1774 ஆம் ஆண்டு, ஜோசப் பிரிஸ்ட்லி என்பவர் வளிமண்டலத்தில் ஆக்‌ஸிஜன் உள்ளதென்பதை கண்டுபிடித்தார்.

ஆக்‌ஸிஜன் (Oxygen), நாம் வாழும் நில உலகத்தில் யாவற்றினும் மிக அதிகமாகக் கிடைக்கும் தனிம வேதிப் பொருள்.

வேதியியலில் இதற்கான குறியீடு O ஆகும்.

ஓர் ஆக்சிசன் அணுவின் கருவினுள்ளே 8 நேர்மின்னிகளும் அதற்கு இணையாக கருவைச்சுற்றி 8 எதிர்மின்னிகளும் பல்வேறு சுழல் பாதைகளில் சுழன்றும் வருகின்றன.

எனவே ஆக்சிசனின் அணு எண் 8 ஆகும்.

அணுக்கருவினுள் நேர்மின்னிகள் அன்றி 8 நொதுமிகளும் (நியூட்ரான்களும்) உள்ளன.

இது தனிம அட்டவணையில் நெடுங்குழு 16 தனிமங்கள் குழுவின் அங்கமாகும்.

உயரிய வினையாற்றும் அலோக தனிமமும் ஆக்சிசனேற்றியுமான ஆக்‌ஸிஜன் பெரும்பாலான தனிமங்களுடன் எளிதாக சேர்மங்களை (குறிப்பாக ஆக்சைடுகளை) உருவாக்குகின்றது.

திணிவின் அடிப்படையில், அண்டத்தில் மிகவும் செழுமையாக உள்ள வேதித் தனிமங்களில் நீரியம், ஈலியம் அடுத்து மூன்றாவதாக உள்ளது.

திட்ட வெப்ப அழுத்தத்தில், இத்தனிமத்தின் இரு அணுக்கள் பிணைந்து டையாக்சிசன் என்ற ஈரணு மூலக்கூற்று வளிமமாக விளங்குகின்றது;

இந்நிலையில் இதற்கு வண்ணம், வாசனை, சுவை எதுவும் இல்லை.

இந்நிலையின் வேதியியல் குறியீடு O2 ஆகும்.

வளி மண்டலக் காற்றில் நைட்ரசனுக்கு அடுத்து செழிப்புற்றிருப்பது ஆக்‌ஸிஜன்.

இது பெரும்பாலும் பிற தனிமங்களோடு இணைந்த நிலையிலேயே நில உலகத்தில் கிடைக்கின்றது.

இதன் செழுமை (பரும அளவில்) 20.95 விழுக்காடு.

நீர் மண்டலப் பகுதியில் ஆக்சிசனின் செழுமை (எடை அளவில்) 85.89 விழுக்காடு.

பூமியின் மேலோட்டுப் பகுதியில் கிடைக்கும் கனிமங்களில் ஆக்சைடாகக் கிடைக்கிறது.

அந்த வகையில் இதன் செழுமை (எடை அளவில்) 49.13 விழுக்காடு.

மனித உடலில் 3 ல் 2 பங்கும், நீரில் பத்தில் 9 பங்கும் ஆக்சிசனாகும்.

வாழும் உயிரினங்களில் காணப்படும் புரதங்கள், கரியமிலங்கள், கார்போஹைட்ரேட்டுக்கள், கொழுப்புக்கள் போன்ற கரிம மூலக்கூறுகளில் ஆக்‌ஸிஜன் உள்ளது;

அதேபோல, விலங்குகளின் கூடுகள், பற்கள், எலும்புகள் ஆகியவற்றில் உள்ள முக்கிய அங்கக சேர்மங்களிலும் ஆக்சிசன் உள்ளது.

மேலும் உயிரினங்களின் திணிவில், பெரும்பகுதி நீராக இருப்பதால் (மனித உடலில் மூன்றில் இரண்டு பங்கு நீராகும்) ஆக்‌ஸிஜன் இருக்கின்றது.

ஆக்‌ஸிஜன் தனிமத்தை நீலப்பச்சைப்பாசி, பாசி மற்றும் தாவரங்கள் உருவாக்குகின்றன;

அனைத்துயிர் உயிரணு ஆற்றல் பரிமாற்றங்களிலும் ஆக்‌ஸிஜன் பயன்படுத்தப்படுகின்றது.

நில உருண்டையின் காற்று மண்டலத்தில் உள்ள வளிமங்களில் முக்கியமான இரண்டு வளிமங்களில் ஆக்சிசன் ஒன்றாகும் (மற்றது நைட்ரஜசன்).

உயிரினங்களின் உயிர்வாழ்வுக்கும் மிக இன்றியமையாது தேவைப்படுவது இந்த ஆக்‌ஸிஜன்.

இதனால் இது உயிர்வளி என்றும் பிராணவாயு என்றும் அழைக்கப்படுகிறது.

எனினும், நிலவுருண்டையின் வரலாற்றில் தொல்பழங்காலத்தில் ( சுமார் 2.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்) இருந்த உயிரினங்களுக்கு ஆக்சிசன் ஒரு நச்சுப் பொருளாக இருந்தது.

அன்றிருந்த உயிரினங்களுக்கு ஆக்‌ஸிஜன் தேவை இல்லாமல் இருந்தன.

ஆனால் சில வகையான நுண்ணுயிரிகளின் நுண்ணுடலின் இயக்கத்தின் விளைவால் ஆக்‌ஸிஜன் வெளிவிடப்பட்டது.

இப்படி ஆக்‌ஸிஜன் அதிகம் வெளியிடப்பட்டதால் அன்றிருந்த உயிரினங்கள் மாய்ந்தன என்றும் அறிஞர்கள் கருதுகின்றார்கள், பிற்காலத்தில் நில உலகத்தில் ஆக்‌ஸிஜன் அளவு கூடியதற்குக் காரணம், ஒளிச்சேர்க்கை வழி ஆற்றல் பெற்று ஆக்சிசனை வெளிவிடும் நுண்ணுயிர்களின் இயக்கத்தால்தான்.

இவ்வகையான ஒளிச்சேர்க்கை நுண்ணுயிரிகளும் பாசி போன்ற எளிய நிலைத்திணை வகைகளும்தான் நிலவுலகில் உள்ள ஆக்சிசனில் முக்கால் பங்கை (3/4) ஆக்கித்தருகின்றன.

மீதமுள்ள கால் பங்கை (1/4) மரஞ்செடிகொடி வகைகள் ஆக்குகின்றன.

கார்பன் டை ஆக்சைடு + நீர் + சூரியஒளி → மாப்பொருள் + ஆக்சிசன்.

பெரும்பாலான உயிரினங்கள் மூச்சு விடும்போது ஆக்சிசன் பயன்படுத்தப்படுவதால் அவை உயிர்வாழத் மிகத் தேவையான ஒன்றாக விளங்குகிறது.

இருப்பினும் மிகவும் வீரியமான வேதிவினையாற்றும் இத்தனிமம் தனிநிலையில் நிலைத்தில்லாமையால் புவியின் வளிமண்டலத்தில் கிடைப்பதற்கு சில உயிரினங்கள் சூரிய ஒளியைப் பயன்படுத்தி தொடர்ந்து ஒளித்தொகுத்தல் வினையாற்றி நீரிலிருந்து மீளுருவாக்க வேண்டியுள்ளது.

ஆக்சிசனின் மற்றொரு தனிமப் புறவேற்றுருவான ஓசோன் (O
3) புற ஊதாக் கதிர் வீச்சை உள்வாங்கிக் கொள்வதன் விளைவாக மீயுயரத்தில் உள்ள கமழிப் படலம் உலகத்தை புற ஊதாக் கதிர் தாக்குதலிலிருந்து காக்கின்றது.

ஆனால் புவியின் தரையருகே ஓசோன் ஓர் மாசுபொருளாக விளங்குகிறது. இதனினும் உயரத்தில் உள்ள பூமியின் தாழ் வட்டப்பாதை உயரங்களில், குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலுள்ள ஆக்சிசன் அணுக்கள் விண்கலங்களின் அரிப்பிற்கு காரணமாகின்றன.

நீர்மநிலை காற்றை பகுதிபடக் காய்ச்சி வடிப்பு, செயோலைற்றுகளைப் பயன்படுத்தி அழுத்த-சுழற்சி மூலம் காற்றிலிருந்து ஆக்சனை செறிவுறுத்தல், நீரின் மின்னாற்பகுப்பு மற்றும் பிற முறைகளில் தொழில்முறையில் ஆக்‌ஸிஜன் தயாரிக்கப்படுகிறது.

இது எஃகு, நெகிழி, துணி தயாரிப்பு, இரும்பு மற்றும் பிற உலோகங்களை ஆக்சி-எரிபொருள் பற்ற வைத்தல், வெட்டுதல், ஏவூர்தி உந்துகை, ஆக்‌ஸிஜன் சிகிட்சை போன்றவற்றில் பயன்படுத்தப்படுகின்றது.

தவிரவும் வானூர்தி, நீர்மூழ்கிக் கப்பல், மனித விண்வெளிப்பறப்பு மற்றும் தாவுதலிலும் உயிர்தாங்கி அமைப்பாக பயன்படுத்தப்படுகின்றது.

ஆக்‌ஸிஜனை 1773 அல்லது அதற்கு முன்பாகவே உப்சாலாவில் கார்ல் வில்லியம் சீலேயும், 1774இல் சோசப்பு பிரீசிட்லியும் தனித்தனியே கண்டறிந்தனர்; இருப்பினும் பிரீசிட்லியே தனது கண்டுபிடிப்பை முதலில் பதிப்பித்ததால் அவருக்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. ஆக்சிசன் என்ற பெயர் 1777இல் அந்துவான் இலவாசியேயால் கொடுக்கப்பட்டது.

ஆக்‌ஸிஜன் மூலக்கூறில் பிணைப்புத் தரம் – 2

இரும்பு துரு பிடிக்க காரணமான வாயு ஆக்‌ஸிஜன் ஆகும்.

நிறம், மற்றும் மணம்

ஒரு வாயுவாக ஆக்‌ஸிஜனுக்கு நிறமும், மணமும் கிடையாது. ஆனால் திரவ மற்றும் திட வடிவங்களில், இது, வெளிர் நீல நிறமாக உள்ளது.