501 முதல் கி.பி 1700 ஆண்டு வரை


கி.பி. 1701 முதல் கி.பி 1800 ஆண்டு வரைகி.பி. 1801 முதல் கி.பி 1850 ஆண்டு வரை


கி.பி. 1851 முதல் கி.பி 1900 ஆண்டு வரை


கி.பி. 1901 முதல் கி.பி 1951 ஆண்டு வரை


கி.பி. 1951 முதல்புதிய கற்காலம்


சங்ககால தமிழ் புலவர்கள்

கம்பர் (கி.பி. 12 ஆம் நூற்றாண்டு)