1875 ஆம் ஆண்டு, அக்டோபர், 13 ஆம் நாள், சர்தால் வல்லபாய் பட்டேல் அவர்கள், குஜராத்தில் பிறந்தார்.

1960, மே, 01 – அன்று, குஜராத் மாநிலம் உருவாக்கப்பட்டது.

1986, இந்தியாவின் முதல் காற்றாலை மின் உற்பத்தி இந்தியாவின் ஓகா (குஜராத்), இரத்தினகிரி (மகாராஷ்டிரா) மற்றும், தூத்துக்குடி (தமிழ்நாடு) ஆகிய இடங்களில் தொடங்கியது.

2019, மார்ச் – ஒரு தேசம் ஒரு அட்டை முதன் முதலில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

2022, ஜூலை, 14 – உலகில் 10 பேருக்கு மட்டுமே இருக்கும் மிகவும் அரிதான EMM Negative ரத்த வகையானது, இந்தியாவில் முதன் முறையாக குஜராத்தைச் சேர்ந்த 65 வயது முதியவருக்கு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வகை இரத்தத்தைக் கொண்டவர்களால் இரத்தத்தைப் பெறவோ, கொடுக்கவோ முடியாது.

இந்தியாவின் மேற்குப்பகுதியில் அமைந்துள்ள ஒரு மாநிலமாகும்.

இம்மாநிலத்தில் தற்போது 33 மாவட்டங்கள் உள்ளது.

இது இந்தியாவில் மகாராஷ்டிராவிற்கு அடுத்து நன்கு தொழில் வளர்ச்சி அடைந்த மாநிலமாகும்.

இதன் வடமேற்கில் பாகிஸ்தானும், வடக்கில் ராஜஸ்தானும் , மேற்கில் மத்திய பிரதேசம் மற்றும் தெற்கில் மகாராஷ்டிர எல்லைகளாக அமைந்துள்ளன.

காந்தி நகர் இதன் தலைநகராகும்.

இது மாநிலத்தின் முன்னாள் தலைநகரும் பொருளாதாரத் தலைநகருமான அகமதாபாத்தின் அருகில் அமைந்துள்ளது.

மகாத்மா காந்தி, சர்தார் வல்லப்பாய் படேல், கே. எம். முன்ஷி, மொரார்ஜி தேசாய், யு. என். தேபர் மற்றும் நரேந்திர மோடி ஆகியோர் இம்மாநிலத்தில் பிறந்தவர்களாவர்.

அரபிக்கடலின், மேற்கு கடற்கரையில் கண்டிலா துறைமுகம் அமைந்துள்ளது.