இந்திய முப்படை (அ) இந்திய பாதுகாப்புப் படைப் பிரிவு
முப்படைகளின் தலைவர் குடியரசுத் தலைவர் ஆவார்.
விமானப் படை
1932, அக்டோபர், 08 – அன்று இந்திய வான்படை, அன்று இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டது.
இதனை நினைவுப்படுத்தும் விதமாகவும், விமானப்படையினரின் தியாகங்களைப் போற்றும் விதமாகவும் அக்டோபர், 8 ஆம் தேதி இந்திய விமானப்படை தினமாகக் கொண்டாடப்படுகிறது.
இந்திய விடுதலைக்குப் பின் இந்திய பாதுகாப்புப்படையின் ஒரு பிரிவானது.
இந்திய வான்படை உலகின் நான்காவது பெரிய வான்படையாகத் திகழ்கிறது.
இப்படைக்கு இந்தியக் குடியரசுத் தலைவரே முதற்பெரும் தலைவர் ஆவார்.
1947 இல் இந்தியா சுதந்திரம் பெற்றபின் 4 முறை பாகிஸ்தானுடனும், ஒரு முறை சீனாவுடனும் போரில் ஈருபட்டது. இதில் விமானப்படையினரின் பங்கு மகத்தானது.
2021, டிசம்பர், 08 – அன்று, நீலகிரி மாவட்டம், குன்னூரில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் இத்தியாவின் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.
இந்திய விமானப்படையில் 1500 க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் உள்ளன.
இந்திய விமானப் படையின் Honorary பதவி பெற்ற ஒரே விளையாட்டு வீரர் சச்சின் டென்டுல்கர் ஆவார்.
ஆசியாவின் ஒரே கடற்படை விமான அருங்காட்சியகம் கோவாலுள்ள பனாஜியில் அமைந்துள்ளது.