இந்தியாவின் அண்டை நாடான இலங்கை பற்றிய சில தகவல்கள்


1802 – ஆம் ஆண்டு, முதல் தமிழ் பத்திரிக்கை இலங்கையில் தொடங்கப்பட்டது. அதன் பெயர் ‘சிலோன் கெஜட்’ ஆகும். இப்பத்திரிக்கையானது, ஆங்கிலம், சிங்களம் மற்றும் தமிழ் என மும்மொழிகளில் வெளிவந்தது.

1956, ஜூலை, 06 – சிங்களம் இலங்கையின் அதிகாரப்பூர்வ மொழியானது.

1960 – ஆம் ஆண்டு, சிறிமாவோ பண்டாரநாயக்கா இலங்கையின் பிரதம மந்திரியாக முதல் முறையாக, 1960-1965 தேர்ந்தெடுக்கப்பட்டார், மேலும், இவர் உலகின் முதல் பெண் பிரதமராவார்.

1972 , மே, 22 ஆம் நாள், பிரித்தானிய ஆட்சி முழுமையாக முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு, இலங்கையின் குடியரசு தினம் பிரகடனப்படுத்தப்பட்டது.

நான்காம் உலகத்தமிழ் மாநாடு1974 இலங்கை

சிறிமாவோ பண்டாரநாயக்கா இலங்கையின் பிரதம மந்திரியாக மூன்று முறை, 19601965, 19701977 மற்றும் 19942000 ஆகிய காலப்பகுதிகளில் பதவியில் இருந்தார்.

2019, ஏப்ரல், 17 – அன்று, இலங்கையின் முதல் செயற்கைக்கோளான Ravan1 ஆனது அமெரிக்காவால் விண்ணில் ஏவப்பட்டது.

2022, ஜூலை, 09 – பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம்.

2022, ஜூலை, 13 – இலங்கை அதிபர் கோட்டபய ராஜபக்ச ஒட்டுமொத்த இலங்கை மக்களின் எதிர்ப்பு காரணமாக பதவி விலகினார்.

2022, ஜூலை, 15 – இலங்கையில் மக்கள் போராட்டத்தையடுத்து அதிபர் கோத்தபய ராஜபக்ச பதவி விலகியதை அடுத்து இடைக்கால அதிபராக ரணில் விக்கிரசிங்கே பொறுப்பேற்றார்.


இலங்கையானது இந்தியப் பெருங்கடலின் முத்து என்று வர்ணிக்கப்படுகிறது.

மேலும், இது, இந்தியாவின் கண்ணீர்த்துளி என்றும் வர்ணிக்கப்படுகிறது.

உலகின் நான்காவது மிகப்பெரிய தேயிலை ஏற்றுமதியாளராக இலங்கை உள்ளது.

இலங்கையில், ஆறுகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் அதிக அளவில் உள்ளதால், அந்நாட்டின் 50% மின்சாரம் தண்ணீரிலிருந்தே பெறப்படுகிறது.

இலங்கையின் தேசியக் கொடியானது உலகின் பழமையான தேசியக் கொடிகளில் ஒன்று ஆகும்.