1956, நவம்பர், 1 – அன்று, இந்திய மாநிலங்கள் மறுசீரமைக்கப்பட்டபோது, லட்சத்தீவுகள் சென்னை மாகாணத்தில் இருந்து பிரித்து, நிர்வாக நோக்கங்களுக்காக ஒரு தனியான யூனியன் பிரதேசமாக அமைக்கப்பட்டது.

1973, நவம்பர், 1 – அன்று, லட்சத்தீவுகள், மினிகோய் மற்றும் அமிண்டிவி தீவுகள் ஆகிய பிரதேசங்களை ஒன்றிணைத்து இலட்சத்தீவுகள் என அழைக்கப்பட்டது.

2021 – டிசம்பர், 21 – இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் லட்சத்தீவில் பல தசாப்தங்களாக கடைபிடிக்கப்பட்டு வந்த வெள்ளிக்கிழமை விடுமுறை ரத்து செய்து, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளாக அறிவித்து புதிய காலண்டர் வெளியீடு.


இலட்சத் தீவுகள் என்று பெயர் கொண்டு இருப்பினும் இத்தீவிலுள்ள மொத்த தீவுகளின் எண்ணிக்கை – 27 மட்டுமே ஆகும்.

இலட்சத்தீவின் நிர்வாகத் தலைநகரம் – காவராத்தி ஆகும்.

லட்சத்தீவுகள் (Lakshadweep) இந்தியாவிலுள்ள யூனியன் பிரதேசங்களில் ஒன்று.

இது மொத்தம் 30 சதுர கி மீ பரப்பளவு கொண்ட 36 தீவுகளாக அமைந்துள்ளது.

கேரளக் கரைக்கு அப்பால் 200 முதல் 300 கிமீ தூரத்தில், அரபிக் கடலில் இது உள்ளது.

லட்சத்தீவுகள் கேரள உயர்நீதிமன்றத்தின் அதிகாரத்திற்கு உட்பட்டது.

முக்கிய தீவுகள் கவராட்டி, மினிக்கோய், அமினி என்பனவாகும்.

இலட்சத் தீவின் ஆட்சி மொழியான மலையாள மொழியுடன், ஆங்கிலம் மற்றும் திவேகி, ஜெசெரி ஆகிய வட்டார மொழிகள் பேசப்படுகின்றன.

மீன் பிடித்தல், மீன் பதப்படுத்தம் தொழில்கள் மற்றும் மீன் ஏற்றுமதி செய்தல், இத்தீவில் தென்னை மரங்கள் அதிகமாக உள்ளதால் தேங்காய் எண்ணெய் உற்பத்தி அதிக அளவில் உள்ளது. சுற்றுலா மூலம் அதிக வருவாய் ஈட்டுகிறது.

மத்திய கிழக்கிலிருந்து இந்தியாவுக்கு வரும் முக்கிய கப்பல் பாதைகளைப் பாதுகாக்க, ஒரு இந்திய கடற்படை தளமான, ஐஎன்எஸ் டிவீரகாஷாக், கவரட்டி தீவில் அமைக்கப்பட்டது.

அகத்தி வானூர்தித் தளம் கொச்சி மற்றும் பெங்களூரு நகரங்களை வான் வழியாக இணைக்கிறது.

மேலும் ஆறு பயணி கப்பல்கள் கொச்சி துறைமுகத்துடன் கடல் வழியாக இணைக்கிறது.

இந்தியச் சுற்றுலா பயணிகளும் இலட்சத் தீவுகளுக்கு சுற்றுலா செல்வதற்கு இந்திய அரசிடம் அனுமதி பெற வேண்டியுள்ளது.

வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் இலட்சத்தீவின் சில பகுதிகளுக்கு சுற்றுலா அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

பங்கராம் தீவு தவிர மற்ற பகுதிகளில் மதுபானம் அருந்த தடை செய்யப்பட்டுள்ளது.