கோயம்புத்தூர் (Coimbatore) தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில், சென்னைக்கு அடுத்த இரண்டாவது பெரிய நகரம்.

இதே பெயரைக் கொண்ட மாவட்டத்தின் தலைமையிடமான இது, தொழில் வளர்ச்சியிலும், கல்வி நிறுவனங்களின் வளர்ச்சியிலும், மேம்பட்ட நிலையில் உள்ள நகரமாகும்.

இது சுருக்கமாக கோவை (Covai) என்று அழைக்கப்படுகிறது.

தொழில் முனைவோர் கூடுதலாக உள்ள நெசவு மற்றும் பொறியியல் தொழிலகங்களின் மையமாக விளங்குகிறது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், அவிநாசிலிங்கம் நிகர்நிலைப் பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக் கழகங்களும் கோவை மாநகரை மையமாகக் கொண்டு இயங்குகின்றன.

தொன்மையான கொங்கு நாடு பகுதியைச் சேர்ந்த இந்நகரம், இங்குள்ள ஆலைகளின் எண்ணிக்கையால், தென்னிந்திய மான்செஸ்டர் என்றும் அழைக்கப்படுகிறது.

இந்நகரத்திலும், புறநகர்ப்பகுதிகளும் 2.1 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். தென்னிந்தியாவின் சென்னை, ஐதராபாத் , பெங்களூருக்கு அடுத்த நான்காவது மிகப்பெரிய மாநகராட்சி ஆகும்.

தமிழ்நாட்டின் இரு வானூர்தி நிலையங்கள் கொண்ட மாநகரமாகவும் கோயம்புத்தூர் திகழ்கிறது.

இந்த மாநகராட்சி சென்னையைப் போலவே பல நகராட்சிகளை உள்ளடக்கி உள்ளது.

காந்திபுரம், உக்கடம், சிங்காநல்லூர், பீளமேடு, போத்தனூர் உட்பட பல நகராட்சிகளை உள்ளடக்கி பெருநகர மாநகராட்சியாகத் திகழ்கிறது.

கோயம்புத்தூர் ஆட்சித் தலைவராக இருந்த ஜான் சல்லிவன் என்பவர் ஊதகமண்டலத்தைக் கண்டறிந்தார். இவர் கோவையிலிருந்து நீலகிரிக்கு முதன்முதலாக பாதை அமைத்தார்.

1789 நீலகிரி பிரிட்டிஷ் அரசிடம் கொடுக்கப்பட்டவுடன், அது கோயம்புத்தூர் மாவட்டத்தின் ஒரு பகுதியாக மாறியது.

1868, ஆகஸ்ட் மாதம் – நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டது. ஜேம்ஸ் வில்கின்சன் பிரிக்ஸ் நீலகிரியின்  ஆணையராக நிர்வாகத்தை எடுத்துக் கொண்டார்.

1882 – கோயம்புத்தூர் மாவட்டத்திலிரிந்து பிரிக்கப்பட்டு நீலகிரி மாவட்டம் உருவாக்கப்ப்ட்டது.

1910 – ஆம் ஆண்டு, கோயம்புத்தூர் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்த கரூர் வட்டம் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இணைக்கப்பட்டது.

1981 – ஆம் ஆண்டு, கோவை மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டது.

1989 – கோயம்புத்தூர் மாவட்டத்தல், இந்திரா காந்தி தேசிய பூங்கா ஆரம்பிக்கப்பட்டது..



அணைகள்


ஆறுகள்