இந்திரா பிரியதர்சினி 1917ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் நாள் காசுமீரி பண்டிட் குடும்பத்தைச் சேர்ந்த ஜவஹர்லால் நேருவிற்கும், கமலா நேருவுக்கும் ஒரே குழந்தையாக பிறந்தார்.

இந்திராவின் தாத்தா மோதிலால் நேரு இந்தியாவின் உத்திரபிரதேசத்தில் உள்ள அலகாபாத்தில் ஒரு செல்வவளம் மிக்க வழக்கறிஞர் ஆவார்.

இந்திரா பிரியதர்சினி காந்தி அவர்கள் இந்தியாவின் மூன்றாவது பிரதமர் ஆவார்.

இந்திரா காந்தி அவர்கள் இந்தியாவின் முதல் பெண் பிரதமர் ஆவார்.

இந்திரா காந்தி அவர்கள் இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் ஓரே மகளும் ஆவார்.

1966, ஜனவரி 19 இல் பிரதமராக பதவியேற்றார்.

1977, மார்ச் 24 வரை பதவியில் இருந்தார்.

1980, ஜனவரி 14 இல் மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பின்னர் 1984 இல் இவர் கொலை செய்யப்படும் வரை பிரதமராகவே இருந்தார்.

ஒரு சிறந்த அரசியல் திட்டமிதலாளரும், சிந்தனையாளரும் ஆவார்.

1969 இல் குடியரசுத் தலைவர் நியமனத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தொடர்ந்து ஆளும் கட்சியாக இருந்த இந்திய தேசிய காங்கிரஸ் பிளவுப்பட்டது.

இந்திரா காங்கிரஸ் என்று அழைக்கப்பட்ட இந்திரா காந்தி அவர்கள் தலைமையிலான அரசு தொடர்ந்து ஆட்சியில் இருந்தது.

1971 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் இந்திரா காந்தி அவர்களது கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்தது. அச்சமயத்தில் மேற்கு, கிழக்கு பாகிஸதானுக்கிடையில் ஏற்பட்ட பிணக்கில் ஏற்கட்ட பிணக்கில், கிழக்கு பாகிஸதானின் தனி நாடு கோரிக்கைக்கு ஆதரவாகப் பாகிஸ்தானுடன் போரைத் தொடங்கி, கிழக்கு பாகிஸ்தானுக்கா படைகளை அனுப்பினார். இந்த வெற்றிகரமான நடவடிக்கையால் கிழக்கு பாகிஸ்தான், பாகிஸ்தானிடமிருந்து பிரிந்து வங்காளதேசம் என்ற தனி நாடாகியது.

1975 இல் அவசர நலையை அறிவித்த இந்திரா காந்தி அரசியல் சட்டத்தின் 352 ஆவது விதியை பயன்படுத்தி தனக்கான அதிகாரங்களை அதிகப்படுத்திக் கொண்டதன் மூலம் எதிர் கட்சிகளை முடக்க முயற்சித்தார் என குற்றம் சாட்டப்பட்டார். 19 மாதங்கள் நீடித்த அவசர நிலை இந்திரா காந்தி அவர்கள் செல்வாக்கை பெறுமளவு குறைத்தது.

இவருக்கு வாரிசாக வரக்கூடியவர் என்று எதிர்பார்க்கப்பட்ட சஞ்சய் காந்தி தானே செலுத்திய விமானம் விழுந்து நொறுங்கியதால் காலமானார்.

சீக்கியர்களின் புனிதக் கோயிலான பொற் கோயிலுக்குள் ஆயுதங்களுடன் ஒளிந்திருப்பதாகக் கருதப்பட்ட தீவிரவாதிகளையும், அவர்களின் தலைவரையும் பிடிக்க இராணுவம் பொற்கோயிலுக்குள் புக அனுமதி வழங்கினார். தொடர்ந்து இடம்பெற்ற படை நடவடிக்கைகள் இந்திராவை சீக்கியர்களின் கோபத்துக்கு ஆளாக்கியது.

இதன் தொடர்ச்சியாக, அக்டோபர் 31, 1984 இல் சீக்கியர்களான, அவரது சொந்தப் பாதுகாவலர் இருவராலேயே சுட்டுக் கொல்லப்பட்டார்.

1959 மற்றும் 1960ன் போது, இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் பதவிக்காக நின்ற இந்திரா காந்தி அதில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1964 மே 27இல் நேரு மரணமடைந்தார், புதிய பிரதம மந்திரி லால் பகதூர் சாஸ்திரியின் வலியுறுத்தலின் பேரில் இந்திய தேர்தல்களில் போட்டியிட்டு, உடனடியாக தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டதன் மூலம் இந்திய அமைச்சரவையிலும் பங்கெடுத்தார்.

இந்திரா பாகிஸ்தானின் புதிய ஜனாதிபதி சுல்பிகார் அலி பூட்டோவை ஒரு வாரகால மாநாட்டிற்கு சிம்லாவிற்கு வர அழைப்பு விடுத்தார். பேச்சு வார்த்தைகளின் பல-தோல்விகளுக்குப் பின்னர், இரண்டு நாட்டு தலைவர்களும் இறுதியில் சிம்லா உடன்படிக்கையில் கையெழுத்திட்டனர்.

1967ல் ஒரு தேசிய அணுசக்தி திட்டம் தொடங்கப்பட்டது. 1974ல், மறைமுகமாக “சிரிக்கும் புத்தர்” என்ற இரகசிய சொல்லுடன், ராஜஸ்தானில் பொக்ரான் என்ற இடத்தில் இந்தியா வெற்றிகரமாக ஒரு நிலத்தடி அணுச்சோதனை நடத்தியது.

இந்த சோதனை அமைதி நோக்கம் கொண்டது தான் என்ற அறிவிப்புடன், இந்தியா உலகின் இளம் அணுசக்தி அதிகாரமாக உருவானது.

1960களின் ஆரம்பத்தில் உருவாக்கப்பட்ட, மாவட்ட வேளாண் விரிவாக்க திட்டத்திற்கு அளிக்கப்பட்ட பெயர் தான் பசுமை புரட்சி. இது ஏராளமான, விலைமதிப்பற்ற தானியங்களை நகர்புறவாசிகளுக்கு உறுதியளித்தது.

இவர்களின் ஆதரவை இந்திரக காந்தி உள்ளிட்ட அனைத்து அரசியல்வாதிகளுமே மிகவும் நாடியிருந்தார். இந்த திட்டம் நான்கு முன்னுரையைக் கொண்டிருந்தது:

  1. புதிய வகை விதைகள்,
  2. இந்திய வேளாண்மையில் இரசாயனமாக்கலின் தேவையை ஏற்றுக்கொள்வது, அதாவது உரங்கள், பூச்சிகொல்லிகள், களை கொல்லிகள் மற்றும் இதர பிற
  3. புதிய மற்றும் மேம்பட்ட தற்போதிருக்கும் விதை வகைகளை விரிவு செய்ய தேசிய மற்றும் சர்வதேசிய கூட்டுறவிற்கு பொருப்பு
  4. உயர்கல்வி கல்லூரிகளில் விஞ்ஞான, வேளாண் பயிலகங்களை விரிவு செய்வதற்கான திட்டம்.

Peoples and Problems என்ற நூலின் ஆசிரியர் இந்திராகாந்தி ஆவார்.

இந்திய வங்கிகளை தேசிய மயமாக்கினார்.
சிந்து சமவெளி நாகரிகம் (கி.மு. 3000 – கி.மு. 2500)

மகாவீரர் (கி.மு. 599 – கி.மு. 527)

கௌதம புத்தர் (கி.மு. 563 – கி.மு. 483)
கி.பி. 1201 முதல் கி.பி 1500 ஆண்டு வரை


கி.பி. 1501 முதல் கி.பி 1700 ஆண்டு வரை


கி.பி. 1701 முதல் கி.பி 1800 ஆண்டு வரைகி.பி. 1801 முதல் கி.பி 1850 ஆண்டு வரை


கி.பி. 1851 முதல் கி.பி 1900 ஆண்டு வரை


கி.பி. 1901 முதல் கி.பி 1951 ஆண்டு வரை


கி.பி. 1951 முதல்புதிய கற்காலம்


சங்ககால தமிழ் புலவர்கள்

கம்பர் (கி.பி. 12 ஆம் நூற்றாண்டு)