1820 ஆம் ஆண்டு, மே, 12 அன்று, செவிலியர்களுக்கு எல்லாம் முன்னுதாரனமாகத் திகழும் ஃப்ளோரன்ஸ் நைட்டிங்கேல் இத்தாலியில் உள்ள ஃப்ளோரன்ஸ் நகரில் பிறந்தார்.
1850 ஆம் ஆண்டு, ஃப்ளோரன்ஸ் நைட்டிங்கேல், இங்கிலாந்திலுள்ள லண்டனில் பணிபுரிந்தபோது ரஷ்ய பேரரசுக்கும், பிடிட்டஷ் பேரரசுக்கும் இடையெ ஏற்பட்ட போரில் காயமடைந்த வீரர்களுக்காக சேவையாற்றினார்.
இரவில் கையில் ஒளி விளக்கை ஏந்தியபடியே எல்லா வார்டுகளையும் ஒரு முறை சுற்றிப் பார்த்துவிட்டு நோயாளிகள் அனைவரும் அமைதியாக உறங்குவதை உறுதி செய்த பிறகே இவர் உறங்கச் செல்வார்.
அதனால் தான் வரலாற்றில், இவரை, விளக்கேந்திய நங்கை (The Lady With The Lamp) என்று அழைக்கப்படுகிறார்.
1883 ஆம் ஆண்டு, ஃப்ளோரன்ஸ் நைட்டிங்கேல், விக்டோரியா அரசியிடமிருந்து, அரச செஞ்சிலுவை விருது பெற்றார்.
1907 ஆம் ஆண்டு, ஃப்ளோரன்ஸ் நைட்டிங்கேல், ஆர்டர் ஆஃப் மெரிட் என்ற விருதினை பெற்றார். இவர் இவ்விருதினைப் பெற்ற முதல் பெண்மணி என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் தனது 90 ஆவது வயது வரை சேவை மனப்பான்மையுடம் பணயாற்றினார்.
இவரது நினைவாகவே, உலக செவிலியர் தினம் உலகம் முழுவதும் மே மாதம், 12 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
நவீன செவிலியத்தை உருவாக்கிய பிளாரன்ஸ் நைட்டிங்கேலின் பிறந்தநாளன்று கொண்டாடப்படுகிறது.
செவிலியர் ஆற்றும் பங்கை இந்நாள் கௌரவிக்கிறது.