ஆகுபெயர்

ஒரு சொல் தனக்குரிய பொருளைக் குறிக்காமல் அச்சொல்லோடு தொடர்புடைய வேறு ஒரு பொருளைக் குறிப்பது ஆகுபெயர் எனப்படும். ஒன்றினது இயற்பெயர் அதனோடு தொடர்புடைய வேறொன்றிற்கு ஆகி வருவது ஆகும்.

எ.கா: வகுப்பறை சிரித்தது

இந்த தொடரில் வகுப்பறை என்னும் இடப்பெயர் இடத்தை உணர்த்தாமல் வகுப்பறையில் உள்ள மாணவர்களை உணர்த்துவதால், இது ஆகுபெயர் ஆகும்.

“பொருள் முதல் ஆறோடு அளவை சொல் தானி

கருவி காரியம் கருத்தன் ஆதியுள்

ஒன்றன் பெயரான் அதற்கு இளை பிறிதைத்

தொல்முறை உரைப்பன ஆகுபெயரே”         -நன்னூல் 290

ஆகுபெயர் பதினெட்டு வகைப்படும். அவையாவன,

  1. பொருளாகு பெயர்
  2. சினையாகு பெயர்
  3. காலவாகு பெயர்
  4. இடவாகு பெயர்
  5. பண்பாகு பெயர்
  6. தொழிலாகு பெயர்
  7. எண்ணலளவையாகு பெயர்
  8. எடுத்தலளவையாகு பெயர்
  9. முகத்தலளவையாகு பெயர்
  10. நீட்டலளவையாகு பெயர்
  11. சொல்லாகு பெயர்
  12. காரியவாகு பெயர்
  13. கருத்தாவாகு பெயர்
  14. உவமையாகு பெயர்
  15. அடையடுத்த ஆகுபெயர்
  16. தானியாகு பெயர்