தலைநகரம் – தாலின்
ஆட்சி மொழி – எஸ்தேனியம்
அரசாங்கம் – பாராளுமன்றக் குடியரசு
பரப்பளவு – 45,226 ச.கி.மீ.
நாணயம் – யூரோ
தொலைபேசி அழைப்புக்குறி+372
இணையக்குறி .ee
1917, ஏப்ரல், 12 – அன்று, எஸ்டோனியா என்ற நாடு உருவானது
1918, பிப்ரவரி, 24 – அன்று, எஸ்டோனியா நாடு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
1941, ஜூன், 16 – அன்று, எஸ்டோனியா ஆனது சோவியத் யூனியனுடன் இணைக்கப்பட்டது.
1991, ஆகஸ்ட், 20 – அன்று, எஸ்டோனியா நாடு சோவியத் யூனியனிடமிருந்து விடுதலை பெற்றது.
எஸ்டோனியா குடியரசு என்பது, வட ஐரோப்பாவின் பால்டிக் பகுதியிலுள்ள நாடாகும்.
இதன் எல்லைகளாக வடக்கே பின்லாந்தும், மேற்கே பால்டிக் கடலும், தெற்கே லாட்லியா (343 km), கிழக்கே பெய்பசு ஏரியும் ரஷ்யாவும் (338.6 km) அமைந்துள்ளன.
பால்டிக் கடலுக்கு அப்பால் ஸ்வீடம் மேற்கிலும், பின்லாந்து வடக்கிலும் அமைந்துள்ளன.
எஸ்டோனியா நிலப்பரப்பு ஈரப்பதனுடன் கூடிய கண்டக் காலநிலையைக் கொண்டுள்ளது.
எஸ்டோனியர் ஃபின்னிய மக்கள் கூட்டத்தைச் சேர்ந்தோராவர்.
மேலும் இவர்களது மொழியான எஸ்டோனியா மொழி ஃபினோ-உக்ரிக் மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தது.
இம்மொழி ஃபின்னிய மொழியுடன் நெருங்கிய தொடர்புடையது.
மேலும் ஹங்கேரிய மொழியும் சாமி மொழியும் இம்மொழியுடன் சிறிய தொடர்புடையன.
எஸ்டோனியா ஜனநாயக பாராளுமன்றக் குடியரசாகும். இது பதினைந்து பிரதேசங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
இந்நாட்டில் உள்ள Kihnu என்ற அழகான தீவில் 90% க்கும் மேலாக பெண்கள் மட்டுமே வசிக்கின்றனர். மீன்பிடிக் தொழிலுக்காக வெளியே செல்லும் சூழல் ஏற்பட்டதால், காலப்போக்கில் ஆண்களின் எண்ணிக்கை அந்தத் தீவில் வெகுவாகக் குறைந்தது.