புவியின் சுற்றுச்சூழலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, புவி மாசடைவதை தடுக்கும் நோக்கத்தோடு அனைத்து நாடுகளிலும் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.

பூமிக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனையை உலக மக்கள் உணர வேண்டும் என கேலார்டு நெல்சன் (Gaylord Nelson) என்கிற அமெரிக்கர் கருதினார்.

எனவே, அவர் ஊர்வலம், பொதுக்கூட்டம், தர்ணா போன்றவற்றை மாணவர்களை கொண்டு நடத்தி வந்தார்.

1970 ஆம் ஆண்டு, ஏப்ரல் 22 ஆம் தேதி, புவியை பாதுகாக்க 2 கோடி பேர் கலந்துகொண்ட பேரணியை கேலார்டு நெல்சன் என்பவர் நடத்தினார். இதுவே உலக புவி தினமாக கடைபிடிக்கப்படுகிறது.