கனிஷ்கர் (Kanishka), குசானக் குல பேரரசனாக கி. பி 127 முதல் 163 முடிய ஆட்சி செய்த வட இந்திய பேரரசன்.

போர்த் தொழில், அரசியல், ஆன்மீகம் இவரது ஆட்சியில் செழித்தோங்கியது.

இவரது சமயம் பௌத்தம் ஆகும்.

கனிஷ்கர் மத்திய ஆசியாவின் ஆப்கானிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெஸ்கிஸ்தான், தற்கால பாகிஸ்தான் பகுதிகளை வென்று, இந்தியாவின் குஜராத் மற்றும் பஞ்சாப் முதல் கங்கை சமவெளியின் பாடலிபுத்திரம் வரை விரிவு படுத்தினான்.

கனிஷ்கர் ஆட்சியின் முக்கிய தலைநகராக புருஷபுரம் எனும் தற்கால பாகிஸ்தானில் உள்ள பெஷாவர் ஆகும். மதுரா நகரையும் இரண்டாவது தலைநகராகக் கொண்டவர்.

பௌத்த சமயத்தை ஆதரித்துப் பரப்பியவர்

பட்டுப் பாதை மூலம் பௌத்த சமயத்தை காந்தாரம் வழியாக சீனா உள்ளிட்ட முதலிய கிழக்கு ஆசியா நாடுகள் வரை பரப்பியவர்.

இவர் இரண்டாம் அசோகர் என்று அழைக்கப்பட்டார்.

சீனாவின் மீது இரு முறை படையெடுத்தவர் ஆவார்.

கனிஷ்கரின் தூபி

தற்கால பாக்கிஸ்தானின் வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தில் உள்ள பெஷாவர் நகரத்திற்கு அருகில் உள்ள சாஜி கி தேரி எனுமிடத்தில் பௌத்த தூபியை நிறுவினார்.

இதனை தற்போது கனிஷ்கரின் தூபி என்று அழைக்கப்படுகிறது. 13 தளங்களுடன், 400 அடி உயரத்துடன் கட்டப்பட்ட இத்தூபி, தற்போது உருக்குலைந்து காணப்படுகிறது.
சிந்து சமவெளி நாகரிகம் (கி.மு. 3000 – கி.மு. 2500)

மகாவீரர் (கி.மு. 599 – கி.மு. 527)

கௌதம புத்தர் (கி.மு. 563 – கி.மு. 483)
கி.பி. 1201 முதல் கி.பி 1500 ஆண்டு வரை


கி.பி. 1501 முதல் கி.பி 1700 ஆண்டு வரை


கி.பி. 1701 முதல் கி.பி 1800 ஆண்டு வரைகி.பி. 1801 முதல் கி.பி 1850 ஆண்டு வரை


கி.பி. 1851 முதல் கி.பி 1900 ஆண்டு வரை


கி.பி. 1901 முதல் கி.பி 1951 ஆண்டு வரை


கி.பி. 1951 முதல்புதிய கற்காலம்


சங்ககால தமிழ் புலவர்கள்

கம்பர் (கி.பி. 12 ஆம் நூற்றாண்டு)