1921 – ஆம் ஆண்டு, இந்தியாவில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.

1951 – 1952 – ஆண்டில் இந்தியாவில் முதல் பொதுத்தேர்தல் நடைபெற்றது, அப்பொழுது 489 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.

2014 – இந்திய தேர்தல் ஆணையம், இந்தியத் தேர்தலில் நோட்டா (NOTA) முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

2021, டிசம்பர், 21 – வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் வகையிலான தேர்தல் சீர்திருத்த மசோதா மக்களவையைத் தொடர்ந்து மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது.

2022, ஜனவரி, 07 – நாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதிகளின் வேட்பாளர் செலவினங்களுக்கான நிதித்தொகை அதிகரிப்த்து அறிக்கை வெளியிட்டது இந்திய தேர்தல் ஆணையம், மேலும், நாடாளுமன்ற தொகுதிக்கு ₨75 லட்சம் – ₨90 லட்சமாக தேர்தல் செலவின நிதி ஒதுக்கீடு, சட்டமன்ற தொகுதிக்கு ₨28 லட்சம் – ₨40 லட்சமாக தேர்தல் செலவின நிதி ஒதுக்கீடு என வரையறுக்கப்பட்டுள்ளது.

2022, ஜீன், 18 – இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும், தேர்தல் சட்டத்தில் பாலின சமத்துவத்தை பேணும் வகையில் மனைவி என்ற வார்த்தை வாழ்க்கைத்துணை எனக் குறிப்பிட்டு திருத்தம் செய்யப்படும் என்றும் தொலைத்தூர பகுதிகள், வெளிநாடுகளில் பணியாற்றும் ராணுவ வீரர்களின் வாழ்க்கைத்துணை வாக்களிக்க வாய்ப்பு ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்திய தேர்தல் ஆணையம் (Election Commission of India) இந்திய அரசியலமைப்புச் சட்டத்தால் நிறுவப்பெற்ற ஒரு அமைப்பு. தன்னாட்சி பெற்ற இவ்வமைப்பு பகுதியளவு நீதித்துறை போன்றது.

இதன் பணி மக்கள் மன்றங்களுக்கான பெயராட்சி உறுப்பினர் தேர்தல்களை நடுநிலையோடு நடத்துவதாகும்.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் இவ்வாணையத்திற்கு இந்திய குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர், மாநில சட்டப்பேரவைகள், மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களை இயக்கவும் மேற்பார்வையிடவும், நடத்தவும் பணித்துள்ளது.

இது தொடர்பான சட்டம் மக்கள் பெயராண்மைச் சட்டம், 1950 (Representation of People Act, 1950) ஆகும்.

இந்தியாவின் முதல் தலைமைத் தேர்தல் ஆணையர் – சுகுமார் சென்

ராஜீவ் காத்தி அவர்கள், வாக்களிக்கும் வயதை 21 இல் இருந்து, 18 ஆக குறைத்தார்.

இந்திய அரசு


மாநிலங்கள்


யூனியன் பிரதேசங்கள்


முக்கிய நகரங்கள்


இந்திய ஆறுகள்