இந்திய உணவுக் கழகம் (FCI) 1965 ஆம் ஆண்டு, ஜனவரி, 14 இல் ஏற்படுத்தப்பட்டது. நாடு முழுவதும் பொது விநியோகத்தின் கீழ் உணவு தாணியங்களை வழங்கும் குறிக்கோளுடன் உருவாக்கப்பட்டது.

தேசிய உணவு பாதுகாப்பினை உறுதி செய்வதற்கு உணவு தாணியங்கள் போதுமான அளவு வைப்பு மற்றும் போதுமான அளவு செயல்பாடினை நிர்ணயிப்பதற்காக ஏற்படுத்தப்பட்டது. தற்பொழுது இதன் தலைமையகம் புதுடெல்லியில் அமைந்துள்ளது.

இது தேசிய உணவுக் கொள்கையின் கீழ்வரும் நோக்கங்களை செயல்படுத்த உருவாக்கப்பட்டது:

  • விவசாயிகளின் நன்மையைக் கருத்தில்கொண்டு பயனுறு விலை ஆதரவை நல்குவது
  • பொது விநியோக முறைக்காக நாடு முழுமையும் உணவுத் தானியங்களை வழங்குதல்
  • தேசிய உணவு பாதுகாப்பிற்காக ஏற்றுக்கொள்ளத் தக்க செய்பணி மற்றும் இடைநிலை உணவுத்தானிய இருப்பை பராமரித்தல்

இந்தியாவின் பெரிய நிறுவனங்களில் ஒன்றாக இந்திய உணவுக் கழகம் உள்ளது.

ஆசியாவின் மிகப்பெரும் வழங்கல் சங்கிலி மேலாண்மை நிறுவனமாகவும் விளங்கக்கூடும்.

ஐந்து மண்டல அலுவலகங்களுடனும் 26 வட்டார அலுவலகங்களுடனும் செயல்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் இந்திய உணவுக் கழகம் இந்திய கோதுமை உற்பத்தியில் 15-20 விழுக்காடும் அரிசி உற்பத்தியில் 12-15 விழுக்காடும் கொள்முதல் செய்கிறது.

இவற்றை இந்திய அரசு நிர்ணயித்த விலையில் விவசாயிகளிடமிருந்து வாங்குகிறது.

இந்த விலை குறைந்தபட்ச ஆதரவு விலை (Minimum support Price) எனப்படுகிறது.

தானியங்கள் சராசரி நியாய தர நிர்ணயத்தைக் கொண்டிருக்கும் வரை எந்த அளவிற்கும் கொள்முதல் செய்ய இக்கழகத்திற்குத் தடை இல்லை.

இந்திய அரசு


மாநிலங்கள்


யூனியன் பிரதேசங்கள்


முக்கிய நகரங்கள்


இந்திய ஆறுகள்