கொரோனா வைரஸ் (Corona viruse) பாலூட்டிகளிலும் பறவைகளிலும் நோய்களை ஏற்படுத்தும் ஒரு தீநுண்மி ஆகும்.

இவை பசுக்கள், பன்றிகளில் வயிற்றுப்போக்கையும், கோழிகளில் மேல் சுவாச நோயையும் உண்டாக்கும்.

இத்தீநுண்மிகள் மனிதர்களுக்கு சுவாச நோய்த்தொற்றுகளை ஏற்படுத்துகின்றன. இத்தொற்றுகள் பெரும்பாலும் மிதமானவையாக இருந்தாலும் அரிதான சந்தர்ப்பங்களில் ஆபத்தானவையாக உள்ளன.

இந்நோய்க்கான தடுப்பு அல்லது சிகிச்சைக்காக அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகள் அல்லது தீநுண்மி தடுப்பு மருந்துகள் எதுவும் இல்லை.

2019 – ஆம் ஆண்டு இறுதியில், சீனாவிலிருந்து கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது.

2020, மார்ச், 22 – கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கில் இந்தியாவில் முதன்முதலாக நாடு முழுவதுமு் 14 மணிநேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட தினம்

2021, நவம்பர், 19 – கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு மட்டுமே பொது இடங்களில் அனுமதி என்று தமிழக பொது சுகாதார சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது.

2021, டிசம்பர், 06 – அன்று, கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 50 ஆயிரம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

2022, ஜூலை, 07 – இந்தியாவில் BA.2.75 என்ற புதிய வகை ஒமைக்ரான் கொரோனா கண்டுபிடிப்பு – உலக சுகாதார நிறுவனம்.