இந்திய திருநாட்டின் தேசிய சின்னங்கள் என்ன என்ன என்று தெரிந்து கொள்வோமே?

2021 ஆம் ஆண்டு, ஜ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தலைமை பொறுப்பை ஏற்கவுள்ள நாடு இந்தியா ஆகும்.

1800 ஆம் ஆண்டு, இந்தியாவில் முதல் மிருகக்காட்சி சாலை பரச்சாபூரில் நிறுவப்பட்டது.

1872 ஆம் ஆண்டு, இந்தியாவின் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆங்கிலேயரால் நடத்தப்பட்டது.

1873 ஆம் ஆண்டு, இந்திய யானைகள் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்டது.

1881 ஆம் ஆண்டு, இந்தியாவில் முழுமையான மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

1927, ஜனவரி, 18 – அன்று இந்திய நாடாளுமன்றம் அப்போதைய கவர்னர் ஜெனரல் இர்வின் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

1927 ஆம் ஆண்டு, இந்திய காடுகள் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்டது.

1948, ஜூன் – இந்திய மாநிலங்கள் மறுசீரமைப்பிற்காக S.K.தார் கமிட்டி அமைக்கப்பட்டது.

1931, பிப்ரவரி, 10 – புதுடெல்லி இந்தியாவின் தலைநகராக்கப்பட்டது.

1947, ஆகஸ்ட், 15 – அன்று சுதந்திரம் அடைந்தது

1947, செப்டம்பர், 01 – இந்திய நிலையான நேரம் (ஐ.எஸ்.டி – கிரீன்விச் நேரத்தில் இருந்து 5.30 மணிநேரம் அதிகம்) அமலானது.

1950, ஜனவரி, 26 – அன்று, இந்தியா அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தது. இதன் மூலம் இந்தியா குடியரசு நாடானது.

1953, டிசம்பர் – இந்தியாவில் மொழிவாரி மாநிலம் அமைக்க பசல் அலி கமிட்டி நியமிக்கப்பட்டது.

1954, ஜனவரி, 02 – அன்று, பாரத ரத்னா, தேசிய திரைப்பட விருது, பத்ம ஶ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷன் விருதுகள் இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது.

1955 ஆம் ஆண்டு, இந்திய பாராளுமன்றத்தில் ‘இந்திய குடியுரிமைச் சட்டம்’ நிறைவேற்றப்பட்டது.

1955 ஆம் ஆண்டு, இந்தியன் இம்பீரியல் வங்கி (Imperial Bank of India) மாற்றப்பட்டு இந்திய ஸ்டேட் (State Bank of India) வங்கி உருவாக்கப்பட்டது.

1958 ஆம் ஆண்டு, இந்திய அரசின் கிராமி விருதுகள் அறிமுகப்படுத்தப்பட்டது.

1961 ஆம் ஆண்டு, இந்திய அரசின் அர்சுனா விருது அறிமுகப்படுத்தப்பட்டது.

1971, ஜனவரி, 25 – அன்று இந்தியாவின் 25 ஆவது மாநிலமாக இமாச்சலப் பிரதேசம் உதயமானது.

1984 ஆம் ஆண்டு, இந்திய விண்வெளி வீரரான ராகேஷ் சர்மா விண்வெளிக்கு சென்றார். மேலும் இவர் விண்வெளிக்கு சென்ற முதல் இந்தியர் ஆவார்.

1984 – ஆம் ஆண்டு, சுவாமி விவேகானந்தர் பிறந்த தினமான ஜனவரி, 12 – ஆம் தேதியை இந்திய அரசு, தேசிய இளைஞர்கள் தினமாக அறிவித்தது.

1991 ஆம் ஆண்டு, டெல்லி இந்தியாவின் தேசிய தலைநகரமாக அறிவிக்கப்பட்டது.

1992 ஆம் ஆண்டு, இந்திய அரசின் கேல் ரத்னா விருது அறிமுகப்படுத்தப்பட்டது.

1993 ஆம் ஆண்டு, செப்டம்பர், 20 – துருவ செயற்கை கோள் ஏவுகணையை இந்தியா ஏவியது.

1998 ஆம் அண்டு, இந்தியாவில் மின்னணு வாக்குப்பதிவு அறிமுகப்படுத்தப்பட்டது.


இந்தியாவில் தற்போது ஆறு மாநிலங்களில் மட்டுமே சட்டமன்ற மேலவை உள்ளது.

இந்தியாவில் சராசரி மக்கள் அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 384 நபர்களாகும்.

சுதந்திர இந்தியாவின் முதல் துணைப் பிரதம அமைச்சராகவும் உள்துறை அமைச்சராகவும் பணியாற்றிய சர்தார் வல்லப்பாய் படேல் சுதந்திர இந்தியாவை ஒருங்கிணைத்த சிற்பியாவார். ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட சமஸ்தானங்களையும் ஒருங்கிணைத்து இன்றைய ஒருங்கிணைந்த இந்தியாவை உருவாக்கினார்.

சுதந்தர இந்தியாவின் முதல் பாதுகாப்புத் துறை அமைச்சர் பல்தேவ் சிங் ஆவார்.

இவர் இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்பட்டார்.

தென்னிந்தியாவின் மிக நீளமான ஆறு கோதாவரி ஆகும்.

இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராக பதவியேற்றவர் அம்பேத்கர் ஆவார். இந்திய அரசியலமைப்புச் சாசனத்தை வரைவதற்கான குழுவின் தலைவராகவும் பொறுப்பேற்றவர் ஆவார்.

இந்தியாவில் பாண்டிச்சேரி, காரைக்கால், மாஹி, ஏனாம் போன்றவை பிரெஞ்சு குடியேற்றங்களாகும்.

இந்தியாவில் கிழக்கிந்திய கம்பெனியிடமிருந்து இங்கிலாந்து அரசிக்கு அதிகாரம் 1858 ஆம் ஆண்டு மாற்றப்பட்டது.

இந்திய யூனியனில் கடைசியாக சேர்க்கப்பட்ட ராஜ்ஜியம் சிக்கிம் ஆகும்.

2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுக்கின்படி இந்தியாவின் மக்கள் தொகை 121 கோடி.

இந்தியாவில் மொத்தம் 29 மாநிலங்கள் மற்றம் 7 யூனியன் பிரதேசங்கள் உள்ளது.

தென்னிந்தியாவின் மிக உயரமான சிகரம் ஆனைமுடி ஆகும்.

சணல் உற்பத்தியில் இந்தியா முதலிடத்திலுள்ளது.

வாட்ஸ்ஆப் போன்று இந்தியாவில் தொடங்கப்பட்ட புதிய உடனடி குறுஞ்செய்தி அனுப்புதளம் – சந்தேஸ் (Sandes)

இந்தியாவில் வழங்கப்படும் மிக உயரிய இலக்கிய விருது ஞானபீட விருது ஆகும்.


உலகின் சர்க்கரை உற்பத்தியில் இந்தியா நான்காவது இடத்திலுள்ளது.

மாங்கனீசு உற்பத்தியில் இந்தியா ஐந்தாவது இடத்தில் உள்ளது.

இந்தியாவின் எரிசக்தி தேவேயில் 67% நிலக்கரி மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது.

இந்தியாவின் மொத்த மின் உற்பத்தியில் 66% அனல் மின் நிலையங்களில் இருந்து பெறப்படுகிறது.

இந்தியாவின் முக்கிய எரிசக்தி வளம் நிலக்கரி ஆகும்.

இந்தியாவில் முதல் நீர்மின் நிலையம் டார்ஜிலிங்கில் நிறுவப்பட்டத்.

இந்திய தேர்தல் ஆணையம் புது தில்லியில் அமைந்துள்ளது.

ராஜஸ்தானில் உள்ள சாம்பார் ஏரி இந்தியாவின் மிகப்பெரிய உவர் ஏரியாகும்.

இந்தியாவில் ஆங்கிலேயர் கட்டிய முதலாவது கோட்டை புனித ஜார்ஜ் கோட்டை ஆகும்.

இந்தியாவின் மிக உயரமான சிகரம் காட்வின் ஆஸ்டின் ஆகும்.

இந்தியா பால் உற்பத்தியில் உலகில் முதலிடம் வகிக்கிறது.

இந்தியாவுடம் மிக நீண்ட எல்லையை பகிர்ந்துகொள்ளும் நாடு வங்காளதேசம் ஆகும்.

இந்திய சினிமாவின் முதல் பேசும் படம் ஆலம் ஆரா ஆகும்.

உலகிலேயே அதிக வாக்காளர்களைக் கொண்ட நாடு இந்தியா ஆகும்

இந்தியாவில் மொத்திம் 690 இரயில் நிலையங்கள் உள்ளன

பீல்டு மார்ஷல் (Field Marshal) – இது ஐந்து நட்சத்திர அந்தஸ்து கொண்ட பொது அதிகாரி பதவி. இது இந்திய இராணுவத்தின் உயர்ந்த பதவியாகும். சாம் மானக்‌ஷா என்பவர் இந்தியாவின் முதல் பீல்டு மார்ஷல் ஆவார். கே.எம்.கரியப்பா இரண்டாவது பீல்டு மார்ஷல் ஆவார். இந்திய விமானப்படையில் ஐந்து நட்சத்திர அந்தஸ்து கொண்ட மார்ஷல் பதவிக்கு உயர்வு பெற்ற முதல் மற்றும் ஒரே அதிகாரி அர்ஜுன் சிங் ஆவார்.


காலநிலை

இந்தியாவின் காலநிலை அயனமண்டல பருவக்காற்று காலநிலை என அழைக்கப்படுகிறது.


தேசிய கீதம் – ஜன கன மன

இயற்றியவர்இரவீந்திரநாத் தாகூர்
இயற்றப்பட்ட மொழிவங்காளம்
தேசிய கீதம் பாடப்படும் நேரம்52 விநாடிகள்
ஏற்றுக்கொள்ளப்பட்டது24, ஜனவரி, 1950
முதலில் பாடப்பட்டதுகொல்கத்தா, 27, டிசம்பர், 1911

இந்திய தேசிய கொடி – மூவர்ண கொடி

காவிவீரம், தியாகம்
வெள்ளைநேர்மை, அகிம்சை, தூய்மை
பச்சைசெழுமை, வளம்
கருநீல சக்கரம்அறவழி, அமைதி

இந்திய தேசிய கொடி

தேசிய கொடியின் அளவு3:2
தேசிய கொடியை வடிவமைத்தவர்பிங்காலி வெங்கையா – ஆந்திர மாநிலம்
முதல் தேசிய கொடி நெய்த இடம்கொடியாத்தம் – தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தில் உள்ளது.

தேசிய பாடல் – வந்தே மாதரம்

இயற்றியவர்பக்கிம் சந்திர சட்டர்ஜி (இவர் இயற்றிய ஆனந்தமடம் என்னும் புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டது)
ஏற்றுக்கொள்ளப்பட்டது1950 ஆம் ஆண்டு, ஜனவரி, 24
முதன் முதலில் பாடப்பட்டது1896 ஆம் ஆண்டு, இரவீந்திரநாத் தாகூர் அவர்களால் பாடப்பட்டது.

இயற்கை தேசிய சின்னங்கள்

சின்னம்அங்கீகரிக்கப்பட்ட ஆண்டுசிறப்புகள்
இராஜ நாகம்உலகின் நீண்ட விஷம் நிறைந்த பாம்பு. இவை இந்தியாவின் சமவெளி மற்றும் மழைக்காடுகளில் வாழ்கிறது.
மாம்பழம்1950வைட்டமின் ஏ, சி, டி – யை கொண்டது. பெரும்பாலும் சமவெளிகளில் விளைவிக்கப்படுகிறது.
ஆலமரம்1950இது பெருமையின் சின்னமாகும். மருத்துவ குணம் கொண்டது.
தாமரை1950சேற்று நீரில் வளர்ந்தாலும் மிள அழகான மலர்கள் வளர்கின்றன.
மயில்1963இந்தியாவை தாயகமாக கொண்டது. மிக ஆழகிய தோகைகளைக் கொண்டது.
புலி1973பூனை இனத்தில் மிகப்பெரியது. இந்தியாவில் உலகில் உள்ளி மொத்த புலிகளில் 70% உள்ளது.
கங்கை ஆறு2008இது வற்றாத ஆறு. வரலாற்றில் புகழ் பெற்ற நகரங்கள் இதன் கரையில் அமைந்துள்ளது.
யானை2010ஆசியாவை தாயகமாக கொண்டது. தான் வாழும் காட்டுப் பிரதேசங்களை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
ஆற்று ஓங்கில்2010தான் வாழும் ஆற்றின் சூழல் அமைவின் நிலையை உணர்த்தும் கருவியாக செயல்படுகிறது. அருகி வரும் உயிரிமாக உள்ளது.
லாக்டோ பேசில்லஸ்2012இது ஒரு தோழமை பாக்டீரியா. இது லேக்டிக் மற்றும் பாக்டீரியா குழுவில் முக்கிய பங்கு வகிக்கிறது.
தேனீர்2013பெரும்பான்மையான இந்திய மக்களால் அருந்தப்படுகிறது. ஆங்கிலேயர்களால் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.

வறுமை ஒழிப்புத் திட்டங்கள்

தொடங்கப்பட்ட ஆண்டுதிட்டங்கள்
197520 அம்ச திட்டம்
1976ஒருங்கினைந்த ஊரக வளர்ச்சித் திட்டம் (IRDP)
1977வேலைக்கு உணவு திட்டம் (FWP)
1979ஊரக இளைஞர்களுக்கான சுய வேலை வாய்ப்புப் பயிற்சி (TRYSEM)
1980தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டம் (NREP)
1983ஊரக நிலமற்றோர் வேலைவாய்ப்பு உறுதி திட்டம் (RLEGP)
1989ஜவஹர் வேலைவாய்ப்புத் திட்டம் (JRY)
2006மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் (MGNREGS)

இந்தியாவிலுள்ள உயிரினங்களின் வகைகள்

பாலூட்டிகள்372 வகை
பறவையினங்கள்1330 வகை
ஊர்வன399 வகை
பூச்சியினங்கள்60000 வகை
நீர் மற்றும் நீல வாழ்விகள் 181 வகை
மீன் இனங்கள்1693

அண்டை நாடுகளுடனான இந்தியாவின் சர்வதேச எல்லைகளின் பெயர்கள்

வாகா எல்லை (Wagah Border)பஞ்சாப்இந்தியா – பாகிஸ்தான்
மோஹி (Moren)மணிப்பூர்இந்தியா – மியான்மர்
நாது லா பாஸ் (Nathu La Pass)சிக்கிம்இந்தியா – சீனா
லாங்வாலா (Longewala)ராஜஸ்தான்இந்தியா – பாகிஸ்தான்
டாவ்கி – டம்பில் (Dawki)மேகாலயாஇந்தியா – பங்களாதேஷ்
ரான் ஆப் கட்ச் (Rann of Kutch)குஜராத்இந்தியா – பாகிஸ்தான்
ஜெய்கான் (Jaigaon)மேற்கு வங்காளம்இந்தியா – பூடான்
பான்காங்க லேக் (Pangong Lake)லடாக்இந்தியா – நேபாளம்
சுனாலி எல்லை (Sunauli Border)உத்திர பிரதேசம்இந்தியா – நேபாளம்
தனுஷ்கோடி (Danush Kodi)தமிழ்நாடுஇந்தியா – இலங்கை

இந்தியாவில் உள்ள உயிரின பாதுகாப்பு திட்டங்கள்

வ எண்உயிரின பாதுகாப்பு திட்டங்கள்வருடம்
1புலி காப்பகம்1973
2முதலைகள் வளர்ப்பு இயக்கம்1975
3காண்டாமிருக பாதுகாப்புத் திட்டம்1987
4பனிச் சிறுத்தைப் பாதுகாப்புத் திட்டம்
5யானைகள் பாதுகாப்புத் திட்டம்1988
6கடல் ஆமைகள் பாதுகாப்புத் திட்டம்1999

இந்திய இரும்பு தொழிற்சாலைகள்

வ எண்தொழிலகங்களின் பெயர்கள்இடம் மற்றும் மாநிலம்நிறுவப்பட்ட ஆண்டுஉற்பத்தி பொருட்கள்
1டாடா இரும்பு எஃகு நிறுவனம் (TISCO)ஜப்ஷெட்பூர் – ஜார்க்கண்ட்1911தேனிரும்பு
2இந்திய இரும்பு எஃகு நிறுவனம் (IISCO)பர்ன்பூர், ஹிராப்பூர், குல்டி – மேற்கு வங்காளம்1972தேனிரும்பு, கட்சா எஃகு
3விஸ்வேஷ்வரியா இரும்பு எஃகு நிறுவனம் (VISL)பத்ராவதி, கர்நாடகா1923கலப்பு தேனிரும் மற்றும் கடல்பாசி எஃகு
4இந்துஸ்தான் எஃகு நிறுவனம் (ரஷ்ய தொழில்நுட்ப உதவியுடன்) (HSL)பிலாய் – சத்தீஸ்கர்1957ரயில்வே மற்றும் கப்பல்கட்டும் உரகரணங்கள்
5இந்துஸ்தான் எஃகு நிறுவனம் (ஜெர்மனியின் தொழில்நுட்ப உதவியுடன்) (HSL)ரூர்கேலஅ – ஒடிசா1965வெப்ப மற்றும் குளிர்ந்த உருளை தகடுகள் மின்முலாம் பூசப்பட்ட தகடுகள் மற்றும் மின்சாதன தகடுகள்.
6இந்துஸ்தான் எஃகு நிறுவனம் (இங்கிலாந்து தொழில்நுட்ப உதவியுடன்) (HSL)துர்காபூர், மேற்கு வங்காகம்1956உலோகக் கலவை, கட்டுமானப் பொருட்கள், இரயில்வே உபகரணங்கள்
7இந்துஸ்தான் எஃகு நிறுவனம் (ரஷ்ய தொழில்நுட்ப உதவியுடன்) (HSL)பொகாரோ, ஜார்க்கண்ட்1972இரும்பு கழிவு மற்றும் இரும்பு உலோகம்.
8சேலம் எஃகு ஆலை சேலம், தமிழ்நாடு1982துருபிடிக்காத இரும்பு.
9விஜயநகர் எஃகு ஆலைடோர்நகல், கர்நாடகா1994நீண்ட மற்றும் பட்டை எஃகுகள்.
10விசாகப்பட்டினம் எஃகு ஆலைவிசாகப்பட்டினம், ஆந்திரபிரதேசம்1981வெப்ப உலோகம்.