2008, அக்டோபர், 22 ஆம் நாள், சந்திரனைப் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்வதற்கா இந்திய அரசு சந்திரயான்-1 என்ற விண்கலத்தை ஆந்திர மாநிலம், ஶ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து PSLV ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது.
2008, நவம்பர், 8 ஆம் நாள், இவ்விண்கலமானது சந்திரனின் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.
இது சந்திரனிலிருந்து 100 கி.மீ தொலைவில் உள்ள சுற்றுவட்டப்பாதையில் சுற்றிவந்து, சந்திரனின் வேதியியல், கணிமவியல் மற்றும் புவியியல் தொடர்பான விவரங்களை சேகரித்தது.
இந்திட்டமானது, இந்திய விண்வெளி திட்டங்களுக்கு ஊக்கம் அளிக்கவும், சந்திரனை ஆராய்வதற்கு உரிய தொழில்நுட்பத்தைச் சுயமாக உருவாக்கவும் உதவியது.
சத்திரயான்-1 திட்டமானது 312 நாட்கள் செயல்பட்டு, நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளில் 95 சதவீதத்தை முடித்தது, திட்டத்தின் முக்கிய நோக்கங்களை நிறைவு செய்தபின், 2009 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், 28 ஆம் நாள், பூமியில் உள்ள கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பை இழந்தது.

சூரியக் குடும்பம்
குறுங்கோள்கள்
செவ்வாய் கிரகம் பூமிக்கு மிக அருகில் வரும் அரிய வானியல் நிகழ்வு
நமது சூரிய குடும்பத்தில் ஒளி ஆண்டு வேகத்தில் நாம் பயணித்தால்?