குவைத் (Kuwait), அதிகாரபூர்வமாக குவைத் நாடு (State of Kuwait) என்பது தென்மேற்கு ஆசியாவில் அமைந்துள்ள ஓர் அரபு நாடாகும்.

பாரசீக வளைகுடாவின் வடமுனையில் அமைந்துள்ள குவைத் நாட்டின் தெற்கே சவூதி அரேபியாவும், வடக்கிலும் மேற்கிலும் ஈராக்கும் எல்லை நாடுகளாக உள்ளன.

2013 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி, இங்குள்ள மக்கள்தொகை 4 மில்லியன்கள் ஆகும்.

18ம், 19ம் நூற்றாண்டுகளில், குவைத் செல்வம் கொழிக்கும் ஒரு வணிக நாடாக இருந்தது.

பொருளாதாரத் தடைகள் அந்நாட்டின் மீது விதிக்கப்பட்டதை அடுத்து குவைத்தின் பொருளாதாரம் வீழ்ச்சி கண்டது.

முதல் உலகப் போர்க் காலத்தில், உதுமானியப் பேரரசை குவைத் மன்னர் ஆதரித்ததை அடுத்து பிரித்தானியப் பேரரசு பொருளாதாரத் தடை விதித்தது.

குவைத் முதன் முதன்முறையாக 8 பெண்களை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமித்துள்ளது.

1919 – 20 இல் இடம்பெற்ற குவைத்-நஜித் போரை அடுத்து, சவூதி அரேபியா 1923 முதல் 1937 வரை பொருளாதாரத் தடை விதித்திருந்தது.

1990 இல், குவைத் மீது ஈராக் படையெடுத்து தன்னுடன் இணைத்து வைத்திருந்தது. அமெரிக்கா தலைமையிலான இராணுவத் தலையீட்டை அடுத்து குவைத் விடுவிக்கப்பட்டது.