ஒரு காட்டில் மரப்பொந்தில் கழுகு ஒன்று வாழ்ந்து வந்தது. அந்தக் கழுகுக்கு இறைவனிடம் கண்மூடித்தனமான நம்பிக்கை.
அதனால் அது அடிக்கடி ஒரு பாறை மீது அமர்ந்து தியானம் செய்துகொண்டிருக்கும். ஒருநாள் திடீரென்று
“இறைவனுக்கு நாம் தியானம் செய்வது தெரியுமா?” என்று சந்தேகம் வந்தது.
பின்னர் தானாகவே இறைவனுக்கு எல்லாம் தெரியும் என்று சமாதானம் செய்துகொண்டது.
ஒருநாள் அந்தக் கழுகு
“இன்று எனக்கு உணவு கிடைக்குமா?”
இறைவன்தான் எல்லோருக்கும் படியளப்பவன் ஆயிற்றே…என்று யோசித்தது. உணவு கிடைக்குமா என்ற சந்தேகம் வந்ததும் அந்தக் கழுகு அமர்ந்து தியானம் செய்யும் பாறை மீது நின்று,
“இறைவா, இன்று எனக்கு உணவு கிடைக்குமா?” என்று பெரிய குரலெடுத்துக் கூவியது.
உடனே விண்ணிலிருந்து
ஒரு குரல். “உனக்கு இன்று உணவு உண்டு” என்று பதில் கூறியது. மிக்க மகிழ்ச்சியுடன் “இன்று இரை தேடும் வேலை இல்லை,
எப்படியும் உணவு கிடைத்துவிடும்”
என்ற நம்பிக்கையுடன் அந்தக் கழுகு பேசாமல் தியானம் செய்து கொண்டு, அந்தப் பாறை மீது அமர்ந்திருந்தது.
நேரம் செல்லச்செல்ல கழுகுக்குப் பசி வரத் தொடங்கியது. ஆனாலும் கண்களைத் திறக்காமல் இறை தியானத்திலேயே அமர்ந்திருந்தது.
மதியம் ஆயிற்று, மாலையும் போயிற்று, இரவும் வந்துவிட்டது. “நம்மை இறைவனே ஏமாற்றிவிட்டாரே” என்று மனம் வருந்தியபடி பாறையிலிருந்து புறப்படத் தயாரானது கழுகு. அப்போது ஒரு குரல் கேட்டது.
“என்ன குழந்தாய், சாப்பிட்டாயா?”
என்றதைக் கேட்டதும், கழுகுக்கு அழுகை வந்துவிட்டது. “குழந்தாய் சற்று திரும்பிப் பார். உன் பின்னாலேயே உனக்கான உணவு இருக்கிறது.” கழுகு பின்னால் சென்று பார்த்தது. அங்கே ஒரு பெரிய எலி இறந்து கிடந்தது. கழுகு புன்னகை புரிந்தது. இறைவனிடம் , “இதனைக் காலம் தாழ்த்திக் கொடுத்தாயே இறைவா?” இறைவன் பதிலளித்தார்.
“குழந்தாய், உனக்குரிய நேரத்தில் உணவு வந்துவிட்டது. நீதான் அதைத் தேடி எடுக்காமல் காலம் தாழ்த்திவிட்டாய்.
திரும்பிப் பார்க்கும் முயற்சிகூடச் செய்யாமல் உணவு எப்படிக் கிடைக்கும்?” “கடுகளவேனும் முயற்சி
செய்ய வேண்டும். ஒரு வேளை உணவுகூட உழைக்காமல் உண்ணக்கூடாது.
அப்போதுதான் இறைவனின் அருளையும் பெற முடியும்” என்று கழுகுக்கு ஆசி கூறி மறைந்தார் இறைவன்.
அன்று முதல் கழுகு உழைப்பையே தியானமாக எண்ணிக் கடமையைச் செய்யத் தொடங்கியது… தெய்வ நம்பிக்கை எல்லோரிடமும் இருக்க வேண்டும்.
ஆனால் தெய்வத்தை நம்பியே ஒரே இடத்தில் இருந்து விடக்கூடாது.
முயற்சி இல்லாமல் எதுவும் கிடைப்பது இல்லை…. உழைப்பவரை என்றும் வறுமை அண்டுவதில்லை…
முயற்சி திருவினையாக்கும்
சிறுகதைகள்
தன்னிடம் உள்ளதைத்தானே பிறருக்கு தருவான் | சிறுகதை
நீயும் (கொஞ்சமாவது) முயற்சி செய் | சிறுகதை
போக்குவரத்து விதிகளை மீறினால்? சிறுகதை
எந்த வியாதியாக இருந்தாலும் 500 ரூபாயில் குணப்படுத்தப்படும் | சிறுகதை
பொறுமை தான் உறவுகள் நீடிக்கக் காரணம் | சிறுகதை
தொழிலும் விவசாயமும் கைகொடுப்பது போல எதுவும் கைகொடுக்காது
சிந்தனைகள்
எது சின்ன பாவம்? எது பெரிய பாவம்? | சிந்தனைகள்
அனைவரும் பின்பற்ற வேண்டிய நாகரிகங்கள்
சிந்தித்து செயல்பட்டால் வெற்றி உறுதி
இந்த உலகம் ஒரு கண்ணாடி போன்றது
மனிதனின் வெற்றிகள் | சிந்தனைகள்
நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே | சிந்தனைகள்
எதுக்குங்க நம்ம முன்னோர்கள் போராடி சுதந்திரம் வாங்கினாங்க
நகைச்சுவை
கல்யாணம் பண்ணவனுக்கு ஏதுடா நிம்மதி? | நகைச்சுவை
பேருந்தில் இருவருக்கு இடையே சண்டை | நகைச்சுவை
எலிப்பொரியும் எஜமானியும் – நீதி கதை
மன்னரின் பணிவு கண்டு வியந்த அமைச்சர்
நாம் உயபயோகிக்கும் பணம் எங்கெல்லாம் செல்கிறது?
புத்திசாலி அரசனின் சாமர்த்தியம்
சமையலில் செய்ய வேண்டிய மற்றும் செய்யக் கூடாத செயல்கள்
குளிர்பதனப்பெட்டி (ஃபிரிட்ஜ்) பராமரிப்பு பற்றிய சில தகவல்கள்
நமது வாழ்க்கை முறையில் மாற்றம் தேவை
அச்சம் ஒருவனை முட்டாளாக்கிவிடும்
வாழ்க்கையில் துன்பம் துயரம் வந்தால்?
ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதர் கோயிலுக்குப் போய் இருக்கிறீர்களா?
ஆண் உட்பட எல்லா உயிர்களையும் படைத்து விட்ட கடவுள், இறுதியாக பெண்ணை படைக்க ஆரம்பித்தார்
புதுசா எதாவது வாங்கும்போது உள்ள இருக்கற சிலிக்கா ஜெல் பாக்கெட்டை தூக்கி போடாதீங்க
பணம் என்பது வெறும் காகிதம் மட்டுமே
மனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன ?
தீங்கு இல்லாத விவசாயத்தை மேற்கொள்வோம்
உலகில் இலவசம் என்று எதுவும் இல்லை
நமது முன்னேற்றத்தை தடுக்கும் ஏழு தடைகள்
இது ஒரு சுலபமான புதிர் – முயற்சியுங்கள்
எண்ணங்கள் அழகானால், எல்லாம் அழகாகும்
பணம் இருக்கும் போதும், இல்லாத போதும்….?
ஏன் ரயிலில் மட்டும் நீங்கள் விரும்பிய இருக்கையை தேர்வு செய்ய முடியாது என தெரியுமா?
வாழ்க்கையின் பயனுள்ள குறிப்புகள்
நானூம் அந்த சமயத்தில் கண்னை மூடிக்கொன்டிருந்தேன்
பல இந்துக்கள் கூட அறியாத இந்துக் கடவுள்களின் அற்புதங்கள்
கிரைய பத்திரம் பதியும் போது கவணிக்க வேண்டிய 16 விசயங்கள்
நீங்கள் போக்குவரத்து விதிகளை மீறாமல்…
உண்மையான அன்பை பிறருக்குக் கொடு
சொந்த வீடு கட்டுவோர்க்கு 50 டிப்ஸ்
உழைப்பவரை என்றும் வறுமை அண்டுவதில்லை
வாழ்க்கையில் எல்லாரும் ஒன்று தான்
ஆனைக்கு (ஆ+நெய்) ஒரு காலம் வந்தால்… பூனைக்கு (பூ+நெய்) ஒரு காலம் வரும்…இது ஒரு பழமொழி
பெண்களைப் பற்றி மற்ற நாட்டினரின் பொன் மொழிகள்
2020 ஆம் ஆண்டு இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிப்பு