ஐக்கிய அரபு அமீரகம் (United Arab Emirates, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ), சுருக்கமாக அமீரகம் அல்லது எமிரேட்ஸ் என்பது பாரசீக வளைகுடாவில் அராபியத் தீபகற்பத்தின் தென்கிழக்கு முனையில் அமைந்துள்ள ஒரு நாடு ஆகும்.

இதன் எல்லைகளாக கிழக்கே ஓமன், தெற்கே சவூதி அரேபியா ஆகிய நாடுகளும் உள்ளன.

கத்தார், ஈரான் ஆகியவை கடல் எல்லைகளைக் கொண்டுள்ளன.

1971, டிசம்பரில் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்துUAE விடுதலை பெற்று நிறுவப்பட்டடது.

இந்நாடு அபுதாபி (தலைநகரமாக செயல்படுகிறது), அல் ஐன், அஜ்மான், துபாய், புஜைரா, ரஃஸ் அல்-கைமா, சார்ஜா, உம் அல்-குவைன் ஆகிய ஏழு அமீரகங்களைக் கொண்ட ஒரு கூட்டரசாகும்.

தனி முடியாட்சிகளைக் கொண்ட ஒவ்வொரு அமீரகமும் நடுவண் உச்சப் பேரவி ஒன்றின் மூலம் கூட்டாக நிருவகிக்கப்படுகிறது.

ஏழு முடியாட்சிகளில் ஒருவர் அமீரகத்தின் ஜனாதிபதியாக இருப்பார்.

அமீரகத்தின் அதிகாரபூர்வ சமயம் இசுலாம் ஆகும், அதிகாரபூர்வ மொழி அரபி (அரபு) ஆகும்.

ஆனாலும், ஆங்கிலம் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.

அமீரகத்தின் எண்ணெய் வளம் உலகின் நான்காவது-பெரியதாகும்.

அதேவேளையில், இதன் இயற்கை வாயு வளம் உலகின் 17-வது பெரியதாகும்.

அமீரகத்தின் ஆரசுத்தலைவரும் அபுதாபியின் ஆட்சியாளருமான காலஞ்சென்ற சேக் சயத் பின் சுல்தான் அல் நகியான் அமீரகத்தின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு எண்ணெய் வருவாயை சுகாதாரம், கல்வி, உட்கட்டமைப்பு ஆகியவற்றுக்கு செலவிட்டார்.

அமீரகத்தின் பொருளாதாரம் வளைகுடா நாடுகளிலேயே அதிகம் பல்வகைப்படுத்தப்பட்டதாக உள்ளது.

அதிக மக்கள்தொகையைக் கொண்ட துபாய் நகரம் பன்னாட்டு வணிக, மற்றும் போக்குவரத்துக்கு உகந்த இடமாக மாறியுள்ளது.ய

ஆனாலும், நாட்டின் பொருளாதாரம் அதன் எண்ணெய், இயற்கை வாயு வளத்திலேயே பெரிதும் தங்கியுள்ளது.


2017, ஜூன்-ல், சவூதி அரேபியா, பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சில வளைகுடா நாடுகள், கத்தாருடனான அரசனய உறவுகளைத் துண்டித்துக் கொண்டன. கத்தார் தீவிரவாதத்துக்கு ஆதரவும் நிதியும் அளிப்பதாகவும் அண்டை நாடுகளின் உள்நாட்டுச் செயற்பாடுகளில் தலையிடுவதாகவும் அவை குற்றம் சாட்டின. இது கத்தாருக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையே நீண்ட காலமாக நிலவி வந்த பனிப்போர் முற்றுவதைக் குறித்தது.