1690 ஆம் ஆண்டு ஜாப் சார்னாக் என்ற ஆங்கிலேய வணிகக் குழுவின் முகவர் சுதநூதி, கோவிந்தபூர். காளிகட்டம் என்ற மூன்று கிராமங்களை விலைக்கு வாங்கினார். இவை பின்னர் கல்கத்தா நகரமாக வளர்ச்சியடைந்தது. அங்கு அமைக்கப்பட்ட கோட்டைக்கு ஆங்கில அரசர் மூன்றாம் வில்லியத்தின் நினைவாக வில்லியம் கோட்டை என்று ஜாப் சார்னாக் பெயரிட்டார்.
1795 – ஆம் ஆண்டு, இந்தியாவின் முதல் வானிலை ஆய்வு மையம் கொல்கத்தாவில் நிறுவப்பட்டது.
1854 ஆம் ஆண்டு, இந்தியாவின் முதல் சணல் ஆலை, ஆங்கிலேயரான ஜார்ஜ் ஆக்லாண்டு என்பவரால் கொல்கத்தாவிற்கு அருகில் உள்ள ரிஷ்ரா என்னுமிடத்தில் தொடங்கப்பட்டது. தேசிய சணல் வாரியத்தில் தலைமையிடம் கொல்கத்தாவில் அமைந்துள்ளது. இந்தியா சணல் உற்பத்தியில் முதலிடத்தில் அமைந்துள்ளது.
1858 ஆம் ஆண்டு, கானிங் பிரபு ஆளுநராக இருந்தபொழுது, பிரித்தானிய இந்தியாவின் தலைநகரம் கல்கத்தாவிலிருந்து தில்லிக்கு மாற்றப்பட்டது.
1863, ஜனவரி, 12 – அன்று இளைஞர்களுக்கு எல்லாம் முன்னோடியாக திகழும் சுவாமி விவேகானந்தர் (Swami Vivekananda) அவர்கள் கொல்கத்தாவில் பிறந்தார்.
1867 ஆம் ஆண்டு, முதன் முதலல் இந்தியாவில் ராயல் பெங்கால் காகித தொழிற்சாலை கொல்கத்தாவிற்கு அருகில் உள்ள பாலிஞ்ச் என்னும் இடத்தில் நிறுவப்பட்டது.
1911, 27, டிசம்பர் அன்று, கொல்கத்தாவில், ஜன கன மன பாடல் முதல் முறை பாடப்பட்டது.
1942, டிசம்பர், 20 – இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பான் நாட்டின் விமானப்படையானது கொல்கத்தா மீது குண்டு வீசியது.
1950 அக்டோபர் 7 ஆம் தேதி, பிறர் அன்பின் பணியாளர் சபையை மறைமாவட்ட அளவில் துவக்க தெரெசாவுக்கு கத்தோலிக்க திருச்சபையில் அனுமதி அளிக்கப்பட்டது. கொல்கத்தாவில் 13 உறுப்பினர்களையே கொண்ட சிறியதொரு அமைப்பாக ஆரம்பிக்கப்பட்ட கத்தோலிக்க திருச்சபை , இன்று 6000க்கும் மேலான அருட்சகோதிரிகளால் நடத்தப்படும் அனாதை இல்லங்களையும், எய்ட்ஸ் நல்வாழ்வு மையங்களையும், தொண்டு மையங்களையும் தன்னகத்தே கொண்டு அகதிகள், குருடர், ஊனமுற்றோர், முதியோர், மது அடிமைகள், ஏழை எளியோர், வீடற்றோர், வெள்ளத்தினாலும், தொற்றுநோயாலும் பஞ்சத்தாலும் பாதிக்கப்பட்டவர்கள் போன்றவர்களைக் கவனிக்கும் இடமாகவும் இருக்கிறது.
1952 ஆம் ஆண்டில் கல்கத்தா நகரில் ஒதுக்கப்பட்ட இடத்தில் அன்னை தெரேசா இறப்பின் வாயிலிலிருப்போருக்கு, முதல் இல்லத்தை ஏற்படுத்தினார்.
கல்கத்தாவில் வில்லியம் கோட்டை கல்லூரியை வெல்லெஸ்லி நிறுவினார். இந்திய-பிரித்தானியாவுக்குமிடையே இருந்த வர்த்த பிணக்குகளை தீர்த்து வைத்தார்.
இந்தியா நிலக்கரி நிறுவனம் (Coal India Limited), மேற்கு வங்காளம், கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்டு இந்திய அரசுக் கட்டுப்பாட்டில் இயங்கும் ஒரு பொதுத்துறை நிறுவனம் ஆகும்.
கொல்கத்தாவில் உள்ள ஆச்சார்ய ஜெதீஸ் சந்திரபோஸ் இந்திய தாவரவியல் தோட்டம் ஆரம்பத்தில் ராயல் தாவரவியல் தோட்டம் என்று அழைக்கப்பட்டது. இந்தத் தோட்டம் பெரிய அளவிளான அரிதான தாவரங்களைக் கொண்டுள்ளது. மேலும், 12,000 மாதிரித் தாவலங்ளில் மொத்த சேகரிப்பினை கொண்டுள்ளது. இத்தோட்டமானது 109 ஹெக்டோர் பரப்பளவு கொண்டது.
இந்தியாவின் முதல் உயர் நீதிமன்றம் – கொல்கத்தா நீதிமன்றம்
இந்தியாவின் முதல் டயர் பூங்கா கொல்கத்தாவில் அமைந்துள்ளது.
கொல்கத்தா இருட்டறை துயரச் சம்பவ நிகழ்ச்சிக்கு காரணமானவர் – சிராஜ்-உத்-தௌலா
இந்தியாவின் முதல் சுரங்க இரயில் பாதை கொல்கத்தாவில் அமைக்கப்பட்டது.
அரேபியா ஆசியா ஆன்மீகம் இலக்கணம் உடல்நலம் உணவு உலோகம் ஐசக் நியூட்டன் ஒலிம்பிக் கடன் மோசடி கால்பந்து கிரிக்கெட் சட்டம் சாலைவிதி சிந்தனைகள் சிறுகதை சென்னை செயற்கைக்கோள் ஜெருசலேம் டாலர் டென்னிஸ் தகவல் தொழில்நுட்பம் தமிழர்கள் தமிழ் திருத்தலம் தென் அமெரிக்கா தேர்தல் நகைச்சுவை நாடுகள் நிலா பழமொழி புத்தகம் புத்தர் புற்றுநோய் பெண்கள் பொது அறிவு போர் மருத்துவம் மாநிலம் முக்கிய தினங்கள் வங்கித்தாள் வழக்கு வாக்கெடுப்பு வானியல் விபத்து