இலக்கணக் குறிப்பு
ஒன்றே – ‘ஏ’காரம் தேற்றேகாரம்
வாழ்க்கை கூறல் – தொழிற்பெயர்கள்
நண்ணும் பருவம் – ‘செய்யும்’ என்னும் வாய்ப்பாட்டுப் பெயரெச்சம்
இளமைப்பருவம், தமிழன்னை – இருபெயரொட்டுப் பண்புத் தொகைகள்
அசைத்த மொழி, இசைத்த மொழி – பெயரெச்சங்கள்
திருந்துமொழி, பொருந்துமொழி – வினைத்தொகைகள்
வாழிய – வியங்கோள் வினைமுற்று
வாழிய வாழிய – அடுக்குத்தொடர்
உலகம் – இடவாகுபெயர்
வாழ்த்துவம் – தன்மைப் பன்மை எதிர்கால வினைமுற்று
அடி வாழ்த்துவம்(அடியை வாழ்த்துவம்) – இரண்டாம் வேற்றுமைத் தொகை
வந்தவர், போனவர் – முரண்தொடை
இல்லாதவர் – எதிர்மறை வினையாலணையும் பெயர்
யாரையும் நம்பி -முற்றும்மை
சான்றீர் – விளி
கயன்முள் அன்ன – உவம உருபு
கயன்முள் – ஆறாம் வேற்றுமைத் தொகை
திரைகவுள் – வினைத்தொகை
கடுந்திறல், நல்லாறு, கூர்ம்படை – பண்புத்தொகைகள்
கணிச்சிக் கூர்ம்படை – இருபெயரொட்டுப் பண்புத்தொகை
இரங்குவிர் – முன்னிலைப் பன்மை வினைமுற்று
ஓம்புமின் – ஏவல் பன்மை வினைமுற்று
ஓம்புமின் = ஓம்பு + மின்
ஓம்பு – பகுதி
மின் – ஏவல் பன்மை விகுதி
ஆற்றீர் – முன்னிலைப் பன்மை எதிர்மறை வினைமுற்று
ஆற்றீர் = ஆற்று + ஆ + ஈர்
ஆற்று – பகுதி
ஆ – எதிர்மறை இடைநிலை புணர்ந்து கெட்டது
ஈர் – முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதி
படூஉம் – இசைநிறையளபெடை
பழ ஆவணம், தீநெறி, கடும்பகை, முக்குடை – பண்புத்தொகைகள்
மெய்ப்பொருள், சுவர்க்கபதி – இருபெயரொட்டுப் பண்புத்தொகைகள்
தற்சூழ – இரண்டாம் வேற்றுமைத்தொகை
கன்னிபாலன் – நான்காம் வேற்றுமைத்தொகை
பொங்குதாமரை – வினைத்தொகை
கண்ணுதல்(நுதல்கண்) – முன்பின்னாய்த் தொக்கது இலக்கணப் போலி
என்கோ – தன்மை ஒருமை வினைமுற்று
ஆனாத செல்வம், உணர்ந்த முதல்வன் – பெயரெச்சம்
உயர்ந்தோய், செறுத்தோய் – முன்னிலை வினைமுற்றுகள்
புடைபுடை – அடுக்குத்தொடர்
இரட்ட, நிழற்ற, கவிப்ப, தெருள – ‘செய’வென் வாய்ப்பாட்டு வினையெச்சங்கள்
பதத்துணை(பதத்தின் துணை) – ஐந்தாம் வேற்றுமைத்தொகை
பூவம்(பூர்வம்) – இடைக்குறை
சொற்பதம்(சொல்லினதுவழி) – ஆறாம் வேற்றுமைத்தொகை
சொற்பதம்(சொல்பதம்) – ஒருபொருட்பன்மொழி
புல்நுனி – ஆறாம் வேற்றுமைத்தொகை
கண்ணர் வெள்ளம், பசிக்கயிறு, பம்பரம், மெல்லிய காம்பு, சிறுவிரல், தீக்குச்சிகள் – உருவகங்கள்
பாடுகிறாய் – முன்னிலை ஒருமை வினைமுற்று
வெறுங்கை, கருங்கல் – பண்புத்தொகைகள்
விரல்கள் பத்தும் தோள்கள் இரண்டும் – முற்றும்மைகள்
மலர்ச்சோலை – இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை
தொடுவானம் – வினைத்தொகை
தெற்கு வடக்காய் – முரண்தொடை
மாவலி – உரிச்சொற்றொடர்
கங்கையும் சிந்துவும், விண்ணிலும் மண்ணிலும் – எண்ணும்மைகள்
சிந்தித்தேன் – தன்மை ஒருமை வினைமுற்று
கன்றுகுரல் – ஆறாம் வேற்றுமைத்தொகை
தலை குனிந்து – இரண்டாம் வேற்றுமைத்தொகை
சட்டதிட்டம் – உம்மைத்தொகை
நீதிநூல் – இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை
நீரூற்று – ஆறாம் வேற்றுமைத்தொகை
விக்கிவிக்கி – அடுக்குத்தொடர்
பேரோடும் புகழோடும் – எண்ணும்மை
பேரறிவு – பண்புத்தொகை
தீராத வறுமை – எதிர்மறைப் பெயரெச்சம்
பழுக்கின்றது – நிகழ்கால வினைமுற்று
ஓடு – ஏவல் வினைமுற்று
வாழ்க்கை – தொழிற்பெயர்
அம்மா – வியப்பிடைச்சொல்
தினந்தினம் – அடுக்குத்தொடர்
உயர்ச்சினை – வினைத்தொகை
சிறைப்பறவை – இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தோகை
பகலுறை – ஏழாம் வேற்றுமை தொகை
முதுமரம் – பண்புத் தொகை
கடிமகள் – உரிச்சொல் தொடர்
தண்பதம், நல்லகம், அருந்துயர், நெடுந்தேர் – பண்புத் தொகை
புல்லார் – இரண்டாம் வேற்றுமைத் தொகை
வல்விரைந்து – ஒருபொருட்பன்மொழி
ஊர்மதி – முன்னிலை ஒருமை வினைமுற்று
வந்தனன் = வா+த்(ந்)+த்+அன்
வா – பகுதி. ‘வ’ எனக் குறுகியது விகாரம்
த் – சந்தி. ‘ந்’ எனத் திரிந்தது விகாரம்
த் – இறந்தகால இடைநிலை
அன் – சாரியை
அன் – ஆண்பால் வினைமுற்று விகுதி