உப்புச் சத்தியாகிரகம் அல்லது தண்டி நடைப்பயணம் அல்லது தண்டி யாத்திரை (Salt March) என்பது காலனிய இந்தியாவில் ஆங்கிலேயர் இந்தியர்கள் மீது விதித்த உப்பு வரியை அறவழியில் எதிர்க்கும் திட்டமிட்ட போராட்டமாகும்.

1930, மார்ச், 12 – இல் குஜராத் மாநிலத்திலுள்ள தண்டியில் தடையை மீறி உப்பெடுக்கும் நடைப்பயணமாகத் துவங்கியது.

1930 ஜனவரி 30 – ஆம் நாள் இந்திய தேசிய காங்கிரசு அறிவித்த முழு விடுதலை என்ற விடுதலைப் பிரகடனத்திற்குப் பிறகு ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்து அமைப்பு ரீதியாகச் செய்யப்பட்ட முதல் நடவடிக்கையாகும்.

1930, ஏப்ரல் 6 – இல், காந்தி தனது சபர்மதி ஆசிரமத்திலிருந்து 23 நாள்கள் 240 மைல் தூரத்திலுள்ள தண்டிக்கு நடை பயணத்தை வழி நடத்தினார்.

உப்பை உற்பத்தி செய்வதற்கு விதித்த தடையை மீறி வழியில் அவருடன் இந்தியர்கள் பெருமளவு எண்ணிக்கையுடன் இணைந்தனர்.

காந்தி தண்டியில் உப்புச் சட்டங்களை உடைத்தபோது, அது பேரளவில் சட்ட மறுப்பு இயக்கமாக இலட்சக்கணக்கான இந்தியர்களை ஆங்கிலேய ஆட்சிக்கெதிராகப் போராடத் தூண்டியது.

காந்தி மே 5, 1930 இல் தாராசனா சால்ட் வொர்க்ஸ் என்ற நிறுவனத்தில் அத்துமீறி நுழைந்து உப்பெடுக்கத் திட்டமிட்டிருந்தார்.

ஆனால் அதற்கு முன்பாகவே கைது செய்யப்பட்டார்.

தண்டி நடைப்பயணம் மற்றும் பிந்தைய நிகழ்வான தாராசனா சத்தியாகிரகம் இந்திய விடுதலை இயக்கத்தின் மீது உலகம் முழுதுமான கவனத்தை ஈர்த்தது.

விரிவான செய்தித் தாள்கள் மற்றும் செய்திச் சுருள் சேகரிப்புகளில் இவை இடம் பெற்றன.

உப்பு வரிக்கு எதிரான அறப்போர் ஓராண்டிற்குத் தொடர்ந்தது, இரண்டாம் வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொள்வதற்காகக் காந்தி சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

வைஸ்ராய் லார்ட் இர்வினுடன் பேச்சு வார்த்தை நடத்தியதில் உப்புச் சத்தியாகிரகம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

80,000 ற்கும் மேற்பட்ட இந்தியர்கள் உப்புச் சத்யாக்கிரகத்தின் விளைவாகச் சிறையிலடைக்கப்பட்டனர்.

இந்நடவடிக்கையானது இந்திய விடுதலை குறித்த உலகின் மற்றும் ஆங்கிலேயரின் கொள்கைகள் மீது கணிசமான விளைவினை ஏற்படுத்தியது.

மேலும் பெரும் எண்ணிக்கையிலான இந்தியர்களைச் சுறுசுறுப்புடன் இணைந்து முதல் முறையாகப் போராட வழிவகுத்தது, ஆனால் ஆங்கிலேயரிடமிருந்து பெரியளவிலான சலுகைகளை வெல்லத் தவறியது.

உப்புச் சத்தியாகிரகப் பிரச்சாரம் காந்தியின் கோட்பாடான வன்முறையற்ற அறப்போர் என்ற அறநெறியை அடிப்படையாகக் கொண்டது.

அதை அவர் “உண்மைச்-சக்தி” என வரையறுத்தார். சத்தியாகிரகம் என்ற சமற்கிருதச் சொல்லில் சத்யம் என்பது உண்மையையும் கிரகம் என்பது சக்தியையும் குறித்தது.

1930 களின் துவக்கத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் அதன் முக்கியச் செயல்முறையாகச் சத்யாக்கிரகத்தைத் தேர்வு செய்து ஆங்கிலேய ஆட்சியிலிருந்து இந்திய விடுதலையை வெல்லவும் அதற்கான நடவடிக்கையை அமைப்பாக்கம் செய்யவும் காந்தியை நியமித்தது.

காந்தி 1882 இல் ஆங்கிலேயர் விதித்த உப்புச் சட்டத்தைச் சத்யாக்கிரகத்தின் முதல் இலக்காகத் தேர்ந்தெடுத்தார்.

தண்டிக்கான உப்பு நடைப்பயணமும் தாராசனாவில் அறவழியில் போராடிய நூற்றுக்கணக்கான பொது மக்களைப் பிரித்தனிய காவலர்கள் அடித்ததும், சமூக மற்றும் அரசியல் அநீதியை எதிர்த்துப் போராடுபவர்களின் மீதான சட்ட அநீதியாக எடுத்துக் காட்டியது.

காந்தியின் சத்தியாக்கிரகப் போதனைகளும் தண்டி நடைப்பயணமும் அமெரிக்க மனித உரிமைச் செயல்வீரர் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் மீது செல்வாக்கினை கொண்டிருந்தது.

மேலும் 1960 களில் அவரது கருப்பர்கள் மற்றும் இதர சிறுபான்மை குழுக்களின் உரிமைகளுக்கான போரிலும் கணிசமான செல்வாக்கினைக் கொண்டிருந்தது.

தமிழ்நாட்டில் சி.இராஜகோபாலாச்சாரி தலைமையில் திருச்சியிலிருந்து வேதாலண்யம் கடற்கரையில் உப்பு காய்ச்சினால்.

1931 ஆம் ஆண்டு, இரண்டாவது வட்ட மேசை மாநாடு நடைபெற்றது.

காந்தி கைது செய்யப்பட்டதை அடுத்து, காங்கிரஸ் இம்மாநாட்டில் கலந்துகொள்வதை தடை செய்தது.

இதனால் சட்ட மறுப்பு இயக்கம் மீண்டும் ஆரம்பமானது.




சிந்து சமவெளி நாகரிகம் (கி.மு. 3000 – கி.மு. 2500)

மகாவீரர் (கி.மு. 599 – கி.மு. 527)

கௌதம புத்தர் (கி.மு. 563 – கி.மு. 483)




கி.பி. 1201 முதல் கி.பி 1500 ஆண்டு வரை


கி.பி. 1501 முதல் கி.பி 1700 ஆண்டு வரை


கி.பி. 1701 முதல் கி.பி 1800 ஆண்டு வரை



கி.பி. 1801 முதல் கி.பி 1850 ஆண்டு வரை


கி.பி. 1851 முதல் கி.பி 1900 ஆண்டு வரை


கி.பி. 1901 முதல் கி.பி 1951 ஆண்டு வரை


கி.பி. 1951 முதல்



புதிய கற்காலம்


சங்ககால தமிழ் புலவர்கள்

கம்பர் (கி.பி. 12 ஆம் நூற்றாண்டு)