உழவர் கடன் அட்டை அல்லது கிசான் கிரெடிட் கார்டு (KCC) கடன் தேவைப்படுகிற ஒரு விவசாயி தகுதிக்கேற்ப கடன் மிக எளிதாக மற்றும் சரியான நேரத்தில் வழங்குவதற்கான ஒரு ஏற்பாடு ஆகும்.

இது 1998 ஆம் ஆண்டில் இந்திய மைய வங்கி மற்றும் ‘விவசாய மற்றும் கிராமப்புற மேம்பாட்டுக்கான தேசிய வங்கி’ (National Bank of Agricultural and Rural Development) ஆகியவற்றால் தொடங்கப்பட்டது.

விவசாயிகள் கடனுக்காக முறைசாரா வங்கிகளைச் சார்த்திருப்பதை குறைப்பதே இதன் நோக்கமாகும்.

முறைசாரா வங்கிகளில் கடன்பெறுவது எளிது; ஆனால் வட்டிவீதம் அதிகம்.

இந்த கடன் அட்டையை பிராந்திய, கிராமப்புற, கூட்டுறவு மற்றும் பொதுத்துறை வங்கிகளில் வழங்கப்படுகிறது.

மேலும் அரசு KCC கடன் அட்டையை மின் தகவல் கடன் அட்டையாக (Smartcard cum Debit Card) ஆக மாற்றி வழங்கி அறிவுறுத்தியுள்ளது.

இந்திய அரசு


மாநிலங்கள்


யூனியன் பிரதேசங்கள்


முக்கிய நகரங்கள்


இந்திய ஆறுகள்