ஜனவரி, 02 – மத்தியப் பிரதேசத்தில் பேருந்து விபத்தில் 22 பேர் உயிரிழக்கக் காரணமாக இருந்த ஓட்டுநருக்கு 190 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2015ம் ஆண்டு பன்னா என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த பேருந்து வறண்ட ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 22 பேர் கொல்லப்பட்டனர். இதுகுறித்த விசாரணையில் பயணிகள் பேருந்தை மெதுவாக இயக்கக் கூறியும் ஓட்டுநர் ஷம்சுதீன் வேகமாக இயக்கியது தெரியவந்தது. இந்தியாவில் விபத்தில் சிக்கிய ஓட்டுநருக்கு இவ்வளவு ஆண்டுகள் சிறை தண்டனை கிடைப்பது இதுவே முதல் முறை.
ஜனவரி, 06 – சுவிட்சர்லாந்தில் Time bank Scheme அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, இதன்படி, தன்னார்வத்துடம் முதியவர்களுக்கு உதவும் நேரத்தை சமூக பாதுகாப்பு (Social Security Account) என்ற கணக்கில் டெபாசிட் செய்யலாம். வயதானபின் தான் செலவிட்ட நேரத்தை அப்போதைய தன்னார்வலர்களைக் கொண்டு பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஜனவரி, 06 – ப்ளாக்பெரி OS, ப்ளாக்பெரி 10 தளங்களில் செயல்படும் கைப்பேசிகளுக்கான அப்டேட்டுகளை நிறுத்திக்கொள்வதாக அறிவித்துள்ளது. பயனர்கள் தங்கள் தரவுகளை பேக் அப் எடுத்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளது.
ஜனவரி, 07 – நாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதிகளின் வேட்பாளர் செலவினங்களுக்கான நிதித்தொகை அதிகரிப்த்து அறிக்கை வெளியிட்டது இந்திய தேர்தல் ஆணையம், மேலும், நாடாளுமன்ற தொகுதிக்கு ₨75 லட்சம் – ₨90 லட்சமாக தேர்தல் செலவின நிதி ஒதுக்கீடு, சட்டமன்ற தொகுதிக்கு ₨28 லட்சம் – ₨40 லட்சமாக தேர்தல் செலவின நிதி ஒதுக்கீடு
ஜனவரி, 07 – சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இனி தாமதமாக பந்துவீசினால், கடைசி ஓவரில் உள்வட்டத்திற்குள் ஒரு பீல்டரை நிறுத்த வேண்டும் – ஐசிசி அறிவிப்பு, மேலும், டி20 போட்டியின் ஒவ்வொரு இன்னிங்சிலும் 2.30 நிமிடங்கள் இடைவேளை எடுத்துக் கொள்ள அனுமதி – ஐசிசி.
ஜனவரி, 08 – சீன விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள செயற்கை சூரியனை உருவாக்கியுள்ளனர், அது சுமார் 7 கோடி டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை எட்டியது, இது சூரியனை விட 5 மடங்கு அதிக வெப்பமாகும். இந்த செயற்கை சூரியனானது சுமார் 17 நிமிடங்கள் தொடர்ச்சியாக ஒளி வீசி சாதனை படைத்தது.
பிப்ரவரி, 06 – அகமதாபாத்தில் இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஒருநாள் போட்டியில் விளையாடியது. இதன்மூலம், ஆயிரமாவது ஒருநாள் போட்டியில் விளையாடும் முதல் அணி என்ற பெருமையையும் இந்திய அணி பெறுகிறது.
பிப்ரவரி, 11 – HIV Virus கிருமியைக் கண்டறிந்த பிரான்ஸ் விஞ்ஞானியான லுக் மான்டோக்னியர் உடல்நலக் குறைவால் அவருடைய 89 ஆவது வயதில் காலமானார்.
பிப்ரவரி, 12 – அன்று முதல் மேற்கு வங்க ஆளுநர் ஜக்தீப் தன்கர் சட்டப்பேரவையை ஒத்திவைத்தார். அரசியலமைப்பின் 174 ஆவது பிரிவின் உட்பிரிவின் மூலம் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தியதாக ஆளுநர் ட்வீட் செய்தார்.
பிப்ரவரி, 14 – வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது இந்தியாவின் பி.எஸ்.எல்.வி. சி-52 ராக்கெட். இதன் மூலம் ஏவப்பட்ட புவிக்கண்காணிப்பு செயற்கைக்கோள் EOS-04, இன்ஸ்பயர் சாட் 1, ஐஎன்எஸ்-2டிடி ஆகிய 3 செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
பிப்ரவரி, 15 – மாட்டுத்தீவன மோசடி வழக்கில் பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் ரூ.139.35 கோடி மதிப்பிலான மற்றொரு தீவன மோசடி வழக்கில் லாலு பிரசாத் குற்றவாளியாக அறிவிப்பு. இதுவரை 4 தீவன மோசடி வழக்குகளில் லாலு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது. தற்போது, 5ஆவது தீவன பண மோசடி வழக்கிலும், லாலு பிரசாத் குற்றவாளியாக அறிவித்து ரஞ்சியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
பிப்ரவரி, 20 – உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போரை தொடங்கியது.
மார்ச், 18 – ஹாலிவுட்டின் எம்ஜிஎம் ஸ்டூடியோவை 64 ஆயிரத்து 722 கோடி ரூபாய்க்கு விலைக்கு வாங்கியுள்ளதாக அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மார்ச், 22 – உலகின் மிக நீளமான தொங்கு பாலத்தை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார் துருக்கி அதிபர் எர்டோகன், இப்பாலமானது ஆசியாவையும் ஐரோப்பாவையும் இணைக்கிறது.
மார்ச், 22 – தமிழ்நாடு சட்டமன்ற வரலாற்றில் முதன் முறையாக சபாநாயகருக்கு துபாஷாக ராஜலெட்சுமி என்ற பெண் நியமணம்.
ஏப்ரல், 04 – மாணவர்கள் படிப்பை முடித்த 180 நாட்களுக்குள் பட்டம் வழங்கப்பட வேண்டும் என்று பல்கலைக்கழகங்களுக்கு UGC ஆணை பிறப்பித்துள்ளது. 180 நாட்களுக்குள் பட்டம் வழக்காத பல்கலைக்கழகங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று UGC அறிவித்துள்ளது.
ஏப்ரல், 12 – குளித்தலை அரசு கலைக் கல்லூரியின் பெயர் மீண்டும் டாக்டர் கலைஞர் அரசு கல்லூரி என பெயர் மாற்றம் செய்தும், புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக்கல்லூரி மீண்டும் கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக்கல்லூரி எனவும் பெயர் சூட்டி அரசாணை வெளியிடப்பட்டது.
ஏப்ரல், 16 – பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ரஷ்யாவில் நுழைய தடை. *உக்ரைனுக்கு பிரிட்டன் அரசு ஆதரவு கரம் நீட்டிவரும் நிலையில் ரஷ்யா அறிவிப்பு.
ஏப்ரல், 25 – பிரான்ஸ் நாட்டின் அதிபராக இரண்டாவது முறையாக மீண்டும் தேர்வானார் இமானுவேல் மேக்ரான்.
ஏப்ரல், 25 – வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை என்ற பெயர் ‘வேளாண்மை – உழவர் நலத்துறை’ எனப் பெயர் மாற்றம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
ஏப்ரல், 26 – டிவிட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலருக்கு எலான் மஸ்கிடம் விற்க ஒப்புதல் அளித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரபல சமூக வலைதளங்களில் ஒன்றான டிவிட்டர் நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளையும் வாங்குவதற்கு உலக பணக்காரரும் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனருமான எலான் மஸ்க் முன் வந்தார். ஒரு பங்கை சந்தை விலையை விட 15 சதவீதம் அதிகமாக விலை கொடுத்து 54.20 டாலருக்கு வாங்கத் தயார் என்றும் அறிவித்தார். இது குறித்து ஆலோசிக்கப்பட்ட நிலையில், எலான் மஸ்கின் அழைப்பை டிவிட்டர் நிர்வாகம் ஏற்றுக் கொண்டதாக அறிவித்துள்ளது. டிவிட்டரை சுதந்திரமாகப் பயன்படுத்தும் சமூக ஊடகமாக மாற்றுவேன் என்று தெரிவித்துள்ள எலன் மஸ்க், சுதந்திரமான பேச்சுரிமைதான் ஜனநாயகத்தின் அடிப்படை என்று குறிப்பிட்டுள்ளார். மனித குலத்தின் எதிர்காலம் இதில் விவாதிக்கப்படுவதாகவும் எலன்மஸ்க் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார். பங்குச்சந்தையிலிருந்து நீக்கப்பட்டு தனிநபர் நிறுவனமாக மாறுகிறது.
ஏப்ரல், 30 – பிரபல மொபைல் நிறுவனமான ‘ஸியோமி இந்தியா’ நிறுவனத்தின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.5,551.27 கோடி பணமானது, அந்நிய செலவாணி மேலாண்மைச் சட்டம் 1999 இன் விதிகளின் கீழ் இந்திய அமலாக்கத் துறையால் பறிமுதல் செய்யப்பட்டது.
ஏப்ரல், 30 – பிரேசில் நாட்டின் என்காண்ட்டோ நகரத்தில் உலகிலேயே மிக உயரமான சுமார் 141 அடி உயர இயேசு சிலையானது அமைக்கப்பட்து. இச்சிலையானது மலை மீது அமைக்கப்பட்டுள்ளது, மேலும் பாதுகாவலர் ஏசு என்று பெயரிடப்பட்டுள்ளது.
மே, 5 – தமிழக அரசுப் பேருந்துகளில் இனி 5 வயதுக்குட்ட குழந்தைகளுக்கு கட்டணமில்லை என தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு. இதுவரை 3 வயது குழந்தைகள் கட்டணமில்லாமல் பயணிக்கலாம் என்று இருந்தது.
மே, 06 – 13 வயதிற்கும் குறைவானவர்கள் இன்ஸ்டாகிராம் பயன்படுத்தத் தடை. பயனர்கள் வயதை உறுதிப்டதுத்துவதை கட்டாயமாக்கப்போவதாக இன்ஸ்டாகிராம் அறிவிப்பு.
மே, 10 – சிறந்த ஆவண புகைப்படம் 2022 க்கான புலிட்சர் விருதை பெற்றார் காஷ்மீரைச் சேர்ந்த புகைப்பட பத்திரிக்கையாளர் – சனா இர்ஷத் மட்டோ.
ஜூன், 18 – இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும், தேர்தல் சட்டத்தில் பாலின சமத்துவத்தை பேணும் வகையில் மனைவி என்ற வார்த்தை வாழ்க்கைத்துணை எனக் குறிப்பிட்டு திருத்தம் செய்யப்படும் என்றும் தொலைத்தூர பகுதிகள், வெளிநாடுகளில் பணியாற்றும் ராணுவ வீரர்களின் வாழ்க்கைத்துணை வாக்களிக்க வாய்ப்பு ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன், 21 – எதிர்கட்சிகளின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா தேர்வு.
ஜூன், 22 – ப்ளின்கிட் என்ற மளிகை பொருட்கள் டெலிவரி செய்யும் நிறுவனத்தை ரூ.4,477 கோடிக்கு வாங்கியது உணவுப் விநியோகம் செய்யும் நிறுவனமாக சொமாட்டோ.
ஜூன், 24 – கரீபியன் தீவுகளில் உள்ள சதுப்பு நிலங்களில் இருந்து மனிதனின் கண் இமை போல் இருக்கும் உலகின் மிகப்பெரிய பாக்டீரியாவை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். 0.9 செ.மீ நீளமுள்ள இந்த பாக்டீரியாவை நுண்ணோக்கியின் உதவி இல்லாமல் மனிதனின் கண்களால் பார்க்க முடியும் எனவும் தகவல்.
ஜூன், 24 – புதிய மின்னணு குடும்ப அட்டைகளை பயனாளிகளின் இருப்பிடத்திற்கு அஞ்சலில் அனுப்பி வைக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
ஜூன், 25 – இதுவரை கண்டுபிடிக்கப்பட்டதிலேயே அதிக ஆழத்தில் (6,895 மீட்டர்) உள்ள விபத்துக் கப்பல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. Sammy-B எனப்படும் ஜப்பானுக்குச் சொந்தமான இந்த போர்க் கப்பல் பசிபிக் கடற்பகுதியில் பிலிப்பைன்ஸ் தீவிற்கு அருகே 1944 ஆம் ஆண்டு அமெரிக்கக் கடற்படையால் வீழ்த்தப்பட்டது.
ஜூன், 30 – தூத்துக்குடி: ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில் நடைபெற்று வரும் அகழாய்வு பணியில் 3,200 ஆண்டுகள் பழமையான தங்கத்தால் ஆன காதணி கண்டெடுப்பு
ஜூலை, 01 – ஒரு முறை பயன்படுத்தும் நெகிழி பொருட்கள் விற்பனை, உற்பத்தி மற்றும் விநியோகத்திற்கு இந்தியா முழுவதும் இன்று முதல் தடை விதிக்கப்படுகிறது.
ஜூலை, 07 – இந்தியாவில் BA.2.75 என்ற புதிய வகை ஒமைக்ரான் கொரோனா கண்டுபிடிப்பு – உலக சுகாதார நிறுவனம்.
ஜூலை, 09 – பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம் நடத்தினர்.
ஜூலை, 09 – இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கிரிக்கெட் வரலாற்றில் 13 டி20 போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றிபெற்ற முதல் கேப்டன் என்ற பெருமையைப் பெற்றார்.
ஜூலை, 10 – மகாராஷ்டிரா சட்டப்பேரவை சபாநாயகராக ராகுல் நர்வேகர் (45) தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம், இந்தியாவின் அரசமைப்பு சார்ந்த ஒரு பதவியை வகிக்கும் இளம் வயது சபாநாயகர் ஆனார்.
ஜூலை, 12 – டெல்லியில் புதிய நாடாளுமற்றக் கட்டிடத்தின் மேற்கூரையில் வைக்கப்பட்ட அரசின் தேசியச் சின்னம் திறக்கப்பட்டது.
ஜூலை, 12 – இந்தியாவிலேயே மிசோரமில் 71% பெண்கள் மக்கள் பிரதிநிதிகர், நிறுவனங்களின் மேலாளர்கள் என உயர் பதவிகளில் இருப்பதாக தொழிலாளர் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை, 11,12 – லண்டன் விம்பில்டன் டென்னிஸ் ஒற்றையர் மகளிர் பிரிவில் கஜகஸ்தானின் எலினா ரைபகினா முதன் முறையாக சாம்பியன் பட்டம் வென்றார். ஆடவர் ஒற்றையர் பிரிவில் செர்பியாவின் நேவாக் ஜேகோவிச் பட்டம் வென்றார். இது அவருடைய 21 ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும்.
ஜூலை, 13 – பாலியல் குற்றவாளிகளுக்கு ரசாயன ஊசி மூலம் ஆண்மை நீக்கம் செய்ய அனுமதிக்கும் மசோதாவை தாய்லாந்து செனட் நிறைவேற்றியது. இந்த மசோதா 145 செனட்டர்களின் ஆதரவைப் பெற்றது. 2013 மற்றும் 2020 க்கு இடையில் தாய்லாந்து சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்ட 16, ஆயிரம் பாலியல் குற்றவாளிகளில் 4,848 பேர் மீண்டும் பாலியல் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். குறுகிய சிறை காலத்திற்கு பிறகு மீண்டும் குற்றமிழைக்கும் நிலையில் இந்த மசோதாவின் கீழ் அவர்கள் ரசாயன ஊசிகளைப் பெறலாம். தற்போது, போலந்து, தென் கொரியா, ரஷ்யா, எஸ்டோனியா மற்றும் அமெரிக்காவின் சில மாநிலங்களில் மட்டுமே கெமிக்கல் காஸ்ட்ரேஷன் பயன்பாடு சட்டப்பூர்வமாக உள்ளது.
ஜூலை, 13 – இலங்கை அதிபர் கோட்டபய ராஜபக்ச ஒட்டுமொத்த இலங்கை மக்களின் எதிர்ப்பு காரணமாக பதவி விலகினார்.
ஜூலை, 13 – பிரபஞ்சத்தின் ஆரம்ப காலத்தைக் காட்டும் வகையில் ஜேம்ஸ் வெப் விண்வெளித் தொலைநோக்கி எடுத்த ஒளிப்படங்களை அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா வெளியிட்டது.
ஜூலை, 14 – உலகில் 10 பேருக்கு மட்டுமே இருக்கும் மிகவும் அரிதான EMM Negative ரத்த வகையானது, இந்தியாவில் முதன் முறையாக குஜராத்தைச் சேர்ந்த 65 வயது முதியவருக்கு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வகை இரத்தத்தைக் கொண்டவர்களால் இரத்தத்தைப் பெறவோ, கொடுக்கவோ முடியாது.
ஜூலை, 15 – தென்கொரியாவில் நடைபெற்ற ISSF உலகக் கோப்பைத் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியா 3 தங்கம், 4 வெள்ளி, 1 வெண்களம் என 8 பதக்கங்களைப் பெற்று பட்டியலில் முதலிடம் பிடித்தது.
ஜூலை, 15 – இலங்கையில் மக்கள் போராட்டத்தையடுத்து அதிபர் கோத்தபய ராஜபக்ச பதவி விலகியதை அடுத்து இடைக்கால அதிபராக ரணில் விக்கிரசிங்கே பொறுப்பேற்றார்.
ஜூலை, 25 – இந்திய நாட்டின் 15-வது குடியரசுத் தலைவராக திரவுபதி முர்மு பதவியேற்றார்.
ஆகஸ்ட், 02 – ஶ்ரீபெரும்புத்தூருக்கு அருகிலுள்ள பரந்தூரில் இரண்டாவது விமான நிலையம் அமைக்க முடிவு.
ஆகஸ்ட், 18 – தமிழறிஞரும் இலக்கிய பேச்சாளருமான ‘தமிழ்க் கடல்’ நெல்லைக் கண்ணன் அவர்கள் உடல்நலக் குறைவால் காலமானார்.
ஆகஸ்ட், 31 – அனைத்து பல்கலைக்கழகங்களிலும் இளங்கலை பட்டப்படிப்புகளில் இரண்டாம் ஆண்டில் தமிழ் பாடம் கட்டாயம் இடம் பெற வேண்டும். இரண்டாம் ஆண்டு பருவ தேர்வுகளில் கட்டாயம் தமிழ் பாடத் தேர்வு இடம்பெற வேண்டும் என்றும் உயர் கல்வித் துறை உத்தரவு.
செப்டம்பர், 02 – கேரளாவின் கொச்சியில் புதிய விமானம் தாங்கி போர்க்கப்பலான ஐ.என்.எஸ் விக்ராந்தை நாட்டிற்கு அற்பனித்தார் இந்திய பிரதமர் மோடி. முற்றிலும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட இக்கப்பலானது, இதுவரை தயாரிக்கப்பட்ட கப்பல்களைவிட சுமார் 7 மடங்கு பெரியதாகும்.
செப்டம்பர், 05 – இங்கிலாந்து நாட்டின் புதிய பிரதமராக லிஸ் டிரஸ் தேர்வு. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக்கை எதிர்த்துப் போட்டியிட்ட லிஸ் டிரஸ் 81,326 வாக்குகள் பெற்று வெற்றி.
செப்டம்பர், 05 – விமான நிலையங்களில் 3,049 சி.ஐ.எஸ்.எப். பாதுகாப்பு வீரர்களின் பணியிடங்கள் ரத்து செய்யப்படுகிறது. தனியார் செக்யூரிட்டிகளை நியமிக்க மத்திய அரசு முடிவு.
செப்டம்பர், 05 – கொலைக் குற்றத்திற்காக தவறாக குற்றம் சாட்டப்பட்டு 70 ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டிஷ் சிறையில் தூக்கிலிடப்பட்ட நபரின் குடும்பத்தினரிடம், நீதி தவறியதற்காக இங்கிலாந்து காவல்துறை மன்னிப்புக் கோரியுள்ளது. 1952-ஆம் ஆண்டில் கார்டிஃப் நகரத்தில் ஆடை வியாபாரியான Lily Volpert என்ற பெண்ணை கொலை செய்ததற்காக, மஹ்மூத் மட்டான் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டார். மட்டான் குற்றம் புரியவில்லை என்று நிரூபிக்க அவருடைய மனைவியும், மகன்களும் கடந்த 46 ஆண்டுகளாக போராடி வந்துள்ளனர். ஆனால், அவர்கள் யாரும் இப்போது உயிருடன் இல்லை. நீதி தாமதமாகவே கிடைத்துள்ளது என்று மட்டானின் பேத்தி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
செப்டம்பர், 16 – நாடு முழுவதும் அனைத்துப் பள்ளிகளுக்கும் ஒரே மாதிரியான சீருடையை அமல்படுத்தக் கோரிய மனுவினை உச்சநீதிமன்ற வரம்பிற்கு உட்பட்டது இல்லை எனக்கூறி தள்ளுபடி செய்தது.
செப்டம்பர், 17 – பிரபல ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத் தயாரிப்பான பச்சிளம் குழந்தைகளுக்கான பவுடர் உரிமத்தை மகாராஷ்ட்ரா உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகம் ரத்து செய்துள்ளது. ஐ.எஸ் 5339-2004 தர நிர்ணயத்திற்கு உட்பட்டு ஜான்சன் பவுடர் இல்லை; குழந்தைகளுக்கான PH பரிசோதனையிலும் போதிய தரமில்லை என தகவல்.
செப்டம்பர், 18 – லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் மண்டபத்தில் பிரிட்டன் ராணி எலிசபெத் உடலுக்கு இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
செப்டம்பர், 21 – ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிவேகமாக 3000 ரன்களை கடந்த இந்திய வீராங்கனை என்ற பெருமையை ஸ்மிருதி மந்தனா பெற்றார்.
செப்டம்பர், 21 – சென்னையைச் சேர்ந்த எழுத்தாளரும், பெண்ணுரிமை செயற்பாட்டாளருமான மீனா கந்தசாமிக்கு ஜெர்மன் நாட்டின் “PEN” அமைப்பின் உயரிய விருதான ‘ஹெர்மன் கெஸ்டன்’ விருது அறிவிக்கப்பட்டது. அடக்குமுறைக்கு ஆளாகும் எழுத்தாளர்கள், பத்திரிக்கையாளர்களின் உரிமைக்காகப் போராடும் நபர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
செப்டம்பர், 21 – சார்ட்ஸ் ((Shorts)) வீடியோக்கள் மூலம் கிடைக்கும் விளம்பர வருவாயில் 45 சதவீதத்தை, அந்த வீடியோக்களை உருவாக்குவோருக்கு 2023 ஆம் ஆண்டு முதல் வழங்க போவதாக யூ டியூப் (YouTube) நிறுவனம் அறிவித்துள்ளது.
அக்டோபர், 08 – தெலங்கானா மாநிலத்தின் கமாரெட்டி என்ற மாவட்டத்தில் உள்ள ‘ரெகாட்லாப்பள்ளி‘ என்ற கிராமத்தில், சுமார் 180 குடும்பங்களைக் கொண்ட 930 பேர் வசித்து வருகிறார்கள். கடந்த 40 வருடங்களாக எந்த குற்றமும் இந்த கிராமத்தில் நிகழவில்லை, மேலும் இந்த கிராமத்தை ‘வழக்குகள் இல்லாத கிராமம்’ என அறிவித்து நீதிபதி சான்றிதழ் வழங்கினார்.
அக்டோபர், 11 – இந்தியாவில் 17 வயதிற்கு உட்பட்ட மகளிருக்கான உலகக் கோப்பைக் கால்பந்து போட்டி தொடங்கியது. ஒடிசாவில் முதல் போட்டி நடைபெறுகிறது, மேலும், கோவா, மகாராஷ்டிரா உள்ளிட் 3 நகரங்களில் அக்டோபர், 30 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
அக்டோபர், 11 – தென்னாப்ரிக்காவுக்கு அணிக்கு எதிரான 3 போட்டிகள் கெண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை இந்திய அணி வென்றது.
அக்டோபர், 12 – மெட்டா நிறுவனத்தை பயங்கரவாத அமைப்பில் சேர்த்தது ரஷ்ய அமைப்பு.
அக்டோபர், 12 – கோவா ஆருகே தொழில்நுட்ப கோளாறு காரணமாக மிக் 29கே ராணுவ விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. கீழே விழுவதற்கு முன் வெளியேறிய விமானி லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.
அக்டோபர், 13 – டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா அணி விளையாடும் போட்டிகளை ஐநாக்ஸ் திரையரங்குகளில் நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு நாடு முழுவதும் 25-க்கும் மேற்பட்ட நகரங்களில் உள்ள ஐநாக்ஸ் மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில், டி20 உலகக்கோப்பை நேரலையாக திரையிடப்படுகிறது; இதற்காக ஐசிசி – ஐநாக்ஸ் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
அக்டோபர், 18 – ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிக்க முடியாது என ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.
அக்டோபர், 18 – அன்று, உத்ரகாண்ட் மாநிலம், கேதர்நாத் அருகே நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர்.
அக்டோபர், 19 – அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக மல்லிகார்ஜூன கார்கே தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அக்டோபர், 19 – வணிக நடத்தை விதிகளை மீறியதற்காக மேக் மை டிரிப் (Make My Trip), கோஐபிபோ (Goibbo) மற்றும் ஓயோ (OYO) ஆகிய மூன்று நிறுவனங்களுக்கு மொத்தம் 392 கோடி ரூபாய் அபராதம் விதித்தது இந்திய போட்டி ஆணையம்.
அக்டோபர், 19 – அனுமதி பெற்ற பார்கள் அல்லாத ஹோட்டல்களில் ஹூக்காவை (புகைக்குழல்) தடைசெய்யும் சட்டத் திருத்தம் தமிழக சட்டப்பேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது. தடையை மீறி ஹோட்டல்களில் ஹூக்கா வைத்திருப்பவர்களுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும் 50,000 ரூபாய் அபராதம் விதிக்க சட்டத்திருத்தம் வழிவகை செய்கிறது.
அக்டோபர், 20 – வாகன ஓட்டுநர் போதையில் இருந்து, உடன் செல்வோர் போதையில் இல்லாவிட்டாலும் தண்டனை; மோட்டார் வாகன சட்டம் 185, 188 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படும் என போக்குவரத்துக் காவல்துறை அறிவித்துள்ளது.
அக்டோபர், 20 – ஆண்ட்ராய்டு மொபைல் சாதனத்தின் தேடல், விளம்பரம் உட்பட பல சந்தைகளில் வர்த்தக ஆதிக்கத்தை செலுத்தும் வகையில் தவறாக பயன்படுத்தியதற்காக கூகுளுக்கு 1337.76 கோடி ரூபாய் அபராதத்தை இந்திய போட்டி ஆணையம் விதித்துள்ளது.
அக்டோபர், 24 – பிலிப்ஸ் நிறுவனத்தில் செயல்திறன் மற்றும் விற்பனையில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் 4,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு எடுத்துள்ளது.
அக்டோபர், 24 – பிலிப்பைன்ஸின் செபு நகரில் தரையிரங்கிய கொரிய நாட்டு விமானம் ஓடுபாதையை விட்டு விலகி புல்தரையில் இறங்கி விபத்துக்குள்ளானது. விமானத்தின் முன்பகுதி சேதமடைந்த நிலையிலும் பயணிகள் பத்திரமாக வெளியேற்றம்.
அக்டோபர், 24 – அன்று 9 பல்கலைக்கழக துணைவேந்தர்கள் காலை 11.30 மணிக்கு பதவி விலக வேண்டும் என கேரள ஆளுநர் ஆரிப் முகமதுகான் உத்தரவு பிறப்பித்தார்.
அக்டோபர், 25 – பிளேஸ்டோர் கெள்கைகள் தொடர்பாக மேலாதிக்க நிலையை தவறாக பயன்படுத்தியதாக கூகுளுக்கு ரூ.936.55 கோடி அபராதத்தினை இந்திய போட்டி ஆணையம் விதித்தது.
அக்டோபர், 26 – அரசு ஊழியர்களுக்கான வருங்கால வைப்புநிதி வட்டி விகிதத்தை 7.1% ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியீடு.
அக்டோபர், 26 – Dry Dove ஷாம்புவில் அதிகளவு உள்ள பென்சீன் என்ற ரசாயனம், ரத்தப் புற்றுநோய் ஆபத்தை ஏற்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அமெரிக்காவில் டவ் ஷாம்பை திரும்ப பெற யுனிலிவர் நிறுவனம் முடிவு. அக்டோபருக்கு முன்பு தயாரித்த ஷாம்புகள் மட்டும் திரும்ப பெற முடிவு.
அக்டோபர், 27 – இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கும், வீராங்கனைகளுக்கும் ஒரே மாதிரியான ஊதியம் வழங்கப்படும் என பி.சி.சி.ஐ. அறிவிப்பு. வீரர், வீராங்கனைகளுக்கு டெஸ்டுக்கு ரூ.15 லட்சம், ஒரு நாள் போட்டிக்கு ரூ.6 லட்சம், டி20 போட்டிக்கு ரூ.3 லட்சம் ஊதியமாக வழங்கப்படும் என அறிவிப்பு.
அக்டோபர், 28 – ஆன்லைன் வழியில் PhD படித்தால் செல்லாது என அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அறிவித்துள்ளது.
அக்டோபர், 28 – அதிகாரபூர்வமாக டிவிட்டரின் அதிபரானால் எலான் மஸ்க். சமூக வலைதளமான டிவிட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கினார் உலகின் நம்பர் 1 பணக்காரரான டெஸ்லா அதிபர் எலான் மஸ்க். நீதிமன்றம் விதித்த காலக்கெடு முடிவதற்கு ஒரு நாளைக்கு முன்பே ரூ.3.62 லட்சம் கோடிக்கு டிவிட்டரை கையகப்படுத்தினார் எலான் மஸ்க்.
அக்டோபர், 28 – இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் ஒரே மாதிரி போலீஸ் சீருடை- பிரதமர் மோடி வேண்டுகோள்.
அக்டோபர், 29 – மயிலாடுதுறை மாவட்டம், மணக்குடியில் ரூ.24 கோடியில் புதிய பேருந்து நிலையம் அமைக்க மயிலாடுதுறை நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நவம்பர், 09 – பேஸ்புக் ஊழியர்கள் 11,000 பேர் பணிநீக்கம் செய்து மெட்டா நிறுவனம் அறிவிப்பு.
டிசம்பர், 23 – சிக்கிம் மாநிலத்தில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் விபத்தில் சிக்கியதில் 16 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு. வளைவில் திரும்ப முயன்ற போது ராணுவ வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்தது. விபத்தில் படுகாயமடைந்த 4 வீரர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி.
டிசம்பர், 26 – ரூ.3,250 கோடி ஐசிஐசிஐ வங்கி கடன் மோசடி வழக்கில் வீடியோகான் நிறுவன தலைவர் வேணுகோபால் தூத்தை கைது செய்தது சி.பி.ஐ.
டிசம்பர், 27 – மத்திய அரசின் ஆதார் எண் போன்று தமிழ்நாடு அரசு சார்பில் Makkal ID என்ற எண் வழங்க திட்டம்.
2022 குளிர்காள ஒலிம்பிக் போட்டிகள் பெய்ஜிங்கில் நடத்தப்பட்டது.
குரங்கு அம்மை நோயானது சர்வேதேச நெருக்கடி நோய் தொற்றாக உலக சுகாதார அமைப்பால் அறிவிக்கப்பட்டது.
உலகக்கோப்பை கால்பந்துப் போட்டி கத்தாரில் நடைபெற்றது. இப்போட்டியை நடத்தும் முதல் அரபு நாடு ஆகும்.
அரேபியா ஆசியா ஆன்மீகம் இலக்கணம் உடல்நலம் உணவு உலோகம் ஐசக் நியூட்டன் ஒலிம்பிக் கடன் மோசடி கால்பந்து கிரிக்கெட் சட்டம் சாலைவிதி சிந்தனைகள் சிறுகதை சென்னை செயற்கைக்கோள் ஜெருசலேம் டாலர் டென்னிஸ் தகவல் தொழில்நுட்பம் தமிழர்கள் தமிழ் திருத்தலம் தென் அமெரிக்கா தேர்தல் நகைச்சுவை நாடுகள் நிலா பழமொழி புத்தகம் புத்தர் புற்றுநோய் பெண்கள் பொது அறிவு போர் மருத்துவம் மாநிலம் முக்கிய தினங்கள் வங்கித்தாள் வழக்கு வாக்கெடுப்பு வானியல் விபத்து