இந்திய தாவரவியல் கள ஆய்வு மையம் (Botanical Survey of India)

1890, பிப்ரவரி 13 – இல் முதன் முதலில் பொட்டானிக்கல் சர்வே உருவாக்கப்பட்டு பின்னர் இந்தியத் தாவரவியல் கள ஆய்வு மையம் எனப் பெயரிடப்பட்டது.

இந்தியப் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் பொருட்டு இந்தியச் சுதந்திரத்திற்குப் பின் நாட்டின் தாவர வளங்களைப் பாதுகாக்க மற்றும் பராமரிக்க வேண்டுமென உணரப்பட்டது.

பத்மஶ்ரீ முனைவர் E.K.ஜானகியம்மாள் அவர்கள் 1952 அக்டோபர் 14 ஆம் தேதியன்று இச்சிறப்புப் பணியில் அமர்த்தப்பட்டார்.

1954, மார்ச், 29 – ஆம் தேதி இந்திய அரசு அனுமதி அளித்தபின் இறுதியாக கொல்கத்தாவை தலைமையிடமாகக் கொண்டு தாவரவியல் கள ஆய்வு மையம் (BSI) மாற்றியமைக்கப்பட்டது.

ஜம்முவிலுள்ள தாவித் தாவரவியல் பூங்காவானது முனைவர் E.K.ஜானகியம்மாள் பெயரில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்திய அரசு


மாநிலங்கள்


யூனியன் பிரதேசங்கள்


முக்கிய நகரங்கள்


இந்திய ஆறுகள்