இண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட காலம் சங்ககாலம் எனக் குறிக்கப்பெறுகிறது.
சங்க காலத்தில் தமிழில் தோன்றிய நூல்கள் சங்க இலக்கியங்கள் என்பர்.
அவையாவன, பத்துப்பாட்டு, எட்டுத்தொகை என வகைப்படுத்தப்பட்டுள்ளன.
இவற்றை மேல்கணக்கு நூல்கள் என வழங்குவர்.
பின்வருவன எட்டுத்தொதை நூல்களாகும்,
அகநூல்கள் – 5
நற்றிணை – உப்பூரிகுடி கிழார் உருத்தினசன்மனார்
குறுந்தொகை – பெருந்தேவனார்
ஐங்குறுநூறு – கூடலூர் கிழார்
அகநானூறு – உப்பூரிகுடி கிழார் உருத்தினசன்மனார்
கலித்தொகை – நல்லாதனார்
புறநூல்கள் – 2
பதிற்றுப்பத்து – பெயர் தெரியவில்லை
புறநானூறு – பெயர் தெரியவில்லை
அகப்புற நூல் – 1
பரிபாதல் – பெயர்தெரியவில்லை
நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூ(று)
ஒத்த பதிற்றுப்பத்(து) ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்தும் கலியோ(டு) அகம்புறம் என்(று)
இத்திறத்த எட்டுத் தொகை
என்னும் பழம்பாடல் எட்டுத்தொகை நூல்களைச் சுட்டுகிறது.
இவற்றும் பதிற்றுப்பத்தும், புறநாநூறும் புறப்பொருள் பற்றிய நூல்களாகும்.
பரிபாடல், அகப்புறப்பால்களைக் கொண்ட நூல்.
எஞ்சியவை அகப்பொருள் நூல்களாகும்.
அகப்பொருள் பற்றிய நூலிகளிருந்து பழந்தமிழ் மக்களின் அகவாழ்க்கை முறையினையும், புறப்பொருள் நூல்களிலிருந்து புறவாழ்க்கை முறையினையும் தெளிவாகக் காணலாம்.
மேலும், சங்க காலப் பாடல்கள் பலவும் பழந்தமிழ் இலக்கணமாகிய தொல்காப்பியத்திற்கு இலக்கியங்களாய்த் திகழ்கின்றன.
சங்ககாலப் புலவர்களு உள்ளுறை உவமை, இறைச்சி என்றும் இலக்கிய இத்திகளை மிகச் சிறப்பாகக் கையாண்டுள்ளனர்.
இவை இரண்டையும் குறிப்புப்பொருள் உத்தி என அழைக்கலாம்.
வெளிப்பைடையாகத் தெரியும் பொருளோடு பிறதொரு பொருள் புலப்படுமாறு அமைப்பது உள்ளுறை உத்தியாகும்.
உள்ளுறை உவமையில் உவமைப்பெயர் சொன்ன அளவில் உவமிக்கப்படும் பொருள் புலப்படும்; உவமிக்கப்படும் பொருள் வெளிப்படையாக இராது.
உவமிக்கப்படும் பொருள் தெய்வம் ஒழிந்த கருப்பொருளாக இருத்தல் வேண்டும்.
உள்ளே மறைவாகப் படிந்து கிடக்கும் குறிப்புப் பொருளை உவமை ஆற்றலால் வெளிப்படுத்துவதால் இதனை உள்ளுறை உவமை என்றனர்.
கூறவந்த பொருள் வெறிப்படாது மறைவாக இருக்க அதனை உணர்த்த வேறொறு பொருள் வெறிப்படையாக நிற்குமாறு அமைக்கும் இலக்கிய உத்தியே இறைச்சியாகும்.
இதுவும் தெய்வம் நீங்கலாக உள்ள கருப்பொருளை வருணிக்கும் வருணனையில் குறிப்புப் பொருளாக அமையும் தன்மைக் கொண்டது.